For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகரிக்கும் உடல் பருமன், அதிர வைக்கும் உலகளாவிய ஆய்வறிக்கை தகவல்!

|

நமது உலகில் தலைகனத்துடன் திரியும் மக்களை விட, உடல் கனத்துடன் திரியும் மக்கள் வேகமாக அதிகரித்து வருகிறார்கள். ஒன்றா, இரண்டா.. உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் அதிகரித்து வருகிறது உடல்பருமனாக இருக்கும் மக்களின் எண்ணிக்கை.

ஏறத்தாழ உலக நோயாக மாறி வருகிறது உடல்பருமன். இதற்கு முக்கிய காரணம் கடந்த தலைமுறையில் மாற்றம் கண்ட உணவியலும், வாழ்வியலும் தான். முக்கியமாக வெள்ளை சர்க்கரை, சோடா பானங்கள், துரித உணவுகள். இவை அனைத்தும் நாவில் சுவையையும், உடலில் கொழுப்பையும் அதிகரித்துவிட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எக்கச்சக்கம்

எக்கச்சக்கம்

கடந்த 1964-ம் ஆண்டு எடுத்த ஆய்வறிக்கையில் உலகில் மொத்தம் உடல்பருமனாக உள்ளவர்கள் எண்ணிக்கை 10.5 கொடியாக இருந்தது. ஆனால், 2014-ம் ஆண்டு வெளிவந்த ஆய்வில் 64.1 கொடியாக இது உயர்ந்திருக்கிறது.

பி.எம்.ஐ

பி.எம்.ஐ

உயரத்திற்கு ஏற்ற உடல் எடை பற்றிய கணக்கீட்டில் சராசரியாக ஆண்கள் மூன்று மடங்கும், பெண்கள் இரண்டு மடங்கும் உடல் எடை அதிகமாக காணப்படுகிறார்கள் என இந்த ஆய்வறிக்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 40 வருடங்கள்

கடந்த 40 வருடங்கள்

கடந்த நாற்பது வருடத்தில் வயதுக்கு ஏற்ற உடல் எடையின் சராசரி அளவு ஆண்கள் மத்தியில் 21.7kg/m² இருந்து 24.2 kg/m² -ஆகவும், பெண்கள் மத்தியில் 22.1 kg/m² இருந்து 24.4 kg/m² ஆகவும் அதிகரித்துள்ளது.

1.5 கிலோ

1.5 கிலோ

சராசரியாக உலக மக்கள் தொகையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1.5 கிலோ அளவு உடல் எடை அதிகரித்துள்ளது என இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025

2025

இப்படியே சென்றால் வரும் 2025-ம் ஆண்டில் ஐந்தில் ஒரு ஆண் 18% உடல் பருமன் அதிகரித்தும், ஐந்தில் ஒரு பெண் 21% உடல் பருமன் அதிகரித்தும் காணப்படுவார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் பருமனான நாடுகள்

உடல் பருமனான நாடுகள்

சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் செக் குடியரசு, பெல்ஜியம், பிரான்ஸ், மற்றும் சுவிச்சர்லாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகளிலும் உடல் பருமன் சீரிய அளவில் அதிகரித்து வருகிறது.

பாதுகாப்பான நாடுகள்

பாதுகாப்பான நாடுகள்

இந்தியா, வங்காளம், கிழக்கு திமோர், ஆப்கானிஸ்தான், எரித்திரியா, மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் ஐந்தில் ஓர் ஆண், பெண் விகிதத்தில் பார்க்கும் போது சரியான உடல் எடையில் தான் இருக்கிறார்கள் எனவும் இந்த ஆய்வறிக்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஐந்தில் ஒருவர்

ஐந்தில் ஒருவர்

இந்த கணக்கின் படி பார்த்தல் 2025-ல் ஐந்தில் ஒரு ஆண், பெண் உடல் பருமனுடன் தான் இருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். முக்கியமாக ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகளில் தான் இதன் தாக்கம் பெருமளவு இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Obese people outnumber underweight ones: Global survey

Obese people outnumber underweight ones: Global survey,
Desktop Bottom Promotion