நெஞ்செரிச்சல் அதிகமா இருக்கா? அதிலிருந்து உடனடி நிவாரணம் தரும் சில வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

செரிமானத்திற்கு காரணமான இரைப்பை உணவுக்குழாய் மற்றும் சிறுகுடலுக்கு இடையே அமைந்துள்ளது. ஒருவருக்கு செரிமானம் பல்வேறு பிரச்சனைகளான இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலின் காரணமாகவும் பாதிக்கப்படும்.

Eliminate Gastritis & Heartburn Forever With These Natural Remedies!

இரைப்பை அழற்சி என்பது இரைப்பை சுவர்களில் சிறுசிறு சிவப்பு நிற புள்ளிகள் இருந்து, கடுமையான வலியை உண்டாக்கும். இக்கட்டுரையில் இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலுக்கான சில இயற்கை நிவாரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக இம்மாதிரியான பிரச்சனைகள மோசமான டயட், மன அழுத்தம், மது, போதைப் பழக்கம் போன்றவற்றால் தான் ஏற்படும். சரி, இப்போது அதற்கான நிவாரணிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாதம் வடித்த நீர்

சாதம் வடித்த நீர்

சிறிது அரிசியை ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்ததும், அதனை வடிகட்டி, தினமும் இரு வேளைப் பருக வேண்டும். இப்படி செய்தால், விரைவில் இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை சரியாகும்.

பார்ஸ்லி நீர்

பார்ஸ்லி நீர்

பார்ஸ்லியில் நீர்ப்பெருக்கி பண்புகளுடன், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. இத்தகைய பார்ஸ்லியைக் கொண்டு தேநீர் தயாரித்து குடித்து வந்தால், அது இரைப்பையில் உள்ள அழற்சியை குணமாக்க உதவும்.

கேரட் மற்றும் செலரி ஜூஸ்

கேரட் மற்றும் செலரி ஜூஸ்

இரண்டு கேரட் மற்றும் சிறிது செலரி தண்டை மிக்ஸியில் போட்டு, நீர் சேர்த்து அரைத்துக் குடித்தால், நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை அழற்சியில் இருந்து வேகமாக நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் மற்றும் சீமைச்சாமந்தி

ஆப்பிள் மற்றும் சீமைச்சாமந்தி

ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, ஒரு கப் சீமைச்சாமந்தி டீயில் போட்டு வேக வைத்து, தினமும் காலையில் குடித்து வந்தால், இரைப்பை அழற்சியில் இருந்து உடனடியாக விடுபடலாம்.

இஞ்சி மற்றும் பேரிக்காய்

இஞ்சி மற்றும் பேரிக்காய்

இஞ்சி மற்றும் பேரிக்காயை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, பகல் நேரத்தில் குடித்து வர, இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலில் இருந்து விரைவில் விடுபட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eliminate Gastritis & Heartburn Forever With These Natural Remedies!

Eliminate gastritis and heartburn quickly with the help of these natural remedies. Read this article to find out how to relieve gastritis pain fast.
Story first published: Wednesday, January 18, 2017, 14:35 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter