For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண் பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கான சில டிப்ஸ்...

By Maha
|

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நிலைக்கு இன்றைய தலைமுறையினர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நிறைய பிரச்சனைகள் உடலில் அழையா விருந்தாளியாக வருகின்றன. அதில் உடல் பருமன், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்றவை மட்டுமின்றி, கண்களிலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் திரையை உற்று நோக்குவது முக்கிய காரணம். அதுமட்டுமின்றி வேலைப்பளு காரணமாக குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருப்பதும் ஓர் காரணம்.

உங்களுக்கு கண் பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமெனில், ஒருசில செயல்களை தினமும் செய்ய வேண்டியது அவசியம். அப்படி செய்து வந்தால், நிச்சயம் உங்களுக்கு பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம். சரி, இப்போது கண் பிரச்சனைகள் வராமல் இருக்க அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்களை கழுவுங்கள்

கண்களை கழுவுங்கள்

தினமும் பலமுறை சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவுங்கள். இதனால் கண்களில் உள்ள தூசிகள் மற்றும் கிருமிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, நோய்கள் கண்களைத் தாக்காமல் இருக்கும்.

கண் கூசும் அளவிலான ஒளி

கண் கூசும் அளவிலான ஒளி

சூரியக்கதிர்கள் மற்றும் கண்கள் கூசும்படியான ஒளிகளை நேரடியாக காண்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அந்த பிரகாசமான ஒளிகக்கதிர்கள் கண்களின் ரெட்டினாவை கடுமையாக தாக்கி, பார்வை கோளாறை ஏற்படுத்தும். முடிந்த அளவில் கம்ப்யூட்டர் முன் கண்ணாடியை அணிந்து கொண்டு வேலை செய்யுங்கள்.

கண் பயிற்சி

கண் பயிற்சி

கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் போது, கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலான கண் பயிற்சிகளை செய்து வாருங்கள். அதுவும் 20 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களின் கருவிழிகளை மேலும் கீழும் அசைப்பது, பின் வட்ட சுழற்சியில் சுழற்றுவது என்று செய்யுங்கள். இந்த பயிற்சியை 5-10 முறை அவ்வப்போது செய்து வாருங்கள்.

சீரான இடைவெளி

சீரான இடைவெளி

கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் போது, திரைக்கும் உங்கள் கண்களுக்கும் இடையே 22-28 இன்ச் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், கண்களுக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, கண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

கண்களின் ஆரோக்கியத்திற்கு கண்ணீர் அவசியமானது. அந்த கண்ணீருக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் அலுவலகத்தில் பலர் தண்ணீர் குடிப்பதையே மறந்து வேலை செய்து வருகின்றனர். இதனால் கண்கள் மட்டுமின்றி, உடலும் வறட்சி அடைந்துவிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple And Easy Eye Care Tips

Here are some simple and easy eye care tips. Read on to know more...
Desktop Bottom Promotion