For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபுட் பாய்சனா? அதிலிருந்து உடனடி நிவாரணம் தரும் சில வழிகள்!

இங்கு ஃபுட் பாய்சனில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

தெருவோரங்களில் விற்கப்படும் பக்கோடா, பஜ்ஜி, சிக்கன் 65, சிக்கன் கபாப் போன்றவற்றை சாப்பிட ஆசை அதிகரித்து, வாங்கி சாப்பிட்டதால் ஃபுட் பாய்சன் ஆகிவிட்டதா? தெருவோரங்களில் விலைக் குறைவில் கிடைக்கிறது என்று கண்டதை வாங்கி சாப்பிட்டால், ஃபுட் பாய்சன் தான் ஆகும்.

Home Remedies For Food Poisoning That Work!

ஏனெனில் தெருவோரங்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்கள் சுத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே கண்டதை வாங்கி சாப்பிடுவதைத் தவித்திடுங்கள். மேலும் ஃபுட் பாய்சன் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்யும் நமது பாட்டி வைத்தியங்களைப் பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைத்தியம் #1

வைத்தியம் #1

இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரில் தேன் கலந்து குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் குமட்டல், வாந்தி மற்றும் செரிமான பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கும்.

வைத்தியம் #2

வைத்தியம் #2

ஃபுட் பாய்சன் ஏற்பட்டிருந்தால், துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் ஃபுட் பாய்சன் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

வைத்தியம் #3

வைத்தியம் #3

எலுமிச்சையில் உள்ள ஆன்டி-பாக்டீயல் பண்புகள், ஃபுட் பாய்சனை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். ஆகவே ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸை தினமும் மூன்று முறை குடித்து வாருங்கள்.

வைத்தியம் #4

வைத்தியம் #4

ஃபுட் பாய்சனால் ஏற்படும் வயிற்று பிரச்சனைகளில் இருந்து சீரகம் விடுவிக்கும். அதிலும் உடனடி நிவாரணம் கிடைக்க ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, தினமும் இரு வேளை குடிக்க வேண்டும்.

வைத்தியம் #5

வைத்தியம் #5

தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது அஜீரண பிரச்சனைக்கு தீர்வளிக்கும். அதற்கு தினமும் பலமுறை 1 டீஸ்பூன் தேனை உட்கொண்டு வாருங்கள்.

வைத்தியம் #6

வைத்தியம் #6

வாழைப்பழம் வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யாவிட்டாலும், உடலில் ஆற்றலை தக்க வைக்கும். ஆகவே தினமும் 2-3 முறை நன்கு கனிந்த வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இதனால் ஃபுட் பாய்சனால் இழக்கப்பட்ட ஆற்றல் மீண்டும் உடலுக்கு கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Food Poisoning That Work!

Here are some home remedies for food poisoning that work.
Desktop Bottom Promotion