ரத்த அழுத்தத்திற்கும் தைராய்டுக்கும் ஒரு சேர மாத்திரை எடுக்கிறீர்களா?

Posted By:
Subscribe to Boldsky

நாம் சாப்பிடும் உணவை சுவையறிய நாக்கில் இருக்கும் நுண்ணிய துகள்கள் பயன் தருகின்றன. உடலில் ஏற்படுகிற சில மாற்றங்கள், உடலில் இருக்கிற ரசாயனங்கள் அதிகமாக சுரப்பது அல்லது குறைவாக சுரப்பது போன்றவற்றின் காரணத்தில் நம்முடைய சுவையறியும் திறனில் வேறுபாடு திகழும்.

சிலருக்கு அடிக்கடி வாயில் உப்புச் சுவை கூடுவதாக இருக்கும். சில நேரங்களில் ஏதேனும் உணவு சாப்பிட்ட பின்னரோ சிலருக்கு காரணமேயில்லாமல் கூடத் தோன்றலாம். திடிரென்று நீங்கள் சாப்பிடும் உணவு அதீத உப்புச்சுவை கொண்டதாக இருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது? அதனை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த சில விரிவான தகவல்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆபத்தனாதா? :

ஆபத்தனாதா? :

வாயில் உப்புச் சுவை அதிகரிப்பது ஒன்றும் ஆபத்தானதல்ல, ஆனால் இது நீங்கள் சாப்பிடுகிற ரெகுலர் உணவின் சுவையை சீர் குலைத்துவிடும் என்பதால் தக்க நேரத்தில் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

இப்படி வாயில் உப்புச் சுவை அதிகமாக தெரிவதற்கு என்ன காரணம் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

டீ ஹைட்ரேசன் :

டீ ஹைட்ரேசன் :

வாயில் உப்புச் சுவை அதிகரித்தற்கான முக்கிய காரணிகளில் ஒன்று உங்கள் உடலில் போதியளவு தண்ணீர் சத்து இல்லை என்பது. தண்ணீர் சத்து குறைந்தால் அது ஏராளமான உடல் உபாதைகளை கொண்டு வந்திடும்.

உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்திடும்.

சோடா பானங்கள் :

சோடா பானங்கள் :

வாயில் உப்புச்சுவை அதிகமாக தெரிந்தால் உடனடியாக சோடா பானங்கள் மற்றும் மதுபானம் குடிப்பதை நிறுத்திட வேண்டும். ஏனென்றால் இது நம் உடலில் இருக்கும் தண்ணீர் சத்தை வேகமாக குறைக்கும்.

நிறையத் தண்ணீர் ஆகரங்களை குடிப்பதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

ரத்தம் :

ரத்தம் :

வாய்ப்பகுதியில் இருக்கக்கூடிய ரத்தத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டால் கூட இப்படியான உப்புச் சுவை தெரியும். சில நேரங்களில் உங்கள் நாக்கை தெரியாத்தனமாக கடித்திருக்கலாம் அல்லது பற்களின் ஈறுகளில் ஏதேனும் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தால் கூட இந்தத் பிரச்சனை இருக்கும்.

அழுகை :

அழுகை :

நீண்ட நேரம் அழுபவர்களுக்கு இந்தத் தொல்லை வர வாய்ப்பிருக்கிறது. இந்தப்பிரச்சனை குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும் என்பதால் குழந்தை சில நேரங்களில் உணவுச் சாப்பிட மறுத்தால் உப்புக் குறைவான உணவை கொடுத்துப் பாருங்கள்.

மூக்குப் பிரச்சனை :

மூக்குப் பிரச்சனை :

மூக்கடைப்பு உட்பட இன்னபிற பிரச்சனைகள் இருந்தால் அவை உங்கள் நாவில் சுவையறியும் திறனை பாதித்திடும். நாக்கில் இருக்கக்கூடிய மஸ்கஸ் அதிகரித்தால் தான் உங்களுக்கு உப்புச் சுவை அதிகமாக தெரிந்திடும்.

காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை ஏற்பட்டிருந்தால் கூட சில நேரங்களில் இந்தப் பிரச்சனை ஏற்படுவதுண்டு.

பாக்டீரியா தொற்று :

பாக்டீரியா தொற்று :

பற்கள் பராமரிப்பு மோசமாக இருந்தால் வாயில் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் வாயில் பாக்டீரியா அதிகரித்து நாக்கில் உப்புச் சுவையை அதிகரிக்கும் அதே போல கெட்ட நாற்றத்தையும் உருவாக்கிடும்.

மருந்துகள் :

மருந்துகள் :

குறிப்பிட்ட சில மருந்துகள் தொடர்ந்து எடுப்பவர்களுக்கு வாயில் உப்புச் சுவை அதிகரித்திடும். சில ஹெர்பல் மருந்துகள், வீட்டுவைத்தியங்களாக எடுப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ரத்த அழுத்தம், தைராய்டு போன்றவற்றிற்கு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் இந்தப் பிரச்சனை இருக்கும்.

கீமோதெரபி :

கீமோதெரபி :

நாக்கில் உப்புச் சுவை அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்று புற்று நோய் தாக்கிய ஐம்பது சதவீதத்தினருக்கும் அதிகமானோர் இந்தப் பிரச்சனையை சொல்லியிருக்கிறார்கள்.

கீமோதெரபி செய்வதனால் ஏற்படுகிற பின்விளைவுகளில் இதுவும் ஒன்று. கீமோதெரபி செய்வது நிறுத்திய சில நாட்களில் இது தானாய் சரியாகவும்.

கவனம் :

கவனம் :

என்ன தான் கீமோதெரபி சிகிச்சை முடிந்த பிறகு சில காலங்களில் இப்பிரச்சனை குறையும் என்றாலும், கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் செய்ய வேண்டியவை ஒவ்வொரு முறை உணவு சாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும் பல் விளக்கிடுங்கள்.

பின்னர் சூடான நீரில் எலுமிச்சை சாறை கலந்து குடித்திடுங்கள்.

சலைவரி சுரப்பி :

சலைவரி சுரப்பி :

வாயில் இருக்கக்கூடிய சலைவரி சுரப்பயில் நோய்த் தொற்று ஏற்ப்பட்டிருந்தால் கூட இந்தப்பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. வாயில் எச்சில் சுரப்பதும் குறைந்திருக்கும்.

சில நேரங்களில் அலர்ஜி மற்றும் சைனஸ் பிரச்சனையினால் கூட இந்தப்பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

சத்துக்குறைபாடு :

சத்துக்குறைபாடு :

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் எல்லா விதமான சத்துக்களும் உங்களுக்கு அவசியம் தேவைப்படும். அதிலும் குறிப்பாக விட்டமின்ஸ் மினரல்ஸ் ஆகியவை தேவை.

உங்கள் உடலில் ஜிங்க்,விட்டமின் பி12 ஆகியவை பற்றகுறை ஏற்பட்டால் இந்தப் பிரச்சனை ஏற்படும்.

புகைப்பழக்கம் :

புகைப்பழக்கம் :

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு வாயில் எச்சில் சுரப்பது குறையும். இதனால் வாய் எப்போதும் வரண்டிருக்கும். இதனால் இவர்களுக்கும் வாயில் உப்புச் சுவை அதிகரிக்கும்.

புகைப்பழக்கம் வாயில் பாக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும். இதுவே வாயில் உப்புச்சுவை கூடுவதற்கு காரணமாக அமைந்திடும்.

மூளையில் கட்டி :

மூளையில் கட்டி :

சில நேரத்தில் வாயில் உப்புச் சுவை அதிகமாக இருந்தால் அவை பக்கவாதம் மற்றும் மூளையில் கட்டி ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். தொடர்ந்து இந்தப் பிரச்சனை நீடித்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றிடுங்கள்.

