உங்களுக்கு மலேரியா இருக்கானு எப்படி தெரிஞ்சுக்கலாம்?

Written By:
Subscribe to Boldsky

மலேரியா காய்ச்சல் ஒவ்வொரு வருடமும் அதன் கொடுரத்தை காட்டி வருகிறது. இது பெரும்பாலும் சாக்கடைகள் அதிகம் உள்ள பகுதிகள், நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு அருகில் இருப்பவர்களை தான் அதிகம் தாக்குகிறது. மலேரியா நோய்க்கு மிக முக்கிய காரணம் கொசு தான்.

மலேரியா என்பது கொசுக்கள் மூலம் பரவும் ஒரு ஒட்டுண்ணி. இதற்கு பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (plasmodium vivax) என்று பெயர். இந்த ஒட்டுண்ணியை பரப்பும் கொசுவுக்கு அனோபிலஸ் (Anopheles) என்று பெயர். இந்த பகுதியில் மலேரியாவை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை செய்யலாம் என்பது பற்றி விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலேரியா வெளிப்பாடு

மலேரியா வெளிப்பாடு

தொற்றுள்ள கொசு கடித்த, 10-15 நாளில் நோய் வெளிப்படும். நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக உள்ளவர்களுக்கு 7 நாளில் கூட வெளிப்படலாம்.

முதல் நிலை

முதல் நிலை

மலேரியா காய்ச்சல் மூன்று நிலைகளாக வெளிப்படும். முதல் நிலையில் லேசான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வாந்தி, சோர்வு ஆகியவை இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர்க் காய்ச்சல் ஏற்படும். உடல் நடுக்கம் உண்டாகும். இது சுமார் அரை மணி நேரம் இருக்கும்.

இரண்டாம் நிலை

இரண்டாம் நிலை

இரண்டாவது நிலையில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் ஆறு மணி நேரம் நீடிக்கும்.

மூன்றாம் நிலை

மூன்றாம் நிலை

மூன்றாவது நிலையில் காய்ச்சல் குறைந்து, வியர்வை கொட்டும். உடல் ஐஸ்போல குளிர்ந்துவிடும். இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார். பிறகு, இதே காய்ச்சல் மறுநாளோ ஒரு நாள்விட்டு ஒரு நாளோ அல்லது மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு முறையோ மீண்டும் வரும். இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

பரிசோதனை

பரிசோதனை

எளிய ரத்த பரிசோதனை மூலம் மலோரியா காய்ச்சலை கண்டறியலாம். மேலும், எந்த வகையான ஒட்டுண்ணி, மருந்துக்கு எதிராக செயல்படும் தன்மையைப் பெற்றுள்ளதா, ஏதேனும் உள் உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பதை இதன் மூலம் கண்டறியலாம்.

தண்ணீர் தேக்கம்

தண்ணீர் தேக்கம்

மலேரியா பரவக் காரணம் கொசு தான். எனவே, கொசுவை ஒழிப்பதன் மூலமாக தான் மலேரியாவை ஒழிக்க முடியும். கொசு உற்பத்தியைத் தடுக்க, தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, தண்ணீர் தேங்கியிருந்தால் அதில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது போன்றவற்றைச் செய்யலாம். வீட்டில், கொசுக்கள் அடைவதைத் தடுக்க வேண்டும்.

 கொசு வலை

கொசு வலை

பாதுகாப்பான முறையில் கொசுக்களை விரட்டலாம். இரவில் கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் மலோரியா பாதிப்பைத் தவிர்க்க முடியும்.

மருந்து

மருந்து

வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.' மருந்தை தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்' மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும்.

தொட்டிகள் பாதுகாப்பு

தொட்டிகள் பாதுகாப்பு

சுத்தமான தண்ணீரில் மலேரியா கொசுக்கள் உற்பத்தி ஆவதால், வீட்டின் மேல்நிலைத் தொட்டிகளையும் கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடிவைக்க வேண்டும். வீட்டில் உள்ள நீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்வதாலும் கொசுக்களை ஒழிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How escape from malaria

How escape from malaria
Story first published: Tuesday, October 10, 2017, 9:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter