இப்டி மாத்தி சொல்லி என்ன நடக்குத்துன்னு பாருங்களேன்!!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது அல்லது தன்னால் மீண்டு வர முடியாத வகையில் கவலை படும் போதும் உடனிருக்கும் நமக்கு எப்படி அவர்களை சமாதனப்படுத்துவது? அவர்களை என்ன பதில் சொல்லித் தேற்றுவது என்று தெரியாது.

என்ன சொன்னாலும் அப்படித்தான் கொஞ்ச நேரம் அழட்டும் என்றோ கொஞ்ச நேரத்துல தானா சரியாகிடும் என்றோ நாம் நினைத்து விடுவது தான் பல நேரங்களில் ஆபத்தாய் போய் முடிகிறது.

உங்களின் நெருங்கிய நட்பு மன உளைச்சலில் இருக்கும் போது அல்லது தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சொன்னால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் :

காரணம் :

ஒருவர் கவலையாக இருக்கிறார் என்றால் உடனடியாக அதற்கான காரணம் தெரியவேண்டும் என்று நினைத்து அவரிடமே சென்று காரணத்தைச் சொல்... என்று வர்புறுத்தாதீர்கள்.

ஏதோ ஒரு காரணம் அவர்கள் மனது புண்படும் படி நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டு அதற்கு ஆறுதல் சொல்பவராய் இருங்கள் அதை விடுத்து காரணம் தெரிந்து கொள்வதிலேயே முனைப்பை காட்டாதீர்கள்.

உங்களது சின்ன சின்ன வார்த்தைகள் தான் அவர்களை தேற்றும் என்று மறந்திட வேண்டாம்.

ஐடியா 1 :

ஐடியா 1 :

நீ எப்படி வருந்துகிறாய் என்பதை நான் உணர்கிறேன் என்று சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக அது என்ன தான் மிகச் சிறிய பிரச்சனையாக இருந்தாலும் என்னால் இதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று சொல்லுங்கள்.

இந்த வார்த்தை தான் என்னுடைய வலியை இன்னொருவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுக்கும்.

ஐடியா 2 :

ஐடியா 2 :

நீ எவ்ளோ தைரியசாலின்னு நினச்சுட்டு இருந்தேன் இதுக்கெல்லாம் கவலபடறியே என்று தயவு செய்து சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக. எனக்குத் தெரியும் இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்கான தைரியம் தற்போது உன்னிடம் இல்லை ஆனால் இது நிரந்தரம் அல்ல.... என்று சொல்லுங்கள்.

நான் தைரியசாலி தான் ஆனால் இந்த சூழ்நிலையில் இப்பிடி உடைந்த அழுகிறேன் என்பதை புரிந்து கொள்வார்கள்.

ஐடியா 3 :

ஐடியா 3 :

ஏதாவது உதவி வேண்டுமானால் என்னைக் கூப்பிடு... என்று சொல்வதை விட. உனக்காக இங்கேயே காத்திருப்பேன். எவ்வளவு நேரமானாலும் சரி என்று உறுதி கொடுங்கள்.

என்னை கண்காணிக்க இங்கே ஒரு நபர் இருக்கிறார் என்ற எண்ணம் அவர்களின் தற்கொலை எண்ணத்தை திசை திருப்பும்.

ஐடியா 4 :

ஐடியா 4 :

இதெல்லாம் ஒரு பிரச்சனையா? இத விட மத்தவங்க எவ்ளோ பிரச்சனைகள சந்திக்கிறாங்க தெரியுமா? என்று சொல்லி உங்கள் வாழ்க்கையில் உங்களது மற்ற நண்பர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரிக்க வேண்டாம். அதற்கு பதிலாக. இது உனக்கு மட்டுமல்ல உன்னைப் போல பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

ஐடியா 5 :

ஐடியா 5 :

உன்னைப் பத்தி நினைக்கிறத நிறுத்து... இங்க உனக்கு மட்டும் இந்த பிரச்சனையில்ல என்று சொல்வதற்கு பதிலாக வா.... எந்த பிரச்சனையாக இருந்தாலும் சேர்ந்து சமாளிக்கலாம் என்று சொல்லுங்கள்.

இங்கே ஒருவரை ஒருவர் சார்ந்து தான் வாழ வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

ஐடியா 6 :

ஐடியா 6 :

நீ செஞ்சது பெரிய தப்பு. விடு, அதையே நினச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம் விட்டு மத்த வேலைய பாரு என்று சொல்வதற்கு பதிலாக. நீ என்ன செய்திருந்தாலும் உனக்காக நானிருப்பேன். உன்னை முழுதாக நம்பும் நான் உனக்காக எப்போதும் இருப்பேன் என்கிற உறுதி கொடுங்கள்.

உங்களின் இந்த வார்த்தைகள் அவரை தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டு வர வைத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to react when your loved ones were depressed.

How to react when your loved ones were depressed.
Story first published: Sunday, October 8, 2017, 10:15 [IST]