For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் அந்தரங்க பகுதியில் இருக்கும் காயத்தை சரிசெய்யும் அற்புத பானம்!

அவகேடோ விதையை எப்படி சாப்பிட்டால் அதன் முழு பலனைப் பெறலாம் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு அந்த விதையைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்க, அதன் நன்மைகளை எளிதில் பெற முடியும்.

|

உலகில் உள்ள மிகவும் ஆரோக்கியமான பழங்களுள் ஒன்று தான் அவகேடோ. பச்சை நிறத்தில் மாங்காய் வடிவில் இருக்கும் அவகேடோ பழத்தில் ஏராளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் பழத்தில் மட்டுமின்றி, உள்ளே இருக்கும் கொட்டையிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

இதன் விதையை அப்படியே சாப்பிட முடியாவிட்டாலும், சரியான வழியில் உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள காயங்கள், பிடிப்புக்கள் மற்றும் இதர பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். முக்கியமாக அவகேடோயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

அதுமட்டுமின்றி, அவகேடோ விதை ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிக்கு மிகவும் நல்லது. சரி, அவகேடோ விதையை எப்படி சாப்பிட்டால் அதன் முழு பலனைப் பெறலாம் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு அந்த விதையைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்க, அதன் நன்மைகளை எளிதில் பெற முடியும். இப்போது அவகேடோ விதையின் நன்மைகளையும், அதனைக் கொண்டு எப்படி டீ தயாரிப்பது என்றும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

அவகேடோ விதையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், அவகேடோ விதையை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக்கப்படும்.

நன்மை #2

நன்மை #2

அவகேடோ விதையில் இருக்கும் டயட்டரி நார்ச்சத்து, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, அதிக கொலஸ்ட்ராலால் வரும் இதர பிரச்சனைகளைத் தடுக்கும்.

நன்மை #3

நன்மை #3

அவகேடோ விதையில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன், தமனிகளின் சுவர்களில் கொலஸ்ட்ரால் படிந்து, பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

நன்மை #4

நன்மை #4

இரத்த அழுத்தத்தை சீராக்க, கொலஸ்ட்ராலைக் குறைக்க மற்றும் பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதைத் தடுப்பதுடன், அவகேடோ விதை இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். இதற்கு அதனுள் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் தான் காரணம்.

நன்மை #5

நன்மை #5

அவகேடோ விதையில் கால்சியம் அதிகளவில் உள்ளது. இது எலும்புகளின் வளர்ச்சி மற்றும் அதன் அடர்த்தியை பராமரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதர எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையைத் தடுக்கும்.

நன்மை #6

நன்மை #6

அவகேடோ விதைகளில் உள்ள வளமான அளவிலான ஜிங்க், நோயெதிர்ப்பு செல்களின் வலிமை அதிகரித்து, உடலைத் தாக்கும் நோய்களின் தாக்கம் குறையும்.

நன்மை #7

நன்மை #7

இரத்த சோகை இருப்பவர்களுக்கு அவகேடோ விதை மிகவும் நல்லது. ஏனெனில் இந்த விதையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இதை உட்கொள்ள, உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை விரைவில் நீங்கும்.

நன்மை #8

நன்மை #8

டயட்டரி நார்ச்சத்தை தவிர வேறு எந்த சத்தாலும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியாது. ஒருவர் நார்ச்சத்து நிறைந்த உணவை அதிகம் உட்கொண்டாலே, செரிமான மண்டலம் சீராக இயங்கி, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை எளிதில் பெற முடியும்.

நன்மை #9

நன்மை #9

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளதா? அப்படியெனில் அதிலிருந்து உடனடியாக விடுபட, அவகேடோ விதையை உட்கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் மலமிளக்கிகளான சாபோனின்கள் மற்றும் டானின்கள், பெருங்குடலின் இயக்கத்தை மேம்படுத்தி, உடலில் இருந்து கழிவுகளை எளிதில் வெளியேற்றும்.

நன்மை #10

நன்மை #10

உடல் வறட்சியடையாமல் நீர்ச்சத்துடன் இருக்க அவகேடோ உதவும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் தான் முக்கிய காரணம். இது தான் உடலில் நீர்ச்சத்தை சமநிலையில் வைத்து, உடலை வறட்சியடையாமல் தடுக்கிறது.

நன்மை #11

நன்மை #11

ஆய்வு ஒன்றில் அவகேடோ விதையில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுவது மட்டுமின்றி, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அவகேடோ விதையை உட்கொள்வது மிகவும் நல்லது.

நன்மை #12

நன்மை #12

அவகேடோ விதையில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் பசியெடுக்காமல் செய்து, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, உடல் பருமனடையாமல் தடுப்பதோடு, பருமனான உடலையும் குறைக்கும்.

நன்மை #13

நன்மை #13

அவகேடோ விதையில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட்டு, ப்ரீ ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் தடுத்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். முக்கியமாக அவகேடோ விதை மார்பக புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும்.

நன்மை #14

நன்மை #14

ஒருவர் போதுமான அளவில் மக்னீசியத்தை உட்கொண்டால், தசைப் பிடிப்புக்கள் வராமல் இருக்கும். இத்தகைய மக்னீசியம் அவகேடோ விதையில் அதிகம் உள்ளதால், தசைப்பிடிப்புக்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், இதை அடிக்கடி உட்கொள்ள தசைப்பிடிப்புக்களில் இருந்து விடுபடலாம்.

அவகேடோ டீ தயாரிப்பது எப்படி?

அவகேடோ டீ தயாரிப்பது எப்படி?

* முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி, அதில் அவகேடோ விதையை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மிதமான தீயில் வைத்து 1/2 மணிநேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதை இறக்கி குளிர வைத்து, தினமும் ஒரு கப் என 3 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். பின் 4 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டூம் 3 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும்.

* இப்படி 3 வாரம் தொடர்ந்து செய்து வந்தால், ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பித்திருப்பதை நன்கு காணலாம்.

Image Courtesy: losingweightdone

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reduce Prostate Inflammation And Bone Pain By Drinking This Tea At Night

Avocado seed are ideal against cramps, skin issues, inflammation and bone pain. Today we will present you how to use them for many other health benefits.
Story first published: Wednesday, December 13, 2017, 11:13 [IST]
Desktop Bottom Promotion