சுயிங்கம் முழுங்கினால் உடலில் என்ன மாற்றம் நிகழும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

எல்லாரும் சுயிங்கம் சாப்பிட்டிருப்போம். சிறு வயதில் நமக்கு வாங்கி கொடுக்கும் போதே நன்றாக மென்று துப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். சில முறை நாம் தவறுதலாக முழுங்கியிருப்போம்.

பொதுவாக நமக்கு எல்லாருக்குமே ஒரு பயம் உண்டு, இப்படி தவறுதலாக முழுங்கப்படும் சுயிங்கம் நம் வயிற்றில் ஒட்டிக்கொள்ளும் அதனை எடுக்கவே முடியாது என்று பயந்திருப்போம்.

உண்மையில் அப்படி ஒன்றும் வயிற்றில் ஒட்டாது. ஆனால் சுயிங்கம் முழுங்குவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். சுயிங்கம் முழுங்கினால் என்னவாகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுயிங்கத்தில் என்னென்ன இருக்கிறது :

சுயிங்கத்தில் என்னென்ன இருக்கிறது :

சுயிங்கத்தில் சர்க்கரை, கொழுப்பு, மெழுகு, நிறமூட்டும் கெமிக்கல், வாசத்தை கொடுக்கும் கெமிக்கல், இதைத் தவிர எலாஸ்டோமெர்ஸ் மற்றும் எமுல்சிஃபையர்ஸ் இருக்கின்றது.

கல்லீரல் :

கல்லீரல் :

சுயிங்கம் முழுங்கியதும் நேராக அது கல்லீரலுக்குச் செல்கிறது. அங்கு சுயிங்கத்தில் இருக்கும் நிறம் இன்ன பிற தாதுக்களை நீக்கிடும்.

வயிறு :

வயிறு :

வயிற்றுக்கு வந்து சேர்ந்ததும் வயிற்றில் இருக்கும் ஹைட்ரோ க்ளோரிக் அமிலம் சுயிங்கத்தில் இருக்கும் சத்துக்களை பிரித்திடும். குறிப்பாக சுயிங்கத்தில் இருக்கும் சுவையூட்டிகள், நிறமூட்டிகள், பெப்பர்மெண்ட் ஆயில் ஆகியவை பிரிக்கப்படும்.

குடல் :

குடல் :

சுயிங்கம் குடலுக்கு வந்ததும் அது நம் உடலிருந்து வெளியேற்றப்படும். இந்த நடைமுறை நடந்து சுயிங்கம் உங்கள் உடலிலிருந்து வெளியேறுவதற்கு 25லிருந்து 26 மணி நேரம் வரை ஆகும்.

ஒரு நாளுக்குள் வெளியேறவில்லை என்றால்? :

ஒரு நாளுக்குள் வெளியேறவில்லை என்றால்? :

நீங்கள் சுயிங்கம் முழுங்கி முழுதாக ஒரு நாள் கடந்த பின்பும் உங்களுக்கு காய்ச்சல், அஜீரணம், ரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் வந்தால் உங்கள் உடலிருந்து சுயிங்கம் இன்னும் வெளியேறவில்லை என்று அர்த்தம்.

தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What happens if you swallow chewing gum

What happens if you swallow chewing gum
Story first published: Tuesday, September 12, 2017, 12:30 [IST]
Subscribe Newsletter