For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில கை வைத்தியங்கள்!

இங்கு ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

ஒவ்வொருவருக்குமே ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை கை வைத்தியங்களின் மூலம் பாதுகாத்து வந்தனர். நாளடைவில் கை வைத்தியத்தின் பயன்பாடு குறைந்து, கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளின் மூலம் உடல்நலத்தைப் பாதுகாத்து வருகின்றனர்.

என்ன தான் கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளால் உடல்நல பிரச்சனைகளை சரிசெய்ய முயற்சித்தாலும், ஒரு கட்டத்தில் அவற்றால் கட்டாயம் பக்கவிளைவுகளை சந்திக்கக்கூடும். ஆனால் இயற்கை வழங்கிய பொருட்களால் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், அப்பிரச்சனை நீங்குவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

20-Best Home Remedies For Good Health Everyone Should Know

இன்றைய தலைமுறையினர் பலருக்கு பொதுவாக நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கான கை வைத்தியங்கள் குறித்து தெரியாமல் இருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு நம் பாரம்பரிய கை வைத்தியங்களை தமிழ் போல்ட் ஸ்கை கீழே தெரியப்படுத்தியுள்ளது.

அதைப் படித்து அவற்றை தெரிந்து கொண்டு, அன்றாடம் சந்திக்கும் சில பொதுவான உடல்நல பிரச்சனைகளை அந்த கை வைத்தியங்களின் மூலம் தீர்வு காணுங்கள். சரி, இப்போது எந்த பிரச்சனைக்கு எம்மாதிரியான கை வைத்தியங்களை மேற்கொள்ள வேண்டும் என காண்போமா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைத்தியம் #1

வைத்தியம் #1

குறைவான இரத்த அழுத்த பிரச்சனையா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸைக் குடியுங்கள். இதனால் குறைவான இரத்த அழுத்த பிரச்சனை சரியாகி, இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.

வைத்தியம் #2

வைத்தியம் #2

அசிடிட்டி பிரச்சனை இருக்கிறதா? இதற்கான சிறப்பான இயற்கை வைத்தியம் உணவு உட்கொண்ட பின் சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இது சிறந்த ஆன்டாசிட்டாக மட்டும் செயல்படாமல், உண்ட உணவில் உள்ள சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு, அல்சர் வருவது தடுக்கப்படும்.

வைத்தியம் #3

வைத்தியம் #3

அசிடிட்டி பிரச்சனைக்கான மற்றொரு சிறப்பான கை வைத்தியம், உணவு உண்ட பின் ஒரு துண்டு கிராம்பை வாயில் போட்டு சிறிது நேரம் வைத்து, அதன் சாற்றினை விழுங்குங்கள்.

வைத்தியம் #4

வைத்தியம் #4

வயிற்று பிரச்சனைகளால் கஷ்டப்படுபவர்கள், தினமும் காலையில் ஒரு துண்டு பூண்டு எடுத்து வாயில் போட்டு மென்று விழுங்கி, ஒரு டம்ளர் நீரைக் குடிக்க, வயிறு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் சரியாகும்.

வைத்தியம் #5

வைத்தியம் #5

கோடை வெயிலால் ஏற்படும் கடுமையான தலைவலிக்கு தர்பூசணி ஜூஸ் ஓர் நல்ல நிவாரணியாக இருக்கும். அதுவும் கோடைக்காலத்தில் தினமும் ஒரு டம்ளர் தர்பூசணி ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.

வைத்தியம் #6

வைத்தியம் #6

ஒற்றைத் தலைவலியால் கஷ்டப்படுபவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிட விடுபடலாம். அதுவும் சில நாட்கள் இம்மாதிரி சாப்பிட்டால், ஒற்றை தலைவலியில் இருந்து முற்றிலும் விடுபட வாய்ப்புள்ளது.

வைத்தியம் #7

வைத்தியம் #7

6 பேரிச்சம்பழத்தை 1/2 லிட்டர் பாலில் போட்டு, குறைவான தீயில் 25 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, தினமும் மூன்று கப் குடித்து வர, வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.

வைத்தியம் #8

வைத்தியம் #8

2 டீஸ்பூன் இஞ்சி சாறுடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்து வர, உடலில் உள்ள சளி உருகி வெளியேற உதவுவதோடு, இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

வைத்தியம் #9

வைத்தியம் #9

நாள்பட்ட மலச்சிக்கல் அல்லது செரிமான பிரச்சனையை சந்திப்பவர்கள், காலை உணவு உண்பதற்கு முன் 1/2 கப் வேக வைத்த பீட்ரூட்டை சாப்பிட, இப்பிரச்சனை முற்றிலும் நீங்கும்.

வைத்தியம் #10

வைத்தியம் #10

6 வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் 4 டேபிள் ஸ்பூன் தேனை ஊற்றி மூடி வைத்து, சுடுநீர் பாத்திரத்தில் 2 மணிநேரம் வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை 1 டேபிள் ஸ்பூன் சாப்பிட, இருமலில் இருந்து விடுபடலாம்.

வைத்தியம் #11

வைத்தியம் #11

வெள்ளரிக்காயை துருவி முகம், கண்கள் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் விரைவில் மறையும்.

வைத்தியம் #12

வைத்தியம் #12

இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் பாலில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வர, உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகை சீக்கிரம் குணமாகும்.

வைத்தியம் #13

வைத்தியம் #13

கருவளையங்கள் விரைவில் நீங்க 2 ஸ்பூன் தக்காளி பேஸ்ட் உடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 சிட்டிகை கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 10-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை மேற்கொள்ள கருவளையம் சீக்கிரம் போய்விடும்.

வைத்தியம் #14

வைத்தியம் #14

தொண்டைப் புண்ணிற்கான மிகச்சிறந்த கை வைத்தியம் மஞ்சளும் உப்பும் ஆகும். அதற்கு 1/2 கப் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, வாய் கொப்பளிக்க வேண்டும். பின் குறைந்தது 1/2 மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்தால், தொண்டை புண் விரைவில் குணமாகும்.

வைத்தியம் #15

வைத்தியம் #15

காதுகளில் தொற்றுக்களால் வலியை உணர்ந்தால், ஒரு துளி பூண்டு சாற்றினை ஊற்றுங்கள். இதனால் காது வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வைத்தியம் #16

வைத்தியம் #16

வியர்வையினால் அக்குள் பகுதியில் கடுமையான துர்நாற்றம் ஏற்படுகிறதா? அதிலிருந்து விடுபட பேக்கிங் சோடாவை எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அக்குள் பகுதியில் தடவுங்கள்.

வைத்தியம் #17

வைத்தியம் #17

வாய்வு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? இயற்கை வழியில் இதிலிருந்து விடுபட நீரில் சிறிது சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்க வாய்வு பிரச்சனை நீங்கும். இல்லாவிட்டால் உணவு உண்ட பின் சிறிது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். இதுவும் வாய்வு பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

வைத்தியம் #18

வைத்தியம் #18

தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் குமட்டல், நெஞ்செரிச்சல், செரிமான பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும்.

வைத்தியம் #19

வைத்தியம் #19

ஹேங்ஓவரில் இருந்து விடுபட வாழைப்பழ மில்க் ஷேக்குடன் தேன் கலந்து குடிக்க உடனடி பலன் கிடைக்கும். எப்படியெனில் குளிர்ந்த பால் வயிற்று சுவர் பகுதியை குளுமையடையச் செய்யும் மற்றும் வாழைப்பழம் மற்றும் தேன் இறங்கியுள்ள இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

வைத்தியம் #20

வைத்தியம் #20

இருமல் அதிகம் உள்ளதா? அப்படியென்றால் துளசி சாறு மற்றும் பூண்டு சாற்றினை ஒன்றாக கலந்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து தினமும் மூன்று மணிநேரத்திற்கு 1 முறை 1 டீஸ்பூன் சாப்பிட கடுமையான இருமல் சரியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20-Best Home Remedies For Good Health Everyone Should Know

Here are some best home remedies for good health everyone should know. Read on to know more...
Story first published: Monday, December 4, 2017, 10:44 [IST]
Desktop Bottom Promotion