Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
போகிமேன் கேமை விளையாடினால் நல்லதா? எப்படி?
முன்னாடி கேண்டி கிரஷ் என்ற மொபைல் கேமை எப்போதும் எல்லாரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்போது லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்னெவென்றால் போகிமேன் விளையாட்டு.
முதலில் கார்ட்டூனில் வந்துகொண்ட போகிமேன் இப்போது மொபைலிலும் அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜப்பானால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கேம் இப்போது உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை பைத்தியமாக்கிவிட்டது. இந்தியாவில் இன்னும் இந்த கேமை கொண்டு வரவில்லை.ஆனால் வி.பி.என் னில் இங்கிலாந்து அமெரிக்கா என மாற்றிக் கொண்டு இந்தியாவிலும் விளையாடத் தொடங்கிவிட்டனர்.
இதில் பிரச்சனை என்னவென்றால் இதனை வீட்டிற்குள் விளையாட முடியாது. வெளியே சென்று மொபைலில் இந்த அப்ளிகேஷனை எடுத்தால், நம்மை சுற்றியுள்ள பகுதிகளில் பூச்சிகள்( பிகாசூ) ஒளிந்துகொள்வது போலவும், நாம் கண்டுபிடிப்பது போலவும் விளையாட்டு தொடங்கும்.
ஒளித்து வைத்திருக்கும் பொருட்களை கூகுள் மேப் உதவி கொண்டு நாம் கண்டுபிடிக்க வேண்டும். எனவே விளையாட்டு சுவாரஸ்யத்தில் கீழே விழுவது, வண்டிகளில் மோதுவது என ஆபத்துகள் நிறைய பேருக்கு ஏற்படுகிறது.
இந்த விளையாட்டிலுள்ள பெரிய நன்மை என்னவென்றால், சர்க்கரை வியாதி, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு நன்மை தருவதாக யு.கே மருத்துவர் மேக் கார்ட்னி கூறியிருக்கிறார். இந்த விளையாட்டை சுவராஸ்யமக தொடர்ந்து நடந்தபடி, ஓடியபடி விளையாடுவதால் சர்க்கரை வியாதி, உடல் பருமனை குறைக்கலாம் என கூறியிருக்கிறார்.
இந்த விளையாட்டினால் உடல் பருமனான ஒருவர், சுமார் 225 கிலோமீட்டர் நடந்து, 12. 7 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார் என மேக் கார்ட்னி கட்டுரையை எழுதியுள்ளார். முக்கியமாக சர்க்கரை வியாதி வரமல் காக்க முடியும்.
அதே சமயம் பாதுகாப்பான இடங்களில் விளையாட வேண்டும். மேலும் மொபைலில் விளையாடும் இந்த விளையாட்டினால், இதய நோய்கள் வராது. விட்டமின் டி போதிய அளவு கிடைக்கப் பெறுகிறது என சொல்கிறார். எனவே எல்லாரும் இந்த விளையாட்டை விளையாடலாம். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் பெரிய காலி இடங்களில் விளையாடினால் பாதுகாப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



