இந்த 6 அறிகுறிகளும் உங்களுக்கு இரும்பு சத்து போதவில்லை என்று சொல்கிறது!!

Written By:
Subscribe to Boldsky

நமது உடலில் ஒவ்வொரு மூலக்கூறும், சத்துடன் சேர்ந்து கூட்டணி வைத்திருக்கும்.

அவ்வகையில் ஹீம் என்ற மூலக்கூறு இரும்புடன் சேர்ந்து ஹீமோகுளோபின் என்ற அணுவை உண்டாக்குகிறது.

Symptoms of Iron deficiency

ஹீம்தான் ஆக்ஸிஜனை கடத்தி உடல் முழுவதும் அனுப்புகிறது. அதனால்தான் நீங்கள் சுறுசுறுப்புடன் இருக்கிறீர்கள்.

இரும்பு சத்து குறையும் போது ஹீமோகுளோபின் உற்பத்தியும் குறைந்து ரத்த சோகை உண்டாகிறது. உங்களுக்கு இரும்பு சத்து குறைவு என்பதை எப்படி அறிந்து கொள்ளலாமென தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மண் சாப்பிட தோன்றுதல் :

மண் சாப்பிட தோன்றுதல் :

இன்னும் மருத்துவர்களுக்கு ஏன் உணவல்லாத பொருட்களை இரும்பு சத்து குறைபாடு இருப்பவர்கள் சாப்பிடுகிறார்கள் என்று சரியான காரணங்கள் புலப்படவில்லை.

மண்ணை பார்த்ததும் சாப்பிடத் தோன்றுவது அதிலுள்ள இரும்பு சத்தின் மீது ஈர்ப்பாக இருக்கலாம்.

அதோடு பென்சில், சாக்பீஸ் , ஆகியவைகளையும் சாப்பிடுவார்கள். இந்த மாதிரியான அறிகுறிக்கு பைகா என்று பெயர்.

நகம் வளைதல் :

நகம் வளைதல் :

ஸ்பூன் போன்று நகம் வளைந்து மேல் நோக்கி இருந்தால் அது இரும்பு சத்தின் அறிகுறி. இந்த அறிகுறிக்கு கொய்லோனிசியா.

ஆனால் அவ்வாறு வளைந்த நகம் அது மற்ற வியாதிக்கும் அறிகுறியாக இருக்கலாம். பரிசோதனையில் மட்டுமே தெரிய வரும்.

வெடித்த உதடு :

வெடித்த உதடு :

சாதரணமாக குளிர்காலங்களில் உதடு வெடிப்பது இயல்பானதே.

ஆனால் ஒரு சிலருக்கு எப்போதும் உதடு வெடித்தபடியே இருக்கும் இரும்பு சத்து போதாமையின் அறிகுறிதான் இது. இதற்க்கு ஆங்குலார் செய்லிடிஸ் என்று பெயர்.

 வீங்கிய நாக்கு :

வீங்கிய நாக்கு :

நாக்கு வீக்கமாகவும் பளபளப்பாகவும் இருந்தால் அது இரும்புச் சத்து குறைபாட்டின் அறிகுறி. இதற்கு பெயர் அட்ரோஃபிக் க்ளாஸிடிஸ் என்று பெயர்.

இந்த அறிகுறியில் நாக்கு மிருதுவாகவும் நைஸாகவும் இருக்கும்.

 ஐஸ் கட்டியை சாப்பிட தோன்றுவது :

ஐஸ் கட்டியை சாப்பிட தோன்றுவது :

இது வெகு பொதுவான அறிகுறிகளில் ஒன்று. ஐஸ் கட்டியை பார்த்து தேடி தேடி சாப்பிடுவது தீவிர இரும்புச் சத்து குறைப்பாட்டின் அறிகுறியாகும். இதற்கு பெயர் பேகோஃபேஜியா.

 கால்கள் கூச்சம் :

கால்கள் கூச்சம் :

அமைதியாக அமர முடியாமல் பரபரவென கால்களை இயக்கிக் கொண்டேயிருக்க வேண்டுமென தோன்றுவது பின் கால்களில் எப்போதும் கூசிக் கொண்டேயிருந்தால் அது ரத்த சோகையின் அறிகுறியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms of Iron deficiency

These 6 symptoms may reveal that you have Iron deficiency.
Story first published: Thursday, November 10, 2016, 13:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter