For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீல்வாதத்தைத் தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள்!!!

By Maha
|

கீல்வாதம் என்பது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாவதால் ஏற்படும் ஒரு நோயாகும். இப்படி யூரிக் அமிலம் அதிகமாகும் போது, அவை யூரிக் அமில உப்புக்கள் படிகங்களாக மூட்டுப் பகுதிகள், தசைநாண்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள திசுக்களில் படியும். இப்படி நாள் கணக்கில் படியும் போது, அப்பகுதியில் வீக்கத்துடன், கடுமையான வலி மற்றும் சிவக்கவும் செய்யும்.

யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!

பொதுவாக இந்த பிரச்சனையால் பெண்களை விட 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். கீல்வாதம் முற்றிய நிலையில் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுவதோடு, இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலங்கள் சிறுநீரகங்களில் படிந்து சிறுநீரக கற்களை உண்டாக்கும்.

கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!

கீல்வாதம் 75 சதவீதம் பெருவிரலைத் தான் தாக்கும். இருப்பினும், அது கணுக்கால், குதிக்கால், கால் மற்றும் கை விரல்கள், மணிக்கட்டு, முழங்கை போன்ற இடங்களையும் பாதிக்கும். இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு ஒருசில உணவுகளின் மூலம் அதிகரிக்கும். எனவே யூரிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டாம்.

உங்கள் உடல்நலத்தைப் பற்றி பாதங்கள் சொல்லும் 8 விஷயங்கள்!!!

இங்கு கீல்வாதத்தைத் தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பயன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

தினமும் 3-4 பற்கள் பூண்டை பச்சையாக உட்கொண்டு வருவதன் மூலம், கீல்வாதத்தின் தாக்கத்தில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.

செர்ரிப் பழங்கள்

செர்ரிப் பழங்கள்

கீல்வாதம் இருப்பவர்கள் தினமும் 12 செர்ரிப் பழங்களை உட்கொண்டு வருதன் மூலம், கீல்வாத வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு டம்ளர் நீரில், 3-4 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும்1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும். இப்படி நாள் முழுவதும் இந்த கலவையை செய்து குடிப்பதன் மூலம் கீல்வாத பிரச்சனையில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

திராட்சை

திராட்சை

திராட்சையை அதிகம் உட்கொள்வதன் மூலம், யூரிக் அமிலத்தால் ஏற்படும் விளைவைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது யூரிக் அமில படிகங்களை கரைத்து வெளியேற்றி, கீல்வாதத்தில் இருந்து விடுதலைத் தரும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸை அதிகமாக உட்கொண்டு வருவதன் மூலம், கீல்வாத வலி மற்றும் வீக்கத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கடுகு

கடுகு

கடுகைப் பொடி செய்து, அத்துடன் ட்ரிடிகம் பொடி சேர்த்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் அக்கலவையை கீல்வாத வலி உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால், வலி நீங்கும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

எப்சம் உப்பை சுடுநீரில் போட்டு கலந்து, வெதுவெதுப்பான நிலையில் அந்நீரில் பாதிக்கப்பட்ட பகுதியை சிறிது நேரம் ஊற வைக்க, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Quick Home Remedies For Gout

Take a look at the home remedies to cure gout. These are the quick ways to cure gout and control the uric acid levels.
Desktop Bottom Promotion