For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூங்குவதற்கு முன்னால் எலுமிச்சை கலந்த நீர் குடிப்பதினால் உண்டாகும் நன்மைகள்!

இரவுகளில் எலுமிச்சை கலந்த நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று தெரியுமா?

|

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த வெது வெதுப்பான நீரைக் குடிப்பதனால் ஏராளமான நன்மைகள் ஏற்படும் என்று நமக்குத் தெரியும். அதைப் பற்றிய ஏரளமான தகவல்களை படித்திருப்போம்.

சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதை விட இரவு படுக்கச் செல்வதற்கு முன்னால் குடித்தால்? என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா???

இரவு உணவு முடித்த ஒரு மணி நேரம் கழித்து சூடான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் எலுமிச்சை சாறு குடிப்பதா? என்று அச்சம் கொள்ளாதீர்கள் இது ஏரளமான நன்மைகள் நமக்கு தரக் காத்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் இரவுகளில் :

ஏன் இரவுகளில் :

பகலில் எலுமிச்சை கலந்த நீரைக் குடிப்பதை விட இரவு நேரத்தில் குடிக்கும், குறிப்பாக தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு குடிக்கக்கூடிய எலுமிச்சை நீரில் ஏரளமான நன்மைகள் இருக்கின்றன.

எலுமிச்சையில் பொதுவாகவே ஏராளமான நியூட்ரிசியன்கள், விட்டமின்ஸ்கள் நிறம்பியிருக்கிறது. இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரவு நேரத்தில் குடிப்பதால் நம் உடலில் விட்டமின் சி யை அதிகமாக தூண்டும். அதோடு நம் உடலில் இருக்ககூடிய நச்சினை விரைவில் வெளியேற்றும்.

தூக்கம் :

தூக்கம் :

ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். சராரசியாக ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டியது கட்டாயம்.

நாள் முழுமைக்கும் நடக்கிற வேலைப் பளூ மற்றும் டென்ஷன் காரணமாகவும், மொபைல் போன் நோண்டுவது, அதிக நேரம் பேஸ்புக் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் இரவுத் தூக்கம் என்பது பலருக்கும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அவர்களுக்கு இந்த எலுமிச்சை கலந்த நீர் குடிப்பது மிகவும் நல்ல தூக்கத்தை கொடுத்திடும்.

எனர்ஜி :

எனர்ஜி :

உடலில் இருக்கும் செல்களை எல்லாம் புத்துணர்வு ஊட்டி துரிதமாக செயல்பட வைத்திடும். இதனைக் குடிப்பதால் மறுநாள் நீங்கள் உற்சாகத்துடன் நாளை எதிர்கொள்வீர்கள்.

தசைகள், எலும்புகள் எல்லாம் வலுப்பெறும். ஹார்மோன் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

 இன்சோமேனியா :

இன்சோமேனியா :

இன்சோமேனியா எனப்படுவது ஒருவகை தூக்கமின்மை வியாதி தான். இதற்கு உங்களது அன்றாட பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை , நீங்கள் சாப்பிடும் உணவுகள், மன அழுத்தம், சத்துக்குறைபாடு போன்றவையே காரணமாக சொல்லப்படுகிறது.

இப்படியான எந்தப் பிரச்சனை இருந்தாலும் இரவில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் தூக்கம் வருவது சாத்தியப்படும்.

கலோரி :

கலோரி :

எலுமிச்சைத் தண்ணீரில் இருக்கும் ஆற்றல் இயற்கையாகவே கலோரி கரைத்திடும். இதில் டயட்டரி ஃபைபர் அதிகம் இருக்கிறது. இதனை நீங்கள் குளிர்ந்த நீரிலும், வெதுப்பான நீரிலும் கலந்து குடிக்கலாம்.

அதைப் பொறுத்து உங்களுடைய கலோரி கரைக்கப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

எலுமிச்சையில் 187 சதவீதம் விட்டமின் சி ந்றைந்திருக்கிறது. இதனை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைத்திடும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க விட்டமின் சி மிகவும் அவசியமான ஒன்று.

பாக்டீரியா :

பாக்டீரியா :

நம் உடலில் ஏற்படுகிற பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு காரணம் பாக்டீரியா தான். எலுமிச்சை கலந்த நீரினை குடிப்பதால் உடலில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களை அழித்திடும். இதனால் உடலில் ஏற்படும் நோய்த் தொற்று அபாயங்கள் குறைந்திடும்.

நீர்ச்சத்து :

நீர்ச்சத்து :

உடலில் இருக்கும் செல்கள் துரிதமாக செயற்பட வேண்டுமானால் உடலில் தண்ணீர்ச் சத்து மிகவும் அவசியமான ஒன்று. நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீரை குடிக்கிறீர்களா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

அதோடு நீங்கள் இரவில் குடிக்கும் எலுமிச்சை கலந்த நீர் குடிப்பதினால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து உங்கள் உடல் ஹைட்ரேட்டடாக இருக்கும்.

