உடல் எடையை குறைக்க சீனர்கள் பின்பற்றும் வழிமுறை என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

சாப்பிடும் விஷயத்தில் சில மாற்றங்களை செய்தாலே நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.இன்றைக்கு உடல் எடை தான் எல்லாரையு பயமுறுத்தும் ஊர் விஷயமாக இருக்கிறது. உடல் எடையைப் பார்த்து தேவையின்றி பயப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.

பிறர் பரப்புவது போல உடல் எடை குறைப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய சூத்திரம் அல்ல. சரி, நம்ம கதைக்கு வருவோம் அதென்ன சின்ன சின்ன மாற்றங்கள் ? இந்த உணவைச் சாப்பிடுங்கள், இது கொழுப்பைக் கரைக்கும் என்று இது எதோ ஓர் ரெசிபியைப் பற்றிய கதையல்ல.... நீங்கள் சாப்பிடும் முறையில் செய்ய வேண்டிய மாற்றம்.ஆம், வழக்கமாக சாப்பிடுவதை விட குறைவாக சாப்பிடப்போகிறோம். அதாவது மூன்று வேலையாக சாப்பிட்ட உணவை ஐந்து வேலையாக பிரித்துச் சாப்பிடலாம்.

இப்படியான மாற்றத்தை எப்படி கொண்டு வருவது, இப்படி சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்வோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரி :

கலோரி :

இப்படி நீங்கள் குறைவான கலோரி எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளில் முதலிடம் பிடிப்பது. நீங்கள் சாப்பிடும் கூடுதல் கலோரியின் அளவு குறைந்திடும். இதனால் ஏற்கனவே இருக்கும் கலோரி முதலில் கரைக்கப்படும். அதன் பிறகு நீங்கள் குறைவான உணவுகளையே சாப்பிடப்போவதால் உடல் எடை குறைந்திடும்.

சர்க்கரையளவு :

சர்க்கரையளவு :

உங்கள் உடலின் ரத்தச் சர்க்கரையளவு சீராக பராமரிக்க இது உதவிடும். நாள் முழுமைக்கும் உங்களுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பது உங்கள் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் தான். இது சீரான அளவில் பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

நீங்கள் மூன்று வேலை மட்டும் உணவு சாப்பிடுகிறீர்கள் என்றால் அப்படி நீங்கள் சாப்பிடும் நேரத்தில் திடீரென ரத்தச் சர்க்கரையளவு அதிகரிப்பதும். மற்ற நேரத்தில் குறைவதும் தொடரும்.

மெட்டபாலிசம் :

மெட்டபாலிசம் :

உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கிட அது உதவுகிறது.நீங்கள் சாப்பிடும் உணவு செரிப்பதில் துவங்கி, எல்லா உள்ளுருப்புகளின் செயல்பாடுகளுக்கும் மெட்டபாலிசம் என்பது மிகவும் அவசியமாகும்.

நீயூட்ரிசியன்கள் :

நீயூட்ரிசியன்கள் :

உடலில் ஏற்படக்கூடிய சத்துப் பற்றாகுறை ஏற்படுத்தாமல் இது தடுத்திடும். குறைவான உணவு எடுப்பதனால்,உடலில் சத்துக்குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். எல்லா நேரமும் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைப்பதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உங்கள் வேலையை செய்ய முடியும்.

நமக்கு நாமே :

நமக்கு நாமே :

வேலைக்குச் செல்பவராக இருந்தால் உங்களுக்கான உணவை நீங்களே பேக் செய்திடுங்கள். இந்த உணவை நீங்கள் வயிறு முட்டும் அளவிற்கு சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

உணவு மட்டுமல்ல ஸ்நாக்ஸ் கூட நீங்களே எடுத்து வைக்கலாம். இப்படி வைக்கும் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? இதற்கு முன்னால் இருந்த அளவினை விட இப்போது நீங்கள் எடுத்து வைத்திருக்கும் உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும்.

குறைக்க மட்டுமே :

குறைக்க மட்டுமே :

உணவை குறைக்க வேண்டும் என்று சொன்னதும் உணவையே சாப்பிடாமல் தவிர்த்து விடாதீர்கள். இப்படி உணவை ஸ்கிப் செய்வதில் தான் பிரச்சனையே துவங்குகிறது.

நாம் சாப்பிடும் உணவின் அளவை குறைக்க வேண்டுமே தவிர முற்றிலுமாக தவிர்க்க கூடாது.

சீனர்கள் பாணி :

சீனர்கள் பாணி :

நாமாக என்ன தான் செய்ய நினைத்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் உண்டாகும். அதற்காக சீனர்கள் பின்பற்றிய வழக்கத்தை நீங்கள் தொடரலாம் .

அதென்ன சீனர்களின் பாணி என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் சாப்பிடக்கூடிய முக்கிய உணவின் தட்டு சிறியதாகவும் சைடிஷ்ஷாக எடுத்துக் கொள்ளும் காய்கறி வைக்கும் தட்டு அளவில் பெரிதாகவும் இருக்க வேண்டும்.

அளவு :

அளவு :

கணக்கிடுங்கள்.ஆம் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவையும் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை மெஷரிங் கப் கொண்டு அளவெடுக்கலாம். இது நீங்கள் சாப்பிடும் அளவை உங்களிடம் காட்டிக் கொண்டேயிருப்பதால் நீங்கள் சாப்பிடும் உணவின் அளவைக் குறைக்க இது வசதியானதாக இருக்கும்.

உனக்கும் எனக்கும் :

உனக்கும் எனக்கும் :

இது உங்கள் மனதை ஏமாற்றும் கலை என்பதால் கொஞ்சம் கவனமாக கையாளவும். ஒரு தட்டில், அது எவ்வளவு பெரிய தட்டாக இருந்தாலும் அது பாதியளவு மட்டுமே உணவு இருக்க வேண்டும்

அந்த ஒரு பகுதி பாதியில் உங்களுடைய உணவை மட்டும் வைத்துச் சாப்பிடுங்கள்.

தண்ணீர் :

தண்ணீர் :

இது உணவு சம்பந்தப்பட்டது இல்லையென்றாலும் உடல் எடை குறைக்க நீங்கள் அதிகரிக்கவேண்டிய ஓர் விஷயம் நிறையத் தண்ணீர் குடிப்பது. உடலில் இருக்கும் பிற உறுப்புகள் துரிதமாக செயல்பட உதவுகிறது. குறிப்பாக, நாம் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணமாக்க உதவுகிறது.

இதனால் உங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்கள் துரிதமாக கிடைத்திடும்.

என்னாகும்? :

என்னாகும்? :

அதிகப்படியான உணவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்னாகும் தெரியுமா? ஒரே நேரத்தில் திடீரென சத்து அதிகரிப்பதும். அவை செரிக்கப்பட்டதும் உடலின் குளுக்கோஸ் அளவு குறைவதும் நடக்கும்.

திடீரென ரத்தச் சர்க்கரையளவு குறைவது, திடீரென அதிகரிப்பது ஆகியவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

செரிமானம் :

செரிமானம் :

வயிறு முட்டச் சாப்பிட்டு உடல் உழைப்பு அதிகமாக இல்லாமல் இருப்பதனால் உணவு செரிப்பதில் பிரச்சனை உண்டாகும். அந்த உணவு செரிப்பதற்குள்ளேயே மேலும் மேலும் உணவு எடுத்துக் கொள்வதால் , கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கும்.

உடல் எடை அதிகரிப்பதுவே நம் உடலின் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக அமைந்திடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits of Eating Smaller portions

Benefits of Eating Smaller portions