For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிஞ்சா நுரையிரல கவனமா பாத்துக்கங்க!

ஆஸ்துமாவின் அறிகுறிகள் சிலவற்றை நாம் சாதரணமாக நினைத்து கண்டுகொள்ளாமல் விடுகிறோம். இது தவறான போக்கு

|

குளிர் காலத்தில் பலருக்கும் அதிகரிக்கும் நோய்களில் ஒன்று ஆஸ்துமா. தற்போது வயது வித்யாசமின்றி எல்லாரையும் தாக்கி அச்சுறுத்தும் நோயாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒருவருக்கு அடிக்கடி தொடர்ந்து சளிப்பிடிக்கிறது என்றால் அவருக்கு ஆஸ்துமா வர வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து சளி, அதனை தொடர்ந்து தும்மலும், இருமலும் இருப்பவர்களுக்கு சிறிது சிறிதாக சளி,இருமல் தாக்கி, நுரையீரலில் உள்ள மூச்சுக் குழாயை கிருமிகள் தாக்குகிறது.

Never ignore this silent signs for asthma

இதனால் மூச்சுக் குழாயின் உட்சுவர்களில் சேதம் உண்டாகி அந்த இடத்தில் வீக்கமும் உண்டாகிறது.இதன் காரணமாக அசுத்த நீர் கசிந்து கிருமிகள் தாக்குவதால் மூச்சுக் குழாய்கள் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது.

இதன் காரணமாக சுத்த காற்று உள்ளே செல்லவும், அசுத்த காற்று வெளியை வரவும் முடியாமல் தடங்கல் ஏற்படுகிறது.ஆரம்ப நிலையிலே ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது அவசியம். ஆஸ்துமா முற்றிவிட்டால், பிராண வாயு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உயிருக்கே கூட ஆபத்தாக முடியும்.இதன் அறிகுறிகள் வெளிப்படையாக வெளியில் தெரிவதில்லை என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Never ignore this silent signs for asthma

Never ignore this silent signs for asthma
Story first published: Saturday, November 4, 2017, 13:06 [IST]
Desktop Bottom Promotion