9 மணிநேர அலுவலக வேலை உங்கள் உயிரை குடிக்கிறதா? அப்ப நீங்க படிக்க வேண்டியது இது!

Written By:
Subscribe to Boldsky

இந்தியாவில் பெரும்பான்மையான நிறுவனங்கள் 9 மணிநேர வேலை முறையை தான் கடைப்பிடிக்கின்றன. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை என்பது சரி என்றாலும், ஒரு வாரத்தில் ஒருவர் 48 மணிநேரத்திற்கு குறையாமல் வேலை செய்ய வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் மக்கள் அதிகநேரம் வேலை செய்வதை பற்றி கவலைப்படுவதில்லை.

Is your working hours too long

சில சமயம் பணத்திற்காகவும், சில சமயம் விருப்பத்திற்காகவும், வேலைப்பழுவினாலும் அதிகநேரம் வேலை செய்கிறோம். உண்மையில் இந்த 9 மணிநேர வேலை என்பது அதிகம் தானா?

இந்தியாவில் 42.5% தொழிலாளர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று ASSOCHAM தெரிவிக்கிறது. இந்த மன அழுத்தத்தை தொழிலாளர்கள் உணர்வது கூட இல்லையாம். அவர்கள் தினசரி வேலையில் மூழ்கிவிடுவதால், அவர்கள் அதை பற்றிய யோசனைக்கே செல்வதில்லையாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
9 மணிநேரம் என்பது அதிகமா?

9 மணிநேரம் என்பது அதிகமா?

9 மணிநேர கடுமையான உழைப்பு என்பது மிகவும் கடினமானது தான். வாரத்தில் 48 மணிநேர வேலை என்பது சரியான ஒன்றாக இருக்கும். நீங்கள் வேலைக்கு இடைப்பட்ட நேரத்தில் எவ்வளவு நேரம் இடைவெளி எடுக்கிறீர்கள் என்பதை பொருத்தும் இது அமையும்.

மன பாதிப்பு உள்ளதா?

மன பாதிப்பு உள்ளதா?

நீங்கள் செய்யும் வேலையானது உங்களது மன நலன் மற்றும் உடல்நலனை பாதிக்காததாக இருக்க வேண்டியது அவசியம். உங்களது வேலை உங்களை முழுமையான மன அழுத்தத்தில் தள்ளுகிறது என்றால் நீங்கள் அதை பற்றி யோசிக்க வேண்டியது அவசியம். நீங்கள் உங்களது வேலையை உங்களது சில பொழுதுபோக்குகளுடனும் சேர்ந்து செய்யலாம்.

இடைவெளி

இடைவெளி

நீங்கள் ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து மணிநேரத்திற்க்கு ஒருமுறையும் அரைமணி நேர இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒன்பது மணிநேர வேலையில் 1 மணிநேரத்தை நீங்கள் இடைவெளியாக எடுத்துக்கொள்ளலாம்.

8 மணிநேரம்

8 மணிநேரம்

உங்களது 24 மணிநேரத்தில் 8 மணிநேரத்தை வேலைக்காகவும், 8 மணிநேரத்தை பொழுதுபோக்கிற்காகவும், 8 மணிநேரத்தை தூங்குவதற்காகவும் செலவிட வேண்டியது அவசியமாகும். இடைவெளிகள் உங்களது மன அழுத்தத்தை குறைக்கும்.

வீட்டில் வேண்டாம்

வீட்டில் வேண்டாம்

உங்களது 8 அல்லது 9 மணிநேர வேலை நேரம் முழுவதும் நீங்கள் வேலையை பற்றியே நினைத்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் அலுவலத்தில் வேலையை முடித்த பிறகும் கூட வீட்டிற்கு சென்று வேலை செய்தால், அது எதிர்மறை எண்ணங்களை வளர்த்துவிடும்.

உறக்கம்

உறக்கம்

நீங்கள் கண்டிப்பாக குறைந்தது ஆறு முதல் எட்டு மணிநேரமாவது தூங்க வேண்டியது அவசியம். நல்ல உறக்கம் உங்களது மனதை ரிலாக்ஸாக இருக்க வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is your working hours too long

Is your working hours too long
Story first published: Wednesday, October 11, 2017, 9:30 [IST]