தினசரி உங்கள் உடலுக்கு தேவையான உப்பின் அளவு எவ்வளவு தெரியுமா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

அதிக உப்பு சேர்த்துக்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். இது இதய பிரச்சனைகள் மற்றும் இதய அடைப்புக்கு காரணமாக அமையும். எனவே உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

How Much of Salt You Need Every Day

நமது உடலிற்கு தேவையான உப்பின் அளவானது தினசரி சாப்பிடும் உணவிலேயே கிடைத்துவிடுகிறது. ஆனால் நீங்கள் சாப்பிடும் ஒருசில உணவுகளில் உங்களுக்கு தெரியாமலேயே அதிகளவு உப்பு உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் எந்த வித அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை. இரத்த அழுத்தம் அறிகுறிகளை வெளிக்காட்டினால் நீங்கள் இதய பாதிப்பின் ஆரம்பகட்டத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் மற்றும் இருதய பிரச்சனைகளுக்கான வாய்ப்பும் குறையும்.

உப்பு மிகுந்த உணவுகள்

உப்பு மிகுந்த உணவுகள்

சில உணவுகளில் உப்பு அதிகமாக இருந்தால் தான் சுவை அதிகரிக்கும். பிரட் போன்ற சில உணவுகள் உடலில் உப்பை அதிகரிக்கின்றன. அதிகமாக உப்பு சேர்க்காமல் இருப்பதை விட, உப்பு கலந்த உணவுகளை குறைவாக உண்பது நல்லது.

இவற்றை குறைவாக சாப்பிடுங்கள்:

இவற்றை குறைவாக சாப்பிடுங்கள்:

மிக அதிகளவு உப்பு உள்ள இந்த உணவுகளை கொஞ்சமாக சாப்பிடுவது உங்களது ஆரோக்கியத்திற்கு நல்லது.

1. நெத்திலி

2. பன்றி இறைச்சி

3. சீஸ்

4. ஆலிவ்

5. ஊறுகாய்

6. இறால்கள்

7. கொத்துக்கறி

8. உப்பு கலந்த நட்ஸ்

9. சோயா சாஸ்

10. ஈஸ்ட் உள்ள உணவுகள்

அதிக உப்பு உள்ள உணவுகள்:

அதிக உப்பு உள்ள உணவுகள்:

அதிக உப்பு கலந்த உணவுகளை தேர்ந்தெடுக்கும் போது பேக்கில் உள்ள லேபிளை படித்து பார்த்து, எந்த பிராண்டில் குறைவான அளவு உப்பு இருக்கிறதோ அவற்றை வாங்குங்கள். குறைவாகவும் சாப்பிடுங்கள்.

1. பாஸ்தா சாஸ்

2. பீட்சா

3. ரெடிமேட் உணவுகள்

4. சூப்

5. ரொட்டி மற்றும் ரொட்டி சார்ந்த உணவுகள்

6. சான் வெட்ஜ்

7. தக்காளி கெட்ச்அப்

சோடியம்

சோடியம்

உப்பு சோடியம் குளோரைடு எனவும் அழைக்கப்படுகிறது. எனவே சில லேபிள்களில் உப்பு என்பதற்கு பதிலாக சோடியம் என போட்டிருப்பார்கள்.

எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும்?

எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும்?

உப்பு அதிகமாக சேர்ப்பது உடலில் கால்சியத்தின் அளவை குறைக்கிறது. நடுத்தர வயதுடைய ஒருவர் ஒரு நாளைக்கு 6 கிராம் அளவு உப்பு மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது ஒரு டிஸ்பூன் அளவாகும்.

1 முதல் 3 வயது என்றால் 2.5 கிராம் அளவும், 4 முதல் 8 வயது என்றால் 3.5 கிராம் அளவும், 9 முதல் 13 வயது என்றால் 5 கிராம் அளவும் 14 முதல் அதற்கும் மேற்பட்ட வயது என்றால் 5.75 கிராம் அளவு உப்பு மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Much of Salt You Need Every Day

How Much of Salt You Need Every Day
Story first published: Saturday, July 22, 2017, 16:20 [IST]