கீழ்முதுகை வலுப்படுத்தும் விபரீத சலபாசனம் செய்யத் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

அதிக நேரம் அழுத்தம் தந்து அமர்ந்து கொண்டிருக்கும்போது கீழ் முதுகிற்கு அதிக சிரமம் தரப்படுவதால் அங்கே தசை மற்றும் எலும்பு பாதிக்கப்படுகிறது.

இதனால் அடிக்கடி வலி, உட்காரும்போது நிற்கும்போதும் சுளுக்கு போன்று பிடிப்பு ஆகியவை உண்டாகும்.

கீழ் முதுகிற்கு போதிய பயிற்சி அளிக்கப்படுபோது, ரத்த ஓட்டம் அதிகம் பாய்ந்து பாதிப்படைந்த செல்களை ரிப்பேர் செய்கிறது.

அதோடு பலப்படுத்தவும், வலியை போக்கவும் யோகாவில் சில ஆசனங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் விபரீத சலபாசனம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விபரீத சலபாசனம் :

விபரீத சலபாசனம் :

விபரீத என்றால் சமஸ்கிருதத்தில் எதிர்ப்பதம் அல்லது மாறாக. சலப என்றால் குறிப்பிட்ட இடம் என்று பொருள். இந்த யோகா பல நன்மைகளை தருகிறது. குறிப்பாக கீழ் முதுகை பலப்படுத்தும். முதுகு வலியை போக்கும். எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை :

செய்முறை :

முதலில் தரையில் குப்புற படுத்துக் கொள்ளுங்கள். பாத விரல்களை தரையோடு பதியுங்கள். கைகளை முன்னாடி நீட்டிக் கொள்ளுங்கள்.

செய்முறை

செய்முறை

பின் மெதுவாக மூச்சை ஆழ்ந்து இழுத்து வெளியிட்டபடியே கைகளை படுத்தபடியே நீராக உயர்த்துங்கள். மெதுவாக உடலையும் உயர்த்த வேண்டும். கால்களையும் உயர்த்த வேண்டும்.

செய்முறை

செய்முறை

இப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடலை வளையுங்கள். இப்போது வயிறு மட்டும் தரையில் இருக்க வேண்டும்.

சில நிமிடங்கள் அதே நிலையில் நன்றாக நிதானமாக மூச்சை விட்டபடி இருக்க வேண்டும். பிறகு இயல்பு நிலைக்கு வரவும்.

பலன்கள் :

பலன்கள் :

கீழ்முதுகிற்கு, இடுப்பிற்கு பலன் தருகிறது. மார்புக் கூடை விரிவடையச் செய்கிறது. தோள்பட்டைக்கு பலம் தருகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.

குறிப்பு :

குறிப்பு :

வயிறு, முதுகில் அறுவை சிகிச்சை நடந்திருந்தால் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். அதேபோல் கர்ப்பிணிகளும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

viparetha shalabasana to strengthen lower back

Viparitha shalabasana to strengthen lower back muscles.
Story first published: Friday, October 7, 2016, 8:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter