எடைக்குறைக்கணும்னு நினைக்கும் போது இதெல்லாம் நினச்சு பயமாயிருக்கா?

Posted By:
Subscribe to Boldsky

உடல் நலனில் அக்கறை கொண்டிருப்பவர்கள் தாங்கள் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவிலும் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று ஆராய்ந்து தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதெல்லாம் சாப்பிடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் மனதில் இருக்கும் போதே இதையெல்லாம் நீங்கள் சாப்பிடவே கூடாது குறிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உணவுகளின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க கூடாது என்ற ரீதியில் பயமுறுத்தப்படுகிறது.

Myths and facts about nutrition for weight loss

உடல் எடை குறித்த கேள்வியை முன்வைத்தாலே ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான விஷயங்களை சொல்லி பயமுறுத்துகிறார்கள். குறிப்பாக காய்கறி மற்றும் பழங்களில் இருக்கும் சத்துக்கள் அவற்றை எடுத்துக்கொள்வதால் உண்டாகும் பலன்கள் என எல்லாவற்றிலும் சில பொய்கள் நிரம்பி வழிகிறது நியூட்டிரியசன் தொடர்பாக இதுவரை நம்பப்பட்டு வந்த பொய்களும் அதனுடைய உண்மைகளையும் தெரிந்து கொள்ள இவற்றை தொடருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விலை அதிகம் :

விலை அதிகம் :

டயட் அல்லது சத்தான உணவு என்று சொன்னாலே எல்லாமே விலை அதிகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் தவறானது.

விலை என்பது பெரிய காரணமாகவோ அல்லது மிகுந்த வித்யாசத்திலோ இருப்பதில்லை. கீரைகளில் இருக்கும் சத்துக்கள் என்பது எண்ணிலடங்காதது விலையும் குறைவு. சத்தானது என்றால் அதன் வெளித்தோற்றத்தை வைத்து முடிவு செய்வது அல்ல. அதை விட பெரிய டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் பொருட்களில் தான் சத்துக்கள் நிறைந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் தவறானது.

எது ஆரோக்கியம் :

எது ஆரோக்கியம் :

ஒல்லியாக இருப்பது மட்டுமே ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் தயவு செய்து அந்த கருத்தினை மாற்றிக் கொள்ளுங்கள். இதனாலேயே நாம் எந்த எடையில் இருந்தாலும் கொஞ்சம் மெலிந்திருக்கலமோ என்ற எண்ணம் ஒடிக்கொண்டிருக்கிறது.

எந்த வயதினரும் தங்களின் உயரத்திற்கு ஏற்ப எடை கொண்டிருப்பத் தான் ஆரோக்கியமானது.

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

நமது ஆரோக்கியதிற்கு ப்ரோட்டின் மிகவும் அவசியமாகும். அசைவ உணவுகளில் ப்ரோட்டின் நிறைந்திருக்கிறது. வெஜிடேரியன் உணவு வகைகளை மட்டும் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு ப்ரோட்டீன் சத்து கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.

இதுவும் தவறானது. அசைவ உணவுகளைத் தவிர,பீன்ஸ், சுண்டல்,தானியங்கள் போன்றவற்றிலும் அதிகப்படியான ப்ரோட்டீன் இருக்கிறது.

சர்க்கரை :

சர்க்கரை :

உடல் நலனுக்கு சர்க்கரை மிகவும் ஆபத்தானது, சர்க்கரை அதிகமாக உடலில் சேர்வதால் தான் உடல் எடை அதிகரிப்பதில் ஆரம்பித்து, மாரடைப்பு, ரத்த அழுத்தம்,பக்கவாதம் என வரிசைகட்டி பல்வேறு நோய்கள் வருகிறது. சர்க்கரை உடல் ஆரோக்கியத்திற்கு எதிரி என்றும் டயட் இருக்க நினைப்பவர்கள் முதலில் தவிர்க்க வேண்டியது சர்க்கரை சார்ந்த உணவுப்பொருட்கள் தான் என்று சொல்லப்படுகிறது.

இதுவும் தவறான போக்கு,மற்ற சத்துகளைப் போலவே சர்க்கரைச் சத்தும் நமது உடலுக்கு அவசியமாகிறது. அவை தான் நமக்கு எனர்ஜியைத் தருகிறது. சர்க்கரை அளவுக்கு மீறி எடுக்கும் போதோ அல்லது உடலில் சேர்ந்திருக்கும் சர்க்கரை சரியாக எனர்ஜியாக மாற்றப்படாமல் இருந்தால் மட்டுமே அது ஆபத்தாய் முடிந்திடும்.

கார்போஹைட்ரேட் :

கார்போஹைட்ரேட் :

உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது கார்போஹைட்ரேட்.உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முற்றிலும் கார்போஹைட்ரேட் தவிர்த்திட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதுவும் தவறானது.

கார்போஹைட்ரேட் இன்ஸுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் உடல் நலத்திற்கு கேடு விளையும். இவை குறிப்பிட்ட அளவினை மீறி கார்போஹைட்ரேட் எடுக்கும் போது தான் இந்த நிலைமை ஏற்படும்.

