For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் மன அழுத்தம் விந்தணு உற்பத்தியை பாதிக்குமா?

By Hemi Krish
|

ஆண்களின் விந்தணுவில் இருக்கும் மரபணுவிற்கும், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும் தொடர்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். முறையான வாழ்க்கை முறையை பின்பற்றாவிட்டால் அது விந்தணுவில் பாதிப்பை உண்டாக்கும். மன அழுத்தம், உடல் பருமன், தொடர்ந்து அலைபேசியிலேயே நேரத்தை செலவழித்தல் இவை எல்லாம் மரபணுவை பாதிப்பதாக கூறுகின்றனர்.

பொதுவாக விந்தணுவில் உள்ள டி.என்.ஏ மூலக்கூறுதான் நிறம், குணம், தோற்றம் ஆகிய பண்புகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. அதனை இனப்பெருக்கத்தின் போது அப்படியே அடுத்த சந்ததியினருக்கு கடத்தும்.

Mental Stress Leads To Sperm Damage

போலந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் விந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டதில் தெரியவந்தது யாதெனில் தற்போதைய வாழ்க்கை முறையினால் ஆண்களின் விந்தணுவில் உள்ள இந்த பண்புகளை தாங்கிய மரபணு பாதிப்படைவதாக கூறுகிறார்கள்.

ஆனால் முந்தைய கால வாழ்க்கை முறை ஆரோக்கியமான மரபணுவை தன் சந்ததியனருக்கு கடத்தியதாக பிரேசிலில் உள்ள 'சா பாலோஃபெடரல் ' பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ரிச்சார்டோ பெர்டொல்லா கூறுகிறார். ஆனால் அவர் போலந்தில் நடந்த விந்தணு ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை.

தற்போதைய சூழ்நிலை, வாழ்க்கை முறை, தனி மனிதனின் குணாதிசியம் எல்லாம் சேர்ந்துதான் அவனின் அடுத்த சந்ததியை நிர்ணயிக்கின்றன என பெர்டொல்லா கூறுகிறார்

English summary

Mental Stress Leads To Sperm Damage

Mental stress leads to sperm damage, read here in tamil,
Story first published: Saturday, April 30, 2016, 14:38 [IST]
Desktop Bottom Promotion