மெனோபாஸ் :

மெனோபாஸ் :

மெனோபாஸ் காலத்தில் ஏராளமான ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அவற்றில் ஒன்று தான் இது.

இந்தக்காலத்தில் வாயில் உப்புச்சுவை அதிகமாக தெரிவதுடன் சிலருக்கு அதீத காரம் இருப்பது போலவும் தோன்றிடும்.

கர்ப்பம் :

கர்ப்பம் :

கர்ப்பிணிப்பெண்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படும் என்று எல்லாருக்கும் தெரியும். அவற்றில் ஒன்று தான் இந்த சுவை மாற்றம். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தினால் தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

இவர்களுக்கு நாக்கில் உப்புச் சுவை அதிகரிப்பது மட்டுமின்றி சில சுவையை மற்றும் சில உணவின் வாசமே பிடிக்காது.

அமிலம் :

அமிலம் :

வயிற்றில் சுரக்கூடிய அமிலத்தின் அளவு அதிகரித்தால் கூட இந்தப் பிரச்சனை ஏற்படும். வாயில் உப்புச் சுவை அதிகமாக தெரிந்தால் முதலில் அமிலத்தன்மை நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை நிறுத்திடுங்கள்.

ஹைபோக்யூசியா :

ஹைபோக்யூசியா :

ஹைபோக்யூசியா நாம் வாயில் உப்புச்சுவை அறியும் திறன் அதிகரிக்கும் போது ஏற்படும். இந்த நிலை ஏற்பட்டவர்களுக்கு உப்புசுவை மட்டுமே தெரியும். அவர்களால் பிற சுவையை கண்டறிய முடியாது.

டிஸ்க்யூசியா :

டிஸ்க்யூசியா :

இது வயதானவர்களுக்கு வரக்கூடியப் பிரச்சனை இது உப்புச் சுவையை அதிகரிப்பதுடன் லேசான காரத்தை கூட தாங்க முடியாமல் போகும். இதற்கு நீங்கள் என்ன தான் வீட்டு மருத்துவத்தை முயற்சி செய்தாலும் மாத்திரைகள் அவசியம்.

புற்றுநோய் :

புற்றுநோய் :

பாரனியோப்ளாஸ்டிக் சிண்ட்ரோம் எனப்படக்கூடிய இந்த குறைபாடு வாயில் உப்புச் சுவையை அதிகரிக்கச் செய்திடும்.

இது பெரும்பாலும் மார்பகப்புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.

ஸ்ஜோரன்ஸ் சின்ட்ரோம் :

ஸ்ஜோரன்ஸ் சின்ட்ரோம் :

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்தப் பிரச்சனை ஏறப்படும். இது நம் நாக்கில் உப்புச் சுவை மட்டும் அதிகரிப்பதுடன் கண்கள்,சருமம்,வாய் ஆகியற்றை வரண்டு போகச் செய்திடும்.

அதோடு செரிமானக்கோளாறு மற்றும் மூட்டு வலி ஆகியவற்றை ஏற்படுத்திடும்.

தீர்வுகள் :

தீர்வுகள் :

இதற்கான முக்கியத்தீர்வு உங்கள் கையில் தான் இருகிறது. பற்களை சுத்தமாக பராமரிப்பதன் மூலம் இந்தப்பிரச்சனை வராமலேயே தவிர்க்க முடியும். சில நாட்கள் மட்டும் இருக்கிறது என்றால் அதற்கு பயப்படத் தேவையில்லை.

தொடர்ந்து நீடித்தால். இத்துடன் பிற அறிகுறிகளும் சேர்ந்து வந்தால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

உணவு :

உணவு :

அதே நேரத்தில் உடலுக்கு போதியளவு நீர்ச்சத்து கிடைக்கிறதா? போதுமான அளவு நீராகரங்களை குடிக்கிறோமா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சோடியம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Causes And Remedies For Salty Taste in Mouth.

Causes And Remedies For Salty Taste in Mouth.
Story first published: Monday, December 18, 2017, 12:00 [IST]