முகத்தில் அதிக தசை சேர்வதை தடுக்க இதையெல்லாம் அவசியம் செய்யுங்கள் !

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடை குறைப்பு என்பது எல்லாருக்கும் இன்றைய தலையாய பிரச்சனையாக இருக்கிறது. தொப்பை குறைய, கை தசைகள், தொடை தசைகள், இடுப்புத் தசை எல்லாவற்றையும் குறைக்க வேண்டும் என்று நினைத்து மெனக்கெடுபவர்கள் உண்டு.

மனதில் உருவாக்கி வைத்திருக்கும் நம் கற்பனை பிம்பத்தை எட்டும் வரையிலும் பயங்கர ப்ரயத்தனங்கள் எடுத்துக் கொண்டிருப்போம். உடலை விடுங்கள் இன்னொரு முக்கியமான அங்கம் முகம்.

Tips to weight loss on face

நம்முடைய அடையாளமே அந்த முகம் தான். உடல் எல்லாம் மெலிந்து இருப்பவர்களுக்கு முகம் மட்டும் கொழுப்பு சேர்ந்து குண்டாக தெரியும். அதனை குறைக்கவென்று தனியாக எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியம் :

ஆரோக்கியம் :

ஆரோக்கியம் என்றாலே குண்டாக இருப்பது தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது முற்றிலும் தவறானது. அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப அவர் வாழும் சூழலுக்கு ஏற்ப மட்டுமே அவரது ஆரோக்கியம் நிர்ணியிக்கப்பட வேண்டும்.

தசையை குறைப்பதற்கான முயற்சியை முன்னெடுப்பதற்கு முன்னால் முகத்தில் மட்டும் அதிக தசை சேருவது எதனால் என்ற காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜங்க் ஃபுட் :

ஜங்க் ஃபுட் :

இன்றைக்கு பலரும் இயந்திரத்தனமான வாழ்க்கை முறைக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். நின்று நிதானமாக சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாமல் எல்லாரும் பாக்கெட் உணவிற்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

நம் உடலுக்கு தேவையான சத்துக்களான விட்டமின்ஸ்,மினரல்ஸ் ஆகியவை எதுவுமே நமக்கு கிடைப்பதில்லை.

குறிப்பாக முகத்தில் அதீத தசை சேருவதற்கு உணவில் விட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகியவை குறைவாக இருப்பதுவே. அதைத் தவிர்த்து கார்போஹைட்ரேட் மற்றும் உப்பு நிறைய எடுத்துக் கொள்வதும் தான் முக்கியக் காரணமாக இருக்கிறது.

டீ ஹைட்ரேஷன் :

டீ ஹைட்ரேஷன் :

உங்கள் உடலில் தண்ணீர் தேவை இருந்து அவை நிறைவேறாமல் இருந்தாலும் இப்பிரச்சனை உண்டாகும். அடிக்கடி தொண்டை வரண்டு போவது, தலை வலி ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக கவனம் செலுத்துங்கள்.

தொடர்ந்து அதிகப்படியாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க முடியாதவர்கள் தண்ணீர்ச் சத்து அதிகமிருக்கும் காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயது :

வயது :

இதற்கு வயதாவதும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. வயதாக வயதாக நம் உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள் தான் முக்கிய காரணியாக இருக்கிறது. அதற்காக அதை அப்படியே விட்டு விடக்கூடாது. முகத்தில் தோன்றிடும் சுருக்கங்களை வராமல் செய்வதற்குரிய வேலைகளை மேற்கொள்ளுங்கள்.

குடிப்பழக்கம் :

குடிப்பழக்கம் :

அதீத குடிப்பழக்கம் இருக்கிறதா? அப்படியானால் உங்கள் முகத்தில் அதிகாக தசைகள் உருவாகும். பொதுவாக ஆல்கஹால் நம் உடலில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் . இதனால் தாகம் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். முகம் சற்று பெரிதாக தசை தொங்குவது போல உருவாகிடும்.

பரம்பரை :

பரம்பரை :

சிலருக்கு பரம்பரையாக கூட வரக்கூடும். உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளிடம் இருக்கக்கூடிய ஜீன்களின் மூலமாகவும் உங்களுக்கு இந்தப் பிரச்சனை தோன்றலாம்.

டோனிங் எக்சர்சைஸ் மூலமாக இதனை நாம் சரிப்படுத்தலாம்.

மருத்துவக் காரணங்கள் :

மருத்துவக் காரணங்கள் :

கிட்னி பிரச்சனை, சைனஸ்,அலர்ஜி,பல் தொடர்பான பிரச்சனை ஆகியவை ஏறப்பட்டிருந்தால் கூட முகம் பெரிதாக குண்டானது போலத் தெரியும்.

