உடற்பயிற்சி செய்யும் போது ஏன் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது நல்லது என்று சொல்கிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மனித உயிர்கள் எப்படி உலகில் தோன்றியதோ, அந்த மனித உயிர்களைக் காக்கத் தான் பழங்களும், காய்கறிகளும் தோற்றுவிக்கப்பட்டன. அப்படி மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஓர் அற்புத பழம் தான் எலுமிச்சை. இந்த எலுமிச்சையின் மருத்துவ குணங்களைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை.

Why To Have Lime Water With Workouts

எலுமிச்சை ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகள் கிட்டும். குறிப்பாக உடலைத் தாக்கும் நோய்களின் அளவு குறையும். அதிலும் இந்த எலுமிச்சை ஜூஸை உடற்பயிற்சி செய்யும் போது குடித்து வந்தால் மிகவும் நல்லது.

இங்கு எலுமிச்சை ஜூஸை எப்போது குடிப்பது சிறந்தது, அப்படி குடித்தால் என்ன நன்மைகள் கிட்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

எலுமிச்சை ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள டாக்ஸினை வெளியேற்றும் பண்பால், செரிமான மண்டலம் மற்றும் இரத்தம் சுத்தம் செய்யப்படும்.

நன்மை #2

நன்மை #2

எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, உடலுறுப்புக்களின் செயல்பாடுகளை வலுவாக்கும்.

நன்மை #3

நன்மை #3

எலுமிச்சை ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், புற்றுநோய், இரத்த அழுத்தம், சிறுநீரக பாதை பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நன்மை #4

நன்மை #4

எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ஆனால் நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வருபவராயின், எலுமிச்சை ஜூஸை வேறு விதமாகத் தான் பருக வேண்டும்.

எப்போது குடிக்க வேண்டும்?

எப்போது குடிக்க வேண்டும்?

ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, திசுக்கள், தசைகள் மற்றும் உறுப்புக்கள், அத்தியாவசிய நீர்மத்தை உடலில் இருந்து வியர்வை வாயிலாக வெளியேற்றும். ஆகவே உடற்பயிற்சி செய்து முடித்த பின் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதால், உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்கள் கிடைத்து, உடல் புத்துணர்ச்சி அடையும்.

எலுமிச்சை எப்படி உதவுகிறது?

எலுமிச்சை எப்படி உதவுகிறது?

எலுமிச்சை உடலை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, பலவாறும் உதவுகிறது. உடற்பயிற்சிகள் உடலில் அசிட்டிக் அளவை அதிகரிக்கும். இதை உணவுகள் மூலம் நடுநிலைப்படுத்தாவிட்டால், உடல் எலும்புகளில் இருந்து கால்சியத்தையும், தசைகளில் இருந்து நைட்ரஜனையும் பயன்படுத்த ஆரம்பிக்கும். ஆனால் எலுமிச்சை ஜூஸைக் குடிக்கும் போது, இப்பிரச்சனை தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why To Have Lime Water With Workouts

Do you know why to have lime water with workouts? Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter