பலமான முதுகுத் தண்டுவடம் கிடைக்க செய்யுங்கள் இந்த யோகாவை !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

முதுகு பலம் உங்கள் ஆரோக்கியத்தின் முக்கிய சான்று. முதுகுத் தண்டில் மூளையின் முக்கிய நரம்புகள் ஒன்று சேரும் இடம். அதேபோல் கால் தசைகளின் இயக்கத்திற்கும் தேவையான சக்தியை முதுகுத் தண்டு தருகிறது.

ஆகவேதான் முதுகுத் தண்டில் பலத்த அடிபட்டாலோ, அல்லது அறுவை சிகிச்சை செய்தாலோ, கவனமுடன் மருத்துவர்கள் கையாள்கிறார்கள். முதுகுத் தண்டை மிக்க உறுதியாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது நமது கடமை. அப்படி பாதுகாப்பாக வைத்திருக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூனில்லா முதுகு :

கூனில்லா முதுகு :

வயதானதும் முதுகுப் பிரச்சனைகள் வருவதற்கு மிக முக்கிய காரணம் தவறான முறையில் கூன் போட்டு அமர்வதால்தான். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது தெளிவான உண்மை. முதுகை, முன்னும்பின்னும் வளைத்து பயிற்சி தரப்படுவதால் அதிக ரத்த ஓட்டம் பாயும். நெகிழ்வுத்தன்மை உண்டாகும்.

அது தவிர சிறு வயதிலிருந்தே நிமிர்ந்து அமரும்படி குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். பெரியவர்களும் ஒருபக்கம் சாய்ந்து அமருவதோ, கூன் போட்டு அமருவதோ பின்னாளில் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு பிரச்சனைகளை உண்டாக்கும்.

யோகா :

யோகா :

இப்போது போதிய அளவு உடலுக்கு தேவையான உழைப்பை தராமலிருப்பதால்தான் பிரச்சனைகள் தோன்றுகின்றன. இப்போது மாறிவிட்ட வாழ்க்கை முறைதான் காரணம் . இதற்காக அப்படியே இருந்துவிட்டால் தீராத பிரச்சனைகளைத் தரும். வீட்டில் இருந்தபடியே யோகாவைச் செய்வதால் பலப்பல நோய்களை நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம்.

குறைந்தது 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் போதும். அப்படி உங்கள் முதுகுத் தண்டை பலம் பெறச் செய்யும் யோகாதான் உத்தனாசனா.

 உத்தனாசனா :

உத்தனாசனா :

முதலில் நேராக நின்றுகொள்ளுங்கள். கால்களை வளைக்காமல் நிமிர்ந்து நின்று மூச்சை ஆழ்ந்து இழுத்து, மெதுவாக விட வேண்டும்.

 உத்தனாசனா :

உத்தனாசனா :

பின்னர் கைகளை முன்னோக்கி நீட்டியவாறு மெதுவாக குனியுங்கள். மார்பும், வயிறும் தொடை மீது படும்படி முழுவதும் குனிந்து, உள்ளங்கைகளை தரையில் பதியுங்கள். கைகள் இரண்டும் தம்தம் பாதங்களுக்கு பக்கவாட்டில் இருக்கும்படி வைத்திருங்கள். கால்களை வளைக்கக் கூடாது.

சில நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும். இந்த நிலையில் மூச்சை இழுத்து விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்யலாம்.

பலன்கள் :

பலன்கள் :

முதுகுத் தண்டு பலம் பெறும். தொடை, கால்கள் உறுதி பெறும். வயிற்றிலுள்ள கொழுப்பு கரையும். சிறு நீரகம் தூண்டப்படும். மன அமைதி பெறும். மன அழுத்தம் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Uttanasana to strengthen The Spine

Uttanasana to strengthen The Spine
Story first published: Tuesday, September 6, 2016, 11:07 [IST]
Subscribe Newsletter