சிறுநீரக புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

சிறுநீரகம் உடலில் மிகவும் முக்கிய வேலையை செய்கிறது. மனித உடலில் 2 சிறுநீரகங்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்களை வடிகட்டும். அதே சமயம் சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கெமிக்கல் உட்பொருட்களை நிலையாக வைத்து, உடல் ஆரோக்கியம் மற்றும் சிறுநீர் உற்பத்தியை சீராக வைத்துக் கொள்ளும்.

Subtle Signs Of Kidney Cancer That You Need To Know Of

மார்பகம், சருமம், புரோஸ்டேட் புற்றுநோய்களின் அறிகுறிகளைப் பற்றி தெரிந்த அளவு கூட, நம்மில் பலருக்கும் சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் தெரியாது. சொல்லப்போனால் சிறுநீரக புற்றுநோய் இருந்தால், ஆரம்ப காலத்தில் அது ஒருசில பொதுவான அறிகுறிகளை வெளிப்படுத்துவதால், நாம் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

பெரும்பாலும் சிறுநீரக புற்றுநோயானது முற்றிய நிலையில் அல்லது சிறுநீரகத்தில் உள்ள புற்றுநோய் கட்டிகள் நன்கு வளர்ச்சி அடைந்த பின்பு தான் நன்கு தெரிய வரும். ஆகவே கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி உங்களை சோதனை செய்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீரில் இரத்தம்

சிறுநீரில் இரத்தம்

சிறுநீரில் இரத்தம் கலந்து வெளி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று சிறுநீரக புற்றுநோய். ஆகவே இம்மாதிரி இரத்தம் கலந்த சிறுநீர் வந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

முதுகு/பக்கவாட்டில் வலி

முதுகு/பக்கவாட்டில் வலி

முதுகு அல்லது பக்கவாட்டுப் பகுதியில் வலி அல்லது அழுத்தம் ஏற்பட்டால், அது சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். ஏனெனில் புற்றுநோய் கட்டிகளால் சிறுநீரகங்கள் வீக்கமடைந்து, அதனால் அழுத்தத்தை ஏற்படுத்தி, வலியை உண்டாக்குகிறது.

சோர்வு

சோர்வு

நாள்பட்ட சோர்வு அல்லது களைப்பும், சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எனவே நீங்கள் திடீரென்று காரணமேயின்றி, மிகுந்த சோர்வை உணர்ந்தால், மருத்துவரை அணுகுங்கள்.

எடை குறைவு

எடை குறைவு

சிறுநீரகங்கள் மெட்டபாலிசம் மற்றும் செரிமானத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உணவுகளை உடைப்பது மற்றும் உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும். இதன் காரணமாக உடல் எடையும் திடீரென்று குறைய ஆரம்பிக்கும்.

இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்

இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்

சிறுநீரகங்களில் கட்டிகள் இருந்தால், இரத்த சோகை, உடலில் எலக்ட்ரோலைட் அல்லது கால்சியத்தின் அளவில் ஏற்றத்தாழ்வுகள் அல்லது இதர இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நோய் கண்டறிதல்

நோய் கண்டறிதல்

மருத்துவர்கள் சிறுநீரக புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தால், நெஃப்ரெக்டோமி முறையின் மூலம், பாதிக்கப்பட்ட செல்களை அகற்றுவார்கள். இந்த முறையினால், சிறுநீரகங்களில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் மட்டும் அகற்றப்படும். சில நேரங்களில் மருத்துவரால் கூட சிறுநீரக புற்றுநோயைக் கண்டறிய முடியாது. எனவே அடிக்கடி முழு உடல் பரிசோதனை செய்வதன் மூலம், உடலில் உள்ள பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Subtle Signs Of Kidney Cancer That You Need To Know Of

Know about these top symptoms of kidney cancer and avert all the possible risks. Read to find out the top kidney cancer symptoms.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter