நீங்க ஆர்கானிக் என்று நம்பி வாங்கிய பொருட்களைப் பற்றிய உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு பெரும்பாலானவர்களிடம் முக்கியமாக பயன்படுத்து வார்த்தைகளில் ஒன்றாக மாறிவிட்டது ஆர்கானிக். எல்லாவற்றிலும் கெமிக்கல் சேர்த்திருக்கிறார்கள் அதனால் உடல்நலத்திற்கு தீங்கு என்று நினைத்து ஆர்கானிக் பக்கம் தாவும் மக்களை குறிவைத்து பல்வேறு விஷயங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள்.

ஆர்கானிக் என்ற பெயரை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னென்ன கோல்மால் எல்லாம் செய்கிறார்கள் தெரியுமா? ஏமாறிக்கொண்டிருக்கும் நீங்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் ஆர்கானி குறித்த ஓர் பார்வை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆர்கானிக் எல்லாம் ஆர்கானிக் அல்ல :

ஆர்கானிக் எல்லாம் ஆர்கானிக் அல்ல :

ஆர்கானிக் என்று லேபிள் ஒட்டப்பட்ட உணவுகள் எல்லாமே நூறு சதவீதம் ஆர்கானிக் கிடையாது. ஒட்டப்பட்டிருக்கும் லேபிளில் "made with organic," "organic," and "100% organic." இப்படி ஏதேனும் ஒன்றை ஒட்டியிருப்பார்கள்.மூன்றுக்கும் ஒரே அர்த்தம் தானே என்று ஏமாந்துவிடாதீர்கள். "made with organic," என்றால் 70 சதவீத ஆர்கானிக் "organic," என்றால் 90 சதவீத ஆர்கானிக்,"100% organic." என்றால் மட்டுமே அவை நூறு சதவீத ஆர்கானிக்.

உடல்நலத்திற்கு நல்லது :

உடல்நலத்திற்கு நல்லது :

மக்களை எளிதாக ஏமாற்றக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆர்கானிக் உணவு தான் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. வழக்கமான காய்களில் இருக்கும் சத்துக்களை ஆர்கானிக் காய் இரண்டு மடங்காக்கி தராது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே போல ஆர்கானிக் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் சிப்ஸ்,பிஸ்கட் போன்ற உணவுகளை பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து விற்கப்படுகிறது . ஆர்கானிக் என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றல்ல.

அதே போல ஆர்கானிக் என்பதால் சிப்ஸில் குறைந்த கலோரி தான் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் தவறு. ஆர்கானிக் இல்லாத பாக்கெட் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறதோ அதே கலோரி தான் ஆர்கானிக்கிலும் இருக்கும்.

ஆர்கானிக் என்றாலே பூச்சி மருந்து துளியும் இருக்காது :

ஆர்கானிக் என்றாலே பூச்சி மருந்து துளியும் இருக்காது :

ஆர்கானிக் பக்கம் மக்கள் தாவ மிக முக்கிய காரணங்களில் ஒன்று இது தான். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், முழுதாக பூச்சி மருந்து தெளிக்கவில்லை என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. நீங்கள் வாங்கும் போது அதிக வீரியமிக்க பூச்சி மருந்து தெளித்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், இதனால் பூச்சி மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்திடும்.

நேச்சுரல் என்றால் ஆர்கானிக் :

நேச்சுரல் என்றால் ஆர்கானிக் :

சில உணவுப்பொருள் பாக்கெட்டுகளில் நேச்சுரல் என்று லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். உடனே அதனை ஆர்கானிக் என்று நம்பி வாங்கி ஏமந்தவர்கள் பலருண்டு. பாக்கெட் உணவுகளில் அதிகப்படியான கார்ன் சிரப் சேர்த்திருப்பார்கள் அதே போல முட்டை,கறி போன்றவற்றிலும் நேச்சுரல் என்று ஒட்டப்பட்டிருக்கும். இதனால் ஹார்மோன் மற்றும் ஆண்ட்டி பயோட்டிக் ஃப்ரீ என்று நினைத்திட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

lies about organic foods

lies about organic foods
Story first published: Saturday, August 12, 2017, 15:10 [IST]