Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
புரோஸ்டேட் வீக்கத்தை இயற்கை வழியில் சரிசெய்ய வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!
இங்கு புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள வீக்கத்தை மற்றும் இதர பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக புரோஸ்டேட் பிரச்சனையை 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். புரோஸ்டேட் என்பது ஒரு ஆண் சுரப்பி. இது சிறுநீர் வடிகுழாய் ஆரம்பமாகும் இடத்தில் அமைந்திருக்கும். இந்த சுரப்பியில் இரண்டு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதில் புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் மற்றும் சுரப்பியில் அழற்சி.

புரோஸ்டேட் சுரப்பியில் கோளாறுகள் இருந்தால், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது பிரச்சனையை சந்திக்கக்கூடும். அதோடு, முதுகின் கீழ்ப்பகுதியில் வலி மற்றும் கால், பாதம் அல்லது இடுப்பு பகுதியில் வலி ஏற்படும்.
இங்கு புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள வீக்கத்தை மற்றும் இதர பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வழி #1
சூரியகாந்தி விதைகள் மற்றும் பாதாமை தினமும் மாலை 5-7 மணிக்குள் சாப்பிட வேண்டும். இந்நேரத்தில் நட்ஸ் மற்றும் விதைகளை சாப்பிட்டால், உடல் சிறப்பாக செயல்பட்டு, புரோஸ்டேட் சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

வழி #2
1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த ஹாசில்நட் இலைகளை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்நீரை வடிகட்டி, தினமும் பலமுறை பருக வேண்டும். இதனால் புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள பிரச்சனைகள் சரியாகி, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வழி #3
4 கப் நீரில் சிறிது பைன் மர ஊசி இலைகளை சேர்த்து, மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, நாள் முழுவதும் சிறிது சிறிதாக குடிக்க வேண்டும். இதனாலும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்படும்.

வழி #4
1 1/2 கப் நீரில், 3 டேபிள் ஸ்ழுன் துருவிய அஸ்பாரகஸ் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி 2 மணிநேரம் கழித்து வடிகட்டி, நாள் முழுவதும் பருக வேண்டும்.

வழி #5
சின்ன வெங்காயத்தை தேனுடன் சேர்த்து தினமும் சாப்பிட, புரோஸ்டேட் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.



Click it and Unblock the Notifications
