For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதில் கவர்ச்சியை தவிர வேறெதுவும் இல்லை!

சத்துக்கள் ஏதுமற்ற ஜங்க் ஃபுட் ஏன் சாப்பிடக்கூடாது என்பதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று இது.

|

உடல் ஆரோக்கியம் குறித்து பேச்சை ஆரம்பித்தாலே சத்தான காய்கறி மற்றும் பழங்களைத்தான் சாப்பிட வேண்டும் துரித உணவுகளை சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது.கலோரி உணவு குறைவான இந்த வகை உணவுகளால் எந்த சத்துக்களும் நமக்கு கிடைப்பதில்லை.

Reasons for why junk is bad

இதில் கவர்ச்சியைத் தாண்டி வேறெதுவும் இல்லை என்பதை முதலில் உணர வேண்டும்.

இன்றைக்கு பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஜங்க் உணவுகள் தான் முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு பக்கம் ஆபத்தானது என்று எச்சரிக்க இன்னொரு பக்கம் அதனை விரும்பி சாப்பிடும் கூட்டம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உண்மையில் ஜங்க் உணவுகள் சாப்பிடுவதால் என்ன பிரச்சனை ஏற்படுகிறது என்று தெரியும்? தெரிந்தால் ஜங்க் உணவு இருக்கும் பக்கம் கூட நீங்கள் செல்ல மாட்டீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டைப்2 சர்க்கரை நோய் :

டைப்2 சர்க்கரை நோய் :

ஜங்க் உணவுகளை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே உங்கள் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் அளவு கிடைத்திடும்.

துரித உணவுகளை எடுத்துக் கொள்வதால் உங்கள் ரத்தத்தில் சர்க்கரையளவு அதிகரித்து சர்க்கரை நோய் வரக்காரணியாக அமைந்திடும்.

தொடர்ந்து ஜங்க் உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தால் உங்களுடைய மெட்டபாலிசம் முறையே பாதிக்கப்படும். இதனால் இன்ஸுலின் சுரப்பும் குறையும்.

களைப்பு:

களைப்பு:

ஜங்க் உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் எப்போதும் களைப்பாகவே உணர்வீர்கள். உடல் எடை அபிரிதமாக அதிகரிக்கும். ஆனால் எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்யமாட்டீர்கள்.

நம் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு தேவையான ப்ரோட்டீன்,மினரல்ஸ்,உட்பட பல்வேறு சத்துக்கள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதினால் கிடைப்பதில்லை. அதனால் அவை சரியாக இயங்க முடியாது.

செரிமானம் :

செரிமானம் :

ஜங்க் ஃபுட் நீங்கள் தொடர்ந்து எடுக்ககூடாது என்பதற்கு இரண்டாவது முக்கிய காரணி இது செரிமானக்கோளாறினை ஏற்படுத்திடும் என்பது தான். இதனால் வயிற்றில் கேஸ் தொல்லை, மலச்சிக்கல் ஆகியவை உண்டாகும்.

இதில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகளால் நம் உடலுக்கு மிகவும் ஆபத்தாய் முடிந்திடும்.

இதயக்கோளாறு :

இதயக்கோளாறு :

இது முதன்மையான காரணம்.ஜங்க் உணவுகளில் இருக்கும் சாட்டுரேட்டட் கொழுப்பு நம் உடலில் கெட்ட கொழுப்பாகவே சேர்ந்திடும். இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இதயக்கோளாறு வர காரணியாக அமைந்திடும்.

அதோடு இதில் சேர்க்கப்பட்டிருக்கும் அதிகப்படியான சர்க்கரை, நம் உடலுக்கு கேடு தரக்கூடியது. அதோடு ஒபீசிட்டியும் ஏற்படும் என்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

கிட்னி கற்கள் :

கிட்னி கற்கள் :

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகப்படியான ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுகிறது.

அவற்றில் உப்பு அதிகமாக சேர்த்திருப்பார்கள். இதனை அதிகப்படியாக தொடர்ந்து எடுப்பதால் நம் உடலில் சோடியம் அளவு அதிகரிக்கும்.

இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது, கிட்னியில் கற்கள் உண்டாவது ஆகிய பாதிப்புகள் உண்டாகும். ரத்தத்தில் சேரும் நச்சுக்களை பிரிக்கும் வேலையை கிட்னி செய்கிறது. இதனால் கிட்னி சீக்கிரமே பாதிக்கப்படும்.

கல்லீரல் :

கல்லீரல் :

மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்படும் என்று சொல்வதுண்டு. அதே போன்றதொரு தொல்லை தான் ஜங்க் உணவு சாப்பிடுபவர்களுக்கும் உண்டாகும்.

புற்றுநோய் :

புற்றுநோய் :

ஜங்க் உணவுகளில் நார்ச்சத்து இருக்காது. இதனால் உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படும். ஜர்னல் ஆஃப் கேன்சர் ப்ரிவென்சன் என்பதில் வெளியான அறிக்கையின் படி, சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த ஜங்க் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவுத்திறன் :

நினைவுத்திறன் :

ஜங்க் உணவு தொடர்ந்து அதிகப்படியாக எடுத்துக் கொள்வதால் நம் நினைவாற்றலையும் குறைக்கிறது.

அதோடு நம் எண்ணவோட்டத்தையும் குழைத்து சோகத்துடன் இருக்கச் செய்கிறது, உற்சாகமாக சுறுசுறுப்புடன் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத சூழல் உண்டாகிறது.

 மன அழுத்தம் :

மன அழுத்தம் :

ஜங்க் உணவினால் ஹார்மோன் மாற்றங்களும் நிகழ்கிறது. இதனால் இள வயதினருக்கு அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏதும் கிடைப்பதில்லை என்பதால் இதனைத் தவிர்ப்பது தான் நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

ஜங்க் உணவுகளில் நமக்கு தேவையான நியூட்டிரிசியன்கள் எதுவும் இல்லை.இது நம் உடலை மட்டுமல்ல சருமத்தையும் பாதிக்கிறது. சரும வறட்சி ஏற்பட்டு சருமத்தில் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.குறிப்பாக நமக்கு வயதான தோற்றத்தை கொடுக்கும்.

இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்வதினால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திடும் இதனால் தொடர்ந்து ஏதாவதொரு பாதிப்பு உண்டாகிக் கொண்டேயிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons for why junk is bad

Reasons for why junk is bad
Desktop Bottom Promotion