உங்களது கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

உங்களது கல்லீரல் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். இந்த கல்லீரலில் நச்சுக்கள் படிவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகும். இந்த நச்சுக்கள் நாம் சாப்பிடும் உணவுகளால் தான் பெரும்பாலும் உருவாகிறது. கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது கல்லீரலில் நச்சுக்கள் படிந்துவிடும். அவ்வாறு கல்லீரலில் நச்சுக்கள் படிந்துள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று உங்களுக்கு சந்தேகமாக இருக்கலாம்...!

ஆரோக்கியம்

ஆனால் நமது உடலானது நமக்கு உண்டாகும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் ஒரு சில அறிகுறிகளை முதலில் வெளிப்படுத்தும். இந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அதற்கான சிகிச்சைகளை செய்து நீங்கள் உங்களது கல்லீரலை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த பகுதியில் உங்களது கல்லீரலில் நச்சுக்கள் படிந்துள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகளை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கல்லீரல் பகுதியில் வலி

1. கல்லீரல் பகுதியில் வலி

உங்களது கல்லீரல் பகுதியில் இதனால் வலி உண்டாகும். வலது புறத்தில் இதற்கான வலி உண்டாகும். இது லேசான வலியாக தான் இருக்கும். இது போன்ற வலி உண்டானால், உங்களது கல்லீரல் பிரச்சனையில் உள்ளது என்று அர்த்தமாகும். கல்லீரலின் பணியானது நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுக்களை தனியாகவும், ஊட்டச்சத்துக்களை தனியாகவும் பிரிப்பதும் தான். கல்லீரலுக்கு பிரச்சனை உண்டானால் நச்சுக்களை பிரித்து எடுக்க முடியாது.

2. கால்களில் திரவ சுரப்பு

2. கால்களில் திரவ சுரப்பு

நீங்கள் கல்லீரலில் உள்ள நச்சுகளை கவனிக்காமல் விட்டுவிட்டால், கல்லீரலே நச்சுக்களை வெளியேற்ற முயற்சி செய்யும். அப்போது கால்களில் இருந்து நீர் வெளிப்படும். இது வலியை உண்டாக்காது. உங்களுக்கு ஹைப்பர் டென்சன் உண்டாகும். இந்த நிலையை அடையும் வரை உங்களது கால்களை கவனிக்காமல் விட்டுவிட கூடாது.

3. உடல் எடை அதிகரிப்பு

3. உடல் எடை அதிகரிப்பு

எத்தனை தான் டயட் மேற்கொண்டாலும், உடற்பயிற்சி செய்தாலும் சிலரால் தங்களது உடல் எடையை குறைக்க இயலுவதே இல்லை. நீங்கள் அதிகமாக எதையும் சாப்பிடாமலும், ஹார்மோன்பிரச்சனைகள் எதுவும் இல்லாமலும் உங்களுக்கு உடல் எடை அதிகரிப்பு இருந்தால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியமாகும்.

4. எப்படி நச்சுக்கள் உண்டாகிறது

4. எப்படி நச்சுக்கள் உண்டாகிறது

மது அருந்துதல், அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுதல், செயற்கையான சுவையூட்டிகள், சில வகையான மருந்து பொருட்களை சாப்பிடுவதன் காரணமாக உடலில் நச்சுக்கள் சேர்கின்றன. வடிக்கட்ட முடியாத நச்சுக்களை கல்லீரல் கொழுப்புகளாக சேமித்து வைத்துவிடுகிறது. இதனால் சிலரால் என்ன தான் முயன்றாலும் உடல் எடையை குறைக்கவே முடிவதில்லை.

5. அலர்ஜி

5. அலர்ஜி

எந்த இடத்தில் அதிகப்படியான நச்சுக்கள் சேர்கின்றனவோ அதனை மூளை அறிந்து கொண்டு, அலர்ஜிகளின் மூலமாக அதனை வெளிப்படுத்துகின்றன. இதனால் உங்களுக்கு உடலில் அரிப்புகள் மற்றும் தடிப்புகள் போன்றவை உண்டாகின்றன. கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் இரத்தமும் சுத்தமாக இருக்கும்.

6. மஞ்சள் நிற கண்கள், தோல்கள்

6. மஞ்சள் நிற கண்கள், தோல்கள்

கல்லீரலில் அதிகப்படியான நச்சுக்கள் சேர்ந்துவிட்டால் அவை உங்களது கண்கள் மற்றும் சருமத்தில் வெளிப்படும். அப்போது கண்கள் மற்றும் தோல்கள் மஞ்சள் நிறமாக மாறும். இதனை தான் நாம் மஞ்சள் காமாலை என்று அழைக்கிறோம். கல்லீரலில் மிக அதிகமாக நச்சுக்கள் சேர்வதால் தான் மஞ்சள் காமலை உண்டாகிறது.

7. நாள்பட்ட சோர்வு

7. நாள்பட்ட சோர்வு

கல்லீரலில் அதிகப்படியான நச்சுக்கள் சேர்ந்து விட்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தேவைகளை சரியாக அனுப்ப முடியாமல் போய்விடும். இதனால் நீங்கள் எப்பொழுதும் சோர்வாகவே உணர்வீர்கள். கல்லீரல் சரியாக இயங்கிக் கொண்டிருந்தால், எப்போது எல்லாம் உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறதோ, அப்போது எல்லாம் உடலுக்கு தேவையான ஆற்றலை அது வழங்கிக் கொண்டிருக்கும்.

8. முள்ளங்கி

8. முள்ளங்கி

உங்களது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த முள்ளங்கி மிகவும் உதவியாக உள்ளது. உங்களது உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் இது நச்சுக்களை வெளியேற்றி உங்களது உடலை சுத்தமாக வைக்கிறது. இதனால் பல பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றன.

9. பூண்டு

9. பூண்டு

பூண்டு இதயத்திற்கு நல்லது என அறியப்பட்டாலும், அது நச்சுப் பண்பை நீக்கும் உணவாகவும் செயல்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள நச்சுயிர் எதிர்ப்பி, பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்களே. பூண்டில் அல்லிசின் என்ற ரசாயனம் உள்ளது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி நச்சு பொருட்களுக்கு எதிராக போரிடும். கொஞ்சம் பூண்டை நசுக்கி, உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

10. க்ரீன் டீ

10. க்ரீன் டீ

உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கு உள்ள சிறந்த வழிகளில் மற்றொன்று - உங்கள் உணவில் க்ரீன் டீயை சேர்த்துக் கொள்வது. இது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும். க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உங்கள் கல்லீரலை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உட்பட அனைத்து நோய்களில் இருந்து பாதுகாக்கவும் இது உதவிடும்.

11. இஞ்சி

11. இஞ்சி

செரிமான அமைப்பில் மேம்பாடு, வயிற்று பொருமல் மற்றும் வாய்வை குறைக்க இஞ்சியை பயன்படுத்துங்கள். இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவிடும். ஆகவே நீங்கள் குடிக்கும் ஜூஸ்களில் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது சீரான முறையில் இஞ்சி டீ குடியுங்கள்.

12. எலுமிச்சை

12. எலுமிச்சை

நச்சுப் பண்பை நீக்கும் புகழ் பெற்ற மற்றும் சிறப்பான உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது எலுமிச்சை. எலுமிச்சையில் வைட்டமின் சி என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அடங்கியுள்ளது. கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்ட வெந்நீரை குடித்து உங்கள் நாளை தொடங்குங்கள். இதனால் உங்கள் உடலில் இருந்து நச்சுப்பொருட்கள் வெளியேறி உடல் சுத்தமாகும்.

13. பீட்ரூட்

13. பீட்ரூட்

பீட்ரூட்டில் மெக்னீசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பலவித உடல்நல பயன்களை அளிக்கிறது. இந்த சூப்பர் உணவு கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. பீட்ரூட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணலாம். பீட்ரூட்டை ஜூஸ் போட்டும் கூட குடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to identify your liver has more toxic

how to identify your liver has more toxic
Story first published: Friday, December 15, 2017, 15:30 [IST]
Subscribe Newsletter