For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கவனக் குறைவு உண்டாவதற்கான காரணங்கள் என்ன?

|

வேலையிலோ படிப்பிலோ கவனமில்லாமல் இருக்கலாம். சில சமயங்களில் என்றால் பெரியதாய் பாதிப்பில்லை.அனால் வேலை அல்லது படிக்க ஆரம்பித்தாலே கவனமேயில்லாமல் இருந்தால், அதை கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயமாகதான் பார்க்க வேண்டும்.

Reasons behind loss of concentration

நாம் வாழும் சமூக கட்டமைப்பு, சுற்றிலும் இருப்பவர்களால், போட்டி போடமுடியாமல் தாழ்வு மனப்பான்மையால் என நிறைய காரணங்கள் உள்ளன கவனக் குறைவு உண்டாக. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

தொழில் நுட்பம் :

இன்றைய காலகட்டங்களில் மொபைல் லேப்டாப் இவை இல்லாமல் குழந்தைகளையும் பெரியவர்களையும் பார்க்க முடியாது. உங்கள் வேலை மற்றும் படிப்பில் கவனிமில்லாமல் போவதற்கு மிக மிக முக்கியமான காரணம் இதுதான். வாட்ஸ் அப், கேம்ஸ் என அவற்றோடு ஒன்றி விடுவதால் படிப்பில் அல்லது வேலையில் தொடர்ந்து கவனம் தரமுடியாமல் அவற்றிற்கு அடிமையாகிவிடுகிறோம். ஆகவே குறிப்பிட்ட நேரம் இதற்கென ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

உடல் பாதிப்பு :

தொழில் நுட்பத்தை தவிர்த்து உடல் நிலை பாதிப்பு இருந்தால் வேலையின் மீது கவனமில்லாமல் போக வாய்ப்புண்டு. உடல்பாதிப்பினால் மனதில் கவலைகள் உண்டாகும். அந்த சமயங்களில் வேலை அல்லது படிப்பின் மீது நாட்டம் இல்லாமல் போகக்கூடும். உடல் நலம் பாதிப்பும் கவனக் குறைவிற்கு ஒரு காரணமாகும்.


மன நிலை பாதிப்பு :

அதிகப்படியான வேலை மற்றும் படிப்பினால் மன அழுத்தம் உண்டாகும். அதன் தொடர்ச்சியாக பின்னாளில் அவற்றின் மீது கவனமில்லாமல் போய்விடும். காரணமில்லாத கவலைகளும் சேர்ந்து கவனக் குறைவை ஏற்படுத்திவிடும்.

பிடிக்காத பணியினால் கவனக் குறைவு :

பிடிக்காத வேலை செய்வதால், வேலை மீது நாட்டம் நாளடைவில் இல்லாமல் போய்விடும். அதனால் வரக் கூடிய அயர்ச்சி மற்றும் வெறுப்பின் காரணமாக கவனக் குறைவு எற்படும்.

சமூக வளைதளங்கள் :

80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அவற்றிலேயே மூழ்கி தங்களின் இயல்பான வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள். இவைகளுக்கு அடிமையாகிவிடுவதால், வேலை படிப்பில் கவனம் இல்லாமால் போவது பெரும்பாலோனோருக்கு நடக்கிறது. இவை எதிர்காலத்தையும் பாதிக்கும்.

கவனக் குறைவை தவிர்ப்பது எப்படி ?

கவனக் குறைவை எதனால் வருகிறது என முதலில் ஆராய வேண்டும். மொபைல் மற்றும் சமூக வலைத்தளங்கள்தான் காரணமென்றால் , இவைகளுக்கென குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் எடுத்துக் கொள்ளவேண்டும் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

பிடிக்காத வேலை என்று நினைத்தால் ஏன் பிடிக்கவில்லையென காரணம் தேட முற்படுங்கள். யோகா, தியானம் உங்களுக்கு மிகவும் கை கொடுக்கும். மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருக்கும்படி காரணங்களை நீங்கள்தான் தேடிக் கொள்ள வேண்டும். ஏனெனில் கவனக் குறைவு என்பது நம் வாழ்வில் பெரிய சறுக்கல்களை கூட உண்டு பண்ணலாம்.

English summary

Reasons behind loss of concentration

Reasons behind loss of concentration
Desktop Bottom Promotion