For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உட்கார நாற்காலிக்கு பதிலாக உடற்பயிற்சி பந்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

இங்கு உட்கார நாற்காலிக்கு பதிலாக உடற்பயிற்சி பந்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

நாம் உட்கார பயன்படுத்தும் நாற்காலி நன்றாக இல்லாவிட்டால், அது நாம் உட்காரும் நிலையை பாதிக்கும். நாம் உட்காரும் நிலை மோசமாக இருந்தால், அது நமது உடலமைப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும். தற்போது நாற்காலிக்கு பதிலாக உடற்பயிற்சி பந்தை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இக்கட்டுரையில் நாற்காலிக்கு பதிலாக உடற்பயிற்சி பந்தை உட்கார பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எச்சரிக்கை:

* உடற்பயிற்சி பந்தை பயன்படுத்தும் முன் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ள வேண்டும்.

* காலையில் எழுந்த உடனேயே உடற்பயிற்சி பந்தில் அமர வேண்டாம். முக்கியமாக தூக்க கலக்கத்தில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிலை தடுமாறி விழ நேரிடும்.

* உடற்பயிற்சி பந்தை பயன்படுத்தும் ஆரம்ப காலத்தில், எடுத்த உடனேயே நீண்ட நேரம் அமராமல் இடைவெளி விட்டு விட்டு அமருங்கள். இதனால் உடல் அந்த பந்தை பயன்படுத்த பழகிக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

உடற்பயிற்சி பந்தில் அமர்வதால் தண்டுவட எலும்புகள் ஒரு நல்ல நிலைக்கு வரும். ஒருவேளை பந்து ஒரே நிலையில் இல்லாமல் இருந்தாலும், உடல் தன்னைத் தானே நிலையாக வைத்துக் கொள்ள முயற்சிக்கும். இதன் மூலம் தண்டுவடம் ஆரோக்கியமாகவும், முதுகு வலி வருவதும் தடுக்கப்படும்.

நன்மை #2

நன்மை #2

எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது நல்ல பலனை வழங்கும். அதுவும் இந்த பந்தில் அமரும் போது உடலின் தொடர்ச்சியான இயக்கத்தால், அதிகளவு கலோரிகளை எரிக்க உதவும். இதன் மூலம் நீண்ட நாட்கள் பிட்டாக இருக்கலாம்.

நன்மை #3

நன்மை #3

நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது நகரவே தோன்றாது. ஆனால் உடற்பயிற்சி பந்தில் அமர்ந்தால், லேசாக அசைந்தாலும், உடல் தன்னைத் தானே நிலையாக வைத்துக் கொள்வதற்கு எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கும். மேலும் இந்த பந்தில் அமரும் போது, அடிக்கடி நமது நிலையை மாற்ற வேண்டியிருக்கும்.

நன்மை #4

நன்மை #4

நாற்காலியில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமரும் போது, அது உடலில் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். ஆனால் உடற்பயிற்சி பந்தைப் பயன்படுத்தும் போது, அது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

நன்மை #5

நன்மை #5

உடற்பயிற்சி பந்தை பயன்படுத்த ஆரம்பித்த பின், உடல் எப்போதும் தன்னைத் தானே நிலையாக இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கும். மேலும் உடலை நிலையாக வைத்துக் கொள்ள தசைகளும் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.

நன்மை #6

நன்மை #6

இந்த பந்தை பயன்படுத்துவது, உடற்பயிற்சி செய்ததற்கு சமம். இந்த பந்தை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டால், வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. வீட்டிலேயே தேவையான நேரத்தில் அவற்றைக் கொண்டு ஸ்ட்ரெட்ச்சிங் செய்து கொள்ளலாம்.

நன்மை #7

நன்மை #7

ஆப்ஸ் வைக்க நினைப்பவர்கள், இந்த பந்தில் அமரும் பழக்கத்தைக் கொள்வது நல்லது. எப்படியெனில், இந்த பந்தில் அமரும் போது, ஓரிடத்தில் நிலையாக இருக்க அடிவயிற்று தசைகளை கடுமையான வேலையில் ஈடுபடுத்தும். இதன் மூலம், எளிதில் ஆப்ஸைப் பெறலாம்.

நன்மை #8

நன்மை #8

பொதுவாக நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் போது, மிகுந்த அசதியை உணரக்கூடும். ஆனால் உடற்பயிற்சி பந்தைப் பயன்படுத்தும் போது, அது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

After Reading This, You Will Start Using An Exercise Ball As A Chair

There are so many benefits of using an exercise ball as a chair. It can even prevent back pain. Here are other benefits.
Desktop Bottom Promotion