அசைவ உணவு சீக்கிரமாக செரிக்க இந்த பொருளை கொஞ்சம் உணவில் சேர்த்துக்கோங்க!

Written By:
Subscribe to Boldsky

அஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர்வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. செரிமானப் பாதையில் உற்பத்தியாகிற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன.

ஆரோக்கியமாக உள்ளவருக்கு இந்தச் செரிமான நீர்களும் என்சைம்களும் தேவையான நேரத்தில் தேவையான அளவுக்குத் தேவையான இடத்தில் சுரந்து 'செரிமானம்' எனும் அற்புதப் பணியைச் செய்து முடிக்கின்றன.

சில உணவுகள் இயற்கையாகவே செரிமானத்தை தூண்டக் கூடியவை.. அவை அசைவ உணவில் இருக்கும் நச்சுத்தன்மைகளையும் போக்க கூடியவை.. அத்தகைய உணவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பப்பாளி

1. பப்பாளி

பப்பாளியில் அதிகளவு விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. இது உங்களது செரிமான பிரச்சனைகளுக்கு உதவியாக உள்ளது. இந்த பப்பாளியை நீங்கள் மிகச் சிறிதளவு எலுமிச்சை சாறை பிளிந்து சாப்பிடலாம். அல்லது ப்ரூட் சாலட்டுகளில் பப்பாளியை சேர்த்து சாப்பிடலாம்..!

2. யோகார்ட்

2. யோகார்ட்

யோகார்ட் உங்களது செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நீங்கள் பால் பொருட்களை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்வதாலும் கூட உங்களது செரிமான மண்டலத்தை மேம்படுத்தலாம். யோகர்ட்டில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை உங்களது உடலில் கரையாமல் உள்ள கொழுப்புகள் மற்றும் புரோட்டினை கரைத்து, செரிமானத்தை எளிமையாக்குகிறது.

3. வெந்நீர்

3. வெந்நீர்

சாப்பிட்டவுடன் குளிர்ச்சியான தண்ணீர் பருகுவதால், உணவில் கலந்துள்ள எண்ணெய் இறுகுகிறது. இதனால் செரிமானம் தாமதமாகிறது. எனவே நீங்கள் சாப்பிட்ட உடன் மிதமான சூடுள்ள நீரை பருகுங்கள் இதனால் உணவு சீக்கிரமாக உடைந்து, செரிப்பது எளிமையாகிறது.

கடினமான அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது வெந்நீர். இரவு உணவுக்குப் பின்னர், வெந்நீர் பருகுவதால், சிறு மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுகிறது. அதனால், மலம் இளகி, மலச்சிக்கல் நீங்கும். வயிற்று வலி, உப்புசத்தைத் தடுக்கும்.

4. க்ரீன் டீ

4. க்ரீன் டீ

க்ரீன் டீ உடல் பருமனை குறைப்பதற்கு உதவுகிறது. கிரீன் டீயில் உள்ள பாலிபீனால் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பை ஆக்ஸிடைஸ் செய்கிறது. உடற்பயிற்சி செய்யும்போது, நம் உடலில் இதே செயல்தான் நடைபெறுகிறது.

தவிர இன்சுலின் சுரப்பை அதிகரித்து, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், 50 மி.லி கிரீன் டீ அருந்துவதால், செரிமானம் எளிதாகும். காலை மாலை என ஒரு நாளைக்கு 2 கப் க்ரீன் டீ என 100 மிலி அருந்தலாம்.

5. வெந்தயம்

5. வெந்தயம்

வெந்தயம் நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. இதில் ஏ, சி, கே ஆகிய விட்டமின்கள் அடங்கியுள்ளன. மேலும், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது.

கெட்ட கொழுப்பை குறைக்கும். ஆன்டிஆக்ஸிடன்டுகளும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளதால், நாம் சாப்பிடும் அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. வெந்தையத்தை அப்படியே சாப்பிடுவதைவிட, இரவு தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

6. சீரகம்

6. சீரகம்

இரும்பு, கால்சியம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ள மூலிகைச் செடி சீரகம். மசாலா உணவுகள், பிரியாணி, அசைவ ரெசிபிக்களில் சுவை, மணம் கூட்டவும், செரிமானத்தை எளிதாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இரைப்பை அலர்ஜியை குணமாக்குகிறது; நுண்தொற்றுக்களிடம் இருந்து இரைப்பையின் உட்பகுதியைப் பாதுகாக்கிறது.

நாள்பட்ட செரிமானக் கோளாறால், மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.