காரணங்களை அறிந்த கொண்ட பிறகு அதனை சரிப்படுத்த என்னென்ன வழிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் மாற்றம், முகத்தில் செய்யப்படக்கூடிய உடற்பயிற்சிகள்,வீட்டு மருத்துவமுறைகள் ஆகிவற்றின் மூலமாக இதனை நாம் குறைக்க முடியும்.

 தண்ணீர் :

தண்ணீர் :

மிகவும் அவசியமான அதே சமயம் மிகுந்த பலன் தரக்கூடிய டிப்ஸ் இது. உங்கள் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீரை குடிக்க வேண்டும். நம் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைத்தால் அது நம் உடலை டீ ஹைட்ரேஷன் ஏற்படாமல் பாதுகாத்திடும்.

சாதரண தண்ணீரை குடிக்கமுடியவில்லை எனில் தண்ணீர் நிரம்பிய வெள்ளரி,தர்பூசணி,தக்காளி, ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இளநீர், மோர்,பழச்சாறு ஆகியவற்றை குடிக்கலாம்.

உப்பு :

உப்பு :

உணவுகளில் அதிகப்படியாக உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். உப்பைக் கரைக்க அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும். நம் உடலில் இருக்கிற தண்ணீர் எல்லாம் இதற்கே செலவாகிட மீண்டும் நம் உடல் டீ ஹைட்ரேஷன் ஆகிடும்.

இது உங்கள் முகத்தை குண்டாக காட்டுவது மட்டுமின்றி உடலில் ஏராளமான உடல் உபாதைகளை ஏற்படுத்திடும். இது இதயத்திற்கு அதிகப்படியான பிரஷர் கொடுப்பதால், இதயம் செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.

எப்படி ? :

எப்படி ? :

உணவில் உப்பை தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் உணவில் கூடுதலாக சேர்க்ககூடிய டேபிள் சால்ட் மட்டும் குறைக்க வேண்டும் என்று அர்த்தமன்று. மாறாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். பாக்கெட் உணவுகளில் அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். அவற்றை குறைக்க வேண்டும், நீங்கள் சாப்பிடும் உணவுகளில் உப்பு கொஞ்சம் குறைவாக இருந்தாலும் அப்படியே சாப்பிட்டு பழகுங்கள்.

பொட்டாசியம் :

பொட்டாசியம் :

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பொட்டாசியம் போதுமான அளவு இருந்தால் மட்டுமே அவை நம் உடலில் இருக்கும் சோடியம் அளவினை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும். வாழைப்பழம் ,கேரட்,கீரை வகைகளில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது.

டயட் :

டயட் :

டயட் என்று சொன்னதுமே கொழுப்பு சேராத உணவுகள் என்று சொல்லி மொத்தமாக அதனை ஒதுக்குவது தவறானது. உங்கள் உடலுக்கு என்னென்ன சத்துக்கள் தேவை என்பதையறிந்து ஒரு பேலன்ஸுடு டயட்டாக இருக்க வேண்டும்.

காய்கறி பழங்கள் போன்ற இயற்கையான உணவினை அதிகமாக சாப்பிடுங்கள்.எக்காரணத்தை கொண்டும் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். அதே போல ஒரே நேரத்தில் அதிகப்படியாக வயிறு முட்டும் அளவிற்கும் சாப்பிட வேண்டாம்.

ஒய்வு :

ஒய்வு :

உடல் எடை குறிப்பாக முகத்தில் அதிக தசை ஏற்படுவதற்கு போதிய ஓய்வு இல்லாததும் ஒரு காரணம். தூக்கம் இல்லாததால் கண்கள் வீக்கத்துடன் இருப்பது, கருவளையம் ஏற்படுவது, முகத்திக் சுருக்கங்கள் ஏற்படுவது ஆகியவை உண்டாகும்.

அதனால் நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

அதீத ஸ்ட்ரஸ் கூட இப்பிரச்சனையை அதிகப்படுத்தும். உங்கள் மனதை அமைதிப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

உட்காரும் முறை :

உட்காரும் முறை :

சிலர் பழக்கமாக தவறான போஸில் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். அவற்றில் ஒன்று தான் கூன் முதுகிட்டு உட்காருவது. இப்படி உட்காருவதால் இடுப்பு பகுதி பெரிதாகும் அதே போல இது டபிள் சின் வருவதற்கும் முக்கிய காரணமாக அமைந்திடும்.

பேசும் போதோ.. தீவிரமாக எதையாவது செய்து கொண்டிருக்கும் போது மெய்மறந்து தலையை தொங்கப்போட வேண்டாம். இது உங்கள் தாடைப்பகுதியில் அதிகப்படியாக தசை சேர்வதற்கு காரணியாக அமைந்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to weight loss on face

Tips to weight loss on face
Story first published: Thursday, November 16, 2017, 17:30 [IST]