For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கே தெரியாமல் உடல் எடை அதிகரிக்க இவை தான் காரணம்!!

|

அதிகமான அளவு உணவும், குறைந்த அளவு உடற்பயிற்சியும் தான் உடல் எடை அதிகரிக்க காரணம் என்று நூறு சதவீதம் கூறிவிட முடியாது. நமது உடலில் இருக்கும் சில ஹார்மோன்களும் கூட நமது உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

லெப்டின், இன்சுலின் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களில் ஏற்படும் எதிர்ப்பு மாற்றங்கள் உடலில் கொழுப்பு செல்கள் அல்லது கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக திகழ்கிறது. எப்படி இந்த ஹார்மோன்களில் எதிர்ப்பு மாற்றங்கள் ஏற்படுகின்றன? அவற்றால் எப்படி உடல் எடை அதிகரிக்கிறது என இனிக் காண்போம்....

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெப்டின்

லெப்டின்

லெப்டின் என்பது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன் ஆகும். இது போதுமான கொழுப்பு அல்லது உடற்சக்தி இருக்கிறது என மூளைக்கு சிக்னல் அனுப்பி நமது பசியை கட்டுப்படுத்தும்.

லெப்டின் எவ்வாறு செயல்படுகிறது

லெப்டின் எவ்வாறு செயல்படுகிறது

கொழுப்பு அதிகமாகும் போது லெப்டின் அளவு அதிகரித்து, குறைந்த உணவை உட்கொள்ள செய்கிறது. கொழுப்பு குறையும் போது பசியை இதுதூண்டுகிறது.

லெப்டின் எப்படி உடல் எடையை அதிகரிக்கிறது

லெப்டின் எப்படி உடல் எடையை அதிகரிக்கிறது

நமது உடலில் லெப்டின் அளவு சரியாக இருக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. இதே, நமது உடல் லெப்டின்-க்கு எதிராக செயல்படும் போது மூளைக்கு செல்லும் பசி குறித்த சிக்னல் தடைப்பட்டு உடல் எடை அதிகரிக்கிறது.

இன்சுலின் வேலை

இன்சுலின் வேலை

இன்சுலின் எனும் ஹார்மோனின் வேலையே, இரத்த ஓட்டத்தில் இருக்கும் குளுக்கோஸைப் பிரித்து, அவற்றை குழுப்பாக சேமிப்பது ஆகும்.

இன்சுலின் எப்படி உடல் எடையை அதிகரிக்க செய்கிறது

இன்சுலின் எப்படி உடல் எடையை அதிகரிக்க செய்கிறது

உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, மூளைக்கு செல்லும் லெப்டின் சிக்னல் தடைப்படுகிறது. இதனால் மூளைக்கு போதுமான அளவு உடற்சக்தி இருக்கிறது என்பது தெரியாமல் போய்விடுகிறது.

இன்சுலின் அதிகரிப்பு

இன்சுலின் அதிகரிப்பு

நாம் அதிகமாக கார்ப்ஸ் உணவு உட்கொள்ளும் போது உடலில் இன்சுலின் எதிர்ப்பு தன்மை ஏற்படுகிறது. இதனால் கணையத்தில் கோளாறு ஏற்பட்டு அதிகமான இன்சுலின் தேவைப்படுகிறது என்ற நிலை மாற்றம் வருகிறது. அதிகமான இன்சுலின் உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.

டெஸ்டோஸ்டிரோன்

டெஸ்டோஸ்டிரோன்

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஓர் பாலியல் ஹார்மோன். இதுதான் ஆண்கள் ஆணாக உருவாக காரணியாக இருக்கிறது. பெண்களின் உடலிலும் இது சிறிதளவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

டெஸ்டோஸ்டிரோன் உதவி

டெஸ்டோஸ்டிரோன் உதவி

உடற்பயிற்சி செய்து உடலை வலிமையாக்கும் போது டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது. கொழுப்பும் குறைகிறது. மேலும் இதன் மூலமாக உடலுறவு வாழ்க்கை சிறக்கும்.

டெஸ்டோஸ்டிரோன் எப்படி உடல் எடையை அதிகரிக்க செய்கிறது

டெஸ்டோஸ்டிரோன் எப்படி உடல் எடையை அதிகரிக்க செய்கிறது

தசை வளர்ச்சியில் டெஸ்டோஸ்டிரோன் முதன்மை ஹார்மோனாக செயல்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருக்கும் போது தசை வளர்ச்சி அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும். டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் போது தசை வளர்ச்சி குறைந்து கொழுப்பு அதிகரிக்க இது காரணமாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Really Makes Us Fat

Do you know What Really Makes Us Fat? Read here in Tamil,
Desktop Bottom Promotion