7. ஓமம்

7. ஓமம்

கிழக்கு இந்தியாவில் பயிரிடப்பட்ட ஓமச் செடி, அதன் அசிடிட்டி, செரிமானாக் கோளாறு ஆகியவற்றைப் போக்கும் தன்மையால், இந்தூர், ஆந்திரப் பிரதேசம் ஆகியப் பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ரஸ்க் உள்ளிட்ட, தின்பண்டங்களில் சேர்க்கப்படுகிறது.

ஓமத்தில் உள்ள தைமோல் (Thymol) பீனால், செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது. அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அது அரை டம்ளராக ஆகும் வரை சூடாக்கி, தினமும் காலை, மாலை பருகிவந்தால், வயிற்று மந்தம் குணமாகும்.

8. லவங்கம்

8. லவங்கம்

முதலில் சமையலில் சுவை, வாசனைக்காக உலகநாடுகளால் பயன்படுத்திவந்த லவங்கம், அதன் மருத்துவப் பலன்களால் புகழ்பெறத் தொடங்கியது. குறிப்பாக, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் செரிமானத்துக்கு உதவுகின்றன.

லவங்கம், செரிமான அமிலத்தால் வெளியாகும் வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் வாயுப்பிடிப்பு, வயிற்று உப்புசம், குமட்டல் உணர்வு (Nausea) நீங்கும். செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கும்.

9. புதினா

9. புதினா

புதினா, வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் உள்ள ஸ்பிங்டர் சதையை (Sphincter muscle) ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் சாப்பிட்டவுடன் மலம்கழிக்கத் தூண்டும் 'இரிட்டபுள் பௌல் சிண்ட்ரோம்' தடுக்கப்படுகிறது.

மலக்குடலில் அமைந்திருப்பது 'TRPM8' என்னும் புரோட்டீன். இது, காரசாரமான மசாலா உணவுகளை உண்டு, அவை செரிமானமாகி, மலக்குடலில் பயணிக்கும்போது ஏற்படும். வலி மற்றும் எரிச்சலைப் போக்க உதவும். மசாலா உணவுக் கழிவுகள் மலக்குடலில் பயணிக்கும்போது இயல்பாகவே TRPM8, தனது வேலையைத் தொடங்கிவிடும்.

புதினாவை உணவில் சேர்ப்பதால், இது தூண்டப்படும். இதனால் வாயுபிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாகிவிடும்.​​​​​​​

10. இஞ்சி

10. இஞ்சி

நம் உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள், செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில், செரிமான அமிலம் (Hcl), கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல் (Bile). இந்த மூன்று திரவங்களின் சுரப்பையும் இஞ்சி ஊக்குவிக்கும்.

இஞ்சி, ஜிஞ்சரால் என்னும் மூலப் பொருளை உள்ளடக்கியது. இது, வயிற்றில் செரிமான அமிலமானது, உணவைக் கரைக்கும்போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல், உணவுக்குழாயில் தேங்கவிடாமல் ஏப்பம் மூலமாக வெளியேற்றுகிறது.

இஞ்சி கலந்த வெந்நீரை தினமும் காலை மாலை இருவேளையும் குடிக்கலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம். இதனால் செரிமானம் எளிதாகும்.

11. வாழைப்பழம்

11. வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து அடங்கியுள்ளது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் இன்சுலின் இருக்கும். எனவே இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது உங்களது உணவுக்குழாயில் அதிகளவு அமிலங்கள் படிவதை தடுக்கிறது.

இந்த அமிலத்தன்மை அதிகரித்தால் அது வயிற்றில் எரிச்சலை உண்டாகும். நெஞ்செரிச்சலையும், செரிமான பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

12. முழுதானியங்கள்

12. முழுதானியங்கள்

நீங்கள் முழுதானியங்கள் உங்களது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்களது செரிமானத்தை அதிகரிக்கலாம். நீங்கள் முழுமையாக கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுங்கள். இதில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமானத்தை அதிகரிக்கும் பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை அதிகரிக்கும்.

13. கீரைகள்

13. கீரைகள்

பசுமையாக இருக்கும் உணவுகள் அனைத்துமே சத்தானவை தான். கீரைகளில் அதிகளவு விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் கே ஆகியவை உள்ளது. இவற்றில் உள்ள இனுலின் என்ற நார்ச்சத்து, ப்ரோபயோடிக் என்ற செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

14. மஞ்சள்

14. மஞ்சள்

மஞ்சள் பழங்காலமாகவே நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. அசைவத்தில் உள்ள கிருமிகளை அழிக்க மஞ்சள் சேர்க்கப்படுகிறது. நீங்கள் மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வருவதாலும், மஞ்சள் கலந்த பாலை குடிப்பதாலும் உங்களது செரிமானம் இயற்கையாகவே மேம்படுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Improve Your Digestion Naturally

How to Improve Your Digestion Naturally
Story first published: Saturday, December 16, 2017, 11:00 [IST]
Subscribe Newsletter