டயட் :

டயட் :

திரை நட்சத்திரங்கள், விளம்பரங்களில் காண்பிக்கப்படுகிற டயட்கள் அல்லது உடல் எடை குறைப்பு தொடர்பான டயட்களை பின்பற்றினால் உடனேயே உடல் எடை குறைந்திடும் என்று நினைக்கிறார்கள்.

இது எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும் சரியாக பொருந்தும் என்று சொல்ல முடியாது. உணவுக்கட்டுப்பாடு என்பதை சரியாக கடைபிடிக்காவிட்டால் அது பெரும் ஆபத்திலேயே முடியும். இங்கே சரியாக என்பது தினமும் கடைபிடிக்கிறோமா என்பதல்ல

அதைத்தாண்டி, உங்கள் எடை எவ்வளவு,எவ்வளவு எடை குறைக்க வேண்டும், என்னென்ன சத்துக்கள் தேவை, எதனை குறைக்க வேண்டும் என்று உங்களை பரிசோதித்து அதன் படி நடப்பது தான் சிறந்த பலனைத் தரும்.

யாரோ பின்பற்றுகிறார்கள். குறுகிய காலத்தில் பலன் கிடைக்கும் என்று சொல்லி யார் யாரோ சொல்வதையெல்லாம் கடைபிடிப்பது முற்றிலும் தவறானது.

தேன் :

தேன் :

தேன்,வெல்லம்,கருப்பட்டி போன்ற இயற்கையான இனிப்பு பொருட்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் அவை எந்த ஆபத்தும் ஏற்படுத்தாது என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இனிப்பு பொருட்கள் என்றாலே அதில் சர்க்கரையில் இருக்ககூடிய மூலக்கூறுகள் இருக்கும். இயற்கையானது என்பதற்காக அவற்றில் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது கிடையாது. வெள்ளைச் சர்க்கரையில் பல்வேறு ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் ஆனால் இயற்கையான பொருட்கள் அவை குறைவு அவ்வளவு தான் வித்தியாசம்.

கொழுப்பு :

கொழுப்பு :

உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு தான் முதன்மையான எதிரி.கொழுப்பு சேரும் எந்த உணவாக இருந்தாலும் அவற்றை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. கொழுப்பில் இரண்டு வகை இருக்கிறது.

ஒன்று நல்ல கொழுப்பு அவை எளிதாக கரைந்திடும். இன்னொன்று கெட்டக் கொழுப்பு. இந்த கெட்டக் கொழுப்பு அதிகமாக சேரும் போது,அதோடு நீங்கள் எந்த விதமான உடல் உழைப்பும் செய்யாமல் இருக்கும் போது தான் கொழுப்பு தொடர்ந்து படர ஆரம்பிக்கும். இதனால் தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பிரித்து உண்ணுதல் :

பிரித்து உண்ணுதல் :

உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு உடலுழைப்பு என்பது அவசியமாகும். அவற்றை முற்றிலும் செய்யாமல் உடலை குறைக்கிறேன் என்றால் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் உடல் எடையை குறைக்க முடியாது.

சிலர் உணவினை சிறிது சிறிதாக பிரித்து உண்கிறேன். குறைவாகச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகி உடல் எடை அதிகரிக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இரண்டு வேலையில் சாப்பிடுகிற உணவினை நான்கு வேலைகளாக சாப்பிடுவதால் மட்டும் உடல் எடை குறையாது. அப்போதும் நீங்கள் எடுத்துக் கொள்கிற உணவுகளில் உள்ள கலோரிகள் ஒன்று தான்.

அவற்றை குறைக்க வேண்டும், உடல் உழைப்பை அதிகப்படுத்த வேண்டும்.

முட்டை :

முட்டை :

முட்டை நல்லது தான் ஆனால் வெள்ளைக்கரு மட்டும் தான் சாப்பிட வேண்டும் மஞ்சள் கரு வேண்டாம் என்று ஒதுக்கப்படுகிறது.உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும் தாய்ப்பாலுக்கு அடுத்த இடத்தில் இருப்பது முட்டை. இயற்கையாகவே நம் உடலுக்கு வைட்டமின் டி-யை அள்ளித்தரும் முட்டையின் மஞ்சள்கருவைப் பலரும் வேண்டாம் என்று தவிர்க்கப்படுகிறது.

உண்மையில், முட்டையின் வெள்ளைக் கருவைவிட மஞ்சள்கருவில்தான் அதிக ஊட்டச்சத்துத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் கே, அமினோ அமிலங்கள், ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கோலின், செலினியம், துத்தநாகம் போன்றவை நிரம்பியுள்ளன.

உண்மையில், மஞ்சள் கரு கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு, கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths and facts about nutrition for weight loss

Myths and facts about nutrition for weight loss
Story first published: Friday, October 20, 2017, 14:36 [IST]