கொலஸ்ட்ரால் கெட்டதுன்கு யாராவது சொன்னா நம்பாதீங்க... தினமும் இவ்வளவு சாப்பிடலாம்...

Posted By: Sam Asir
Subscribe to Boldsky

கொலஸ்ட்ரால் என்றதுமே கொழுப்புச் சத்து மிக்க உணவுகள்தாம் நம் நினைவுக்கு வரும். உடலின் அனைத்து செல்களிலும் காணப்படும் மெழுகு போன்ற பொருள்தான் கொலஸ்ட்ரால். நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட அல்லது தீய கொலஸ்ட்ரால் என்று இது இருவகைப்படும்.

health tips

மருத்துவ உலகில் குறையடர்த்தி லிப்போ புரதம் அல்லது எல்டிஎல் என்று கூறப்படும் கெட்ட கொலஸ்ட்ரால், இருதய நோய் உண்டாகும் வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. மிகையடர்த்தி லிப்போ புரதம் அல்லது ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால், இரத்த தமனிகள் மற்றும் கல்லீரலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குகிறது. ஹெச்டிஎல், ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பு நல்லது

கொழுப்பு நல்லது

இருதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகிய ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் இடையேயான விகிதத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என இந்திய இருதய கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இந்தியரான நமக்கு ஹெச்டிஎல் அளவு 50 முதல் 60 வரை இருக்க வேண்டும். கொலஸ்ட்ராலை பற்றி எனக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கிறீர்களா? இந்தக் கட்டுரை உங்கள் நம்பிக்கையை தகர்த்துப் போடும். இதோ உங்களை ஆச்சரியப்படுத்தும் பத்து உண்மைகள்...

கொலஸ்ட்ரால் குறைவு

கொலஸ்ட்ரால் குறைவு

கொலஸ்ட்ரால் குறைவது ஆரோக்கியமல்ல. கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது உடலுக்கு கெடுதி என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதும் ஆரோக்கிய கேடு தான். சராசரியாக பெரியவர்களுக்கு கொலஸ்ட்ரால் 200 mg/dL என்ற அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதேவேளையில், கொலஸ்ட்ரால் 160 mg/dL என்ற அளவை விட குறைவது புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தொடர்ந்த உடற்பயிற்சி, கொலஸ்ட்ராலின் அளவை இயற்கையாக குறைக்க உதவும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். உடல் இயக்கம், நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது. தினமும் அரைமணி நேரம் எளிதான உடற்பயிற்சிகளை செய்வது அல்லது வாரக்காலத்திற்கு மிதமான பயிற்சிகளை செய்வது ஆகியவை நல்ல கொலஸ்ட்ராலின் அளவு உயர உதவுகின்றன.

எச்சரிக்கை

எச்சரிக்கை

கொலஸ்ட்ரால், விலங்கினங்களின் கல்லீரலில் உருவாக்கப்படுகிறது. ஆகவே, இறைச்சி, முட்டை, பால் போன்ற விலங்கு சார்ந்த உணவுப் பொருட்களில்தான் கொலஸ்ட்ரால் காணப்படும். பொறிக்கப்பட்ட உணவுகளில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தக்கூடிய டிரான்ஸ் கொழுப்பு உள்ளது. டிரான்ஸ் கொழுப்பு மற்றும் ஸச்சுரேட்டட் ஃபேட் எனப்படும் பூரித கொழுப்பு ஆகியவை கெட்ட கொழுப்பு உருவாக காரணமாகின்றன.

விறைப்புத்தன்மைக்கு ஆபத்து

விறைப்புத்தன்மைக்கு ஆபத்து

அதிகரிக்கும் கொலஸ்ட்ரால், ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடை கொண்டு வரும். அல்ஸைமர் எனப்படும் ஞாபகமறதி - நினைவிழப்பு குறைபாடு மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கும் உயர் கொலஸ்ட்ரால் காரணமாகும். கொலஸ்ட்ரால் அதிகமான உணவுகளை உண்பது, கல்லீரல் புற்றுநோய் உருவாக வழி செய்யக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

கொலஸ்ட்ரால் தேவையா?

முட்டை

முட்டை

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 300 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் மட்டுமே சாப்பிடலாம் என்று அமெரிக்க இதய கூட்டமைப்பு அறிவுறுத்துகிறது. அளவில் பெரிய முட்டை ஒன்றில் 213 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் இருக்கும். காலை உணவில் அவித்த அல்லது போச்ட் எக் எனப்படும் ஆஃப் பாயில்ட் என நாம் கூறும் முட்டையை உண்ணலாம்.

மரபுரீதியான குறைபாடு

மரபுரீதியான குறைபாடு

75% கொலஸ்ட்ரால் பிரச்னை, மரபு மரபாக வருபவை என்றும் 25% மட்டுமே உணவு பழக்கத்தினால் வருகிறது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மீன், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற நல்ல கொலஸ்ட்ரால் உணவுகளை சாப்பிடுவது, அதிகப்படியாக கொலஸ்ட்ரால் சேர்வதை தடுக்கும்.

குழந்தைகள்

குழந்தைகள்

இளம் வயதிலேயே கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்னை குழந்தைகளுக்கு வரக்கூடும். உடல் பருமன் மற்றும் மாரடைப்பு பிரச்னை கொண்ட பரம்பரை, மரபு ரீதியான உயர் கொலஸ்ட்ரால் அளவு இவற்றினால் குழந்தைகளுக்கு கொலஸ்ட்ரால் பாதிப்பு வரலாம்.

வியர்வை நல்லது

வியர்வை நல்லது

மிதமான உடற்பயிற்சி, நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். மிதவேகமாக ஓடும் ஜாகிங் மற்றும் ஓடுதல் ஆகிய பயிற்சிகள் சிறந்தவை. எந்த அளவு வியர்வை அதிகமாகிறதோ அந்த அளவுக்கு கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

கொலஸ்ட்ரால் விஷயத்தில் பெண்கள்

கொலஸ்ட்ரால் விஷயத்தில் பெண்கள்

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவே இருக்கும். ஆனால், மகப்பேறு சமயங்களில், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்படியாய், பெண்களின் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். ஆனால், மெனோபாஸ் என்னும் மாதவிடாய் நிற்கும் வயதில், நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் அவசியம்

கொலஸ்ட்ரால் அவசியம்

மனித உடலின் ஹார்மோன்கள், செல்கள் சீராக இயங்க கொலஸ்ட்ரால் அவசியம். உடல் செல்களை கட்டமைக்கும் செங்கல் போன்றது கொலஸ்ட்ரால். கல்லீரல், கொழுப்பினை உருவாக்கத் தேவையான அமிலங்களை கொலஸ்ட்ராலின் துணை கொண்டே உருவாக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Surprising Facts About Cholesterol

Since having high cholesterol doubles your risk for heart disease, it’s important to take steps for prevention and treatment.
Story first published: Thursday, March 29, 2018, 12:45 [IST]