செரிமானம் :

செரிமானம் :

நீங்கள் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானம் ஆக, தண்ணீர்ச்சத்து மிகவும் தேவை. குறிப்பாக இரவு நேரத்தில் எந்த உடல் உழைப்பு இல்லாததினால் இதனை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் எலுமிச்சை கலந்த நீரைக் குடிப்பதினால் உங்களின் செரிமானத்தை இது தூண்டுகிறது.

சோர்வு :

சோர்வு :

என்ன தான் சத்தான ஆகரங்களாக சாப்பிட்டாலும், நம் உடலில் இருக்ககூடிய நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாவினால் அவை நம் உடலில் சேராமல் அப்படியே கரைந்திடவும் வாய்ப்புண்டு. இதனைத் தவிர்க்க தினமும் இரவில் எலுமிச்சை சாறு கலந்த நீரைக் குடிக்கலாம்.

இது நம் உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் நல்ல மாற்றத்தை காண முடியும். அதோடு நாள் முழுவதும் சோர்வில்லாமல் இருப்பீர்கள்.

நச்சுக்கள் :

நச்சுக்கள் :

எலுமிச்சையில் இருக்கக்கூடிய சத்துகள், நம் உடலில் சேருகின்ற டாக்சின்களை வெளியேற்றும். இது அதிகப்படியாக சேர்ந்தால் நம் உடல் மிகவும் சோர்வுற்று காணப்படும். இதனை வெளியேற்ற இரவில் நீங்கள் குடிக்கும் எலுமிச்சை சாறு கலந்த நீர் நல்ல பலன் கொடுக்கிறது.

வியர்வை :

வியர்வை :

உடலிலிருந்து வியர்வை வெளிவருவது நல்லது தான். அப்படி உங்கள் உடலில் சேரும் நச்சுக்கள் வெளியாகும்.இப்படி வியர்வை வெளிவருவதால் உங்கள் உடல் டெம்ப்பரேச்சர் சராசரியாக மெயிண்டெயின் செய்ய உதவிடும்.

அதோடு நம் உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பையும் இது நீக்குகிறது.

எப்படி குடிக்கலாம் :

எப்படி குடிக்கலாம் :

இந்த எலுமிச்சை நீரின் முழுமையான பலனை அனுபவிக்க வேண்டும் என்றால் ஃப்ரஷ்ஷான பழத்தையே பயன்படுத்துங்கள். மாறாக ஒரு வாரத்திற்கு தேவையான எலுமிச்சை சாறு எடுத்து ப்ரிட்ஜில் வைப்பது. அல்லது ரெடிமேடாக கிடைக்கக்கூடிய எலுமிச்சை சாறு பாட்டிலை வாங்கி பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள்.

எந்த நீர் :

எந்த நீர் :

எலுமிச்சை நீர் தானே.... இன்று ஒரு நாள் மட்டும், அவசரத்திற்கு என்றோ அல்லது சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டோ ஒரு நாள் குளிர்ந்த நீரில் குடிப்பது, ஒரு நாள் வெதுவெதுப்பான நீரில் குடிப்பது என்று மாற்றி மாற்றி செய்யாதீர்கள்.

உங்களுக்கு என்னப்பிரச்சனையோ அதற்கு தகுந்தாற் போல தொடர்ந்து ஒரே மாதிரியான நீரை குடிக்க வேண்டியது அவசியம்.

குளிர்ந்த நீர் :

குளிர்ந்த நீர் :

வெயில் காலங்களில் குளிர்ந்த நீரில் எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. சில நேரங்களில் இது செரிமானக்கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். இரவு நேரத்தில் நார்மலாகவே கூல் க்ளைமேட் இருக்கும் என்பதால் சிலருக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.

வெதுவெதுப்பான நீர் :

வெதுவெதுப்பான நீர் :

இது நார்மலான தண்ணீர், அல்லது ரூம் டெம்ப்பரேச்சரைக் கொண்டது என்று சொல்லலாம். வேண்டுமானால் லேசாக இளஞ்சூடாக சூடாக்கி குடிக்கலாம். இப்படிக் குடிப்பது தான் மிகவும் நல்லது.

அதிக சூடான நீரில் எலுமிச்சை கலந்து குடிக்க வேண்டாம். இதில் சர்க்கரை சேர்க்காதீர்கள். அரை ஸ்பூன் அளவு தேன் மட்டும் தேவையென்றால் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of Drinking Lemon Water Before Bed

Benefits of Drinking Lemon Water Before Bed
Story first published: Wednesday, December 13, 2017, 16:54 [IST]
Desktop Bottom Promotion