லெஸ்பியன், கே போன்ற ஓரினசேர்க்கையாளர்கள் மத்தியில் காணப்படும் வேறுபாடுகள்!

Posted By:
Subscribe to Boldsky

லெஸ்பியன், கே போன்ற ஓரினசேர்க்கையாளர்கள் என்றாலே ஏதோ அழற்சியை போல தான் சமூகத்தின் பார்வை இருந்து வருகிறது. திருடன், கற்பழிப்பவன், ஊழல் செய்பவன், கொள்ளை அடிப்பவனை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் நமது சமூகம் இவர்களை ஏனோ ஒதுக்கித்தள்ள தான் பார்க்கிறது.

உடலுறவுக் கொள்வது போன்ற விசித்திரமான கனவுகள் வருவது ஏன்?

நமது நாளேடு மற்றும் திரைத்துறை போன்ற ஊடகங்களிலும் கூட ஓரினசேர்க்கையாளர்களை ஓர் கேலி, கிண்டல், தமாசுக்காரர்கள் போல தான் சித்தரிக்கப்படுகிறார்கள். மேலும், சமூகத்தில் இவர்கள் மீதான பாரபட்சமான பார்வை மற்றும் களங்கம் சுமத்துவது போன்றவை இவர்களது உடல் நலன்களில் வேறுபட்ட மாற்றங்களை ஏற்படுத்துகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனநிலை

மனநிலை

லெஸ்பியன், கே போன்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் தான் அதிகமான மனநிலை மற்றும் பதட்டம் சார்ந்த கோளாறுகள் ஏற்படுகிறது என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது இவர்களை அதிகமாக குடிப்பழக்கத்திற்கு ஆளாக்குகிறது.

முதல் ஆய்வு

முதல் ஆய்வு

ஓரினசேர்க்கையாளர் மத்தியில் வேறுபடும் இவற்றை பற்றிய முதல் ஆய்வு இதுதான் என கூறப்படுகிறது. கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை மற்றும் பொதுநல பள்ளி தான் இந்த ஆய்வை நடத்தினர்.

வேறுபட்ட மாற்றங்கள்

வேறுபட்ட மாற்றங்கள்

அடிக்கடி மனநிலை மாற்றங்கள், பதட்டம், இதன் காரணத்தால் அதிகமாகும் குடிப்பழக்கம் போன்றவை மற்றவர்களோடு ஒப்பிடுகையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது என பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டிப்பு மடங்கு

இரட்டிப்பு மடங்கு

நேர்பால்புணர்ச்சியாளர்களை விட ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் இந்த பாதிப்புகள் இரட்டிப்பு மடங்கு அதிகமாக காணப்படுகிறது என இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரபட்சம் மற்றும் களங்கம்

பாரபட்சம் மற்றும் களங்கம்

ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் நாள்பட்ட மன அழுத்தம் அதிகரிப்பதற்கு காரணம் சமூகத்தில் பாரபட்சமாக காணப்படுவது மற்றும் அவர்களுக்கு களங்கம் உண்டாவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தான் என இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர் பசியா பகுளா (Basia Pakula) தெரிவித்துள்ளார்.

ஓரினசேர்க்கையாளர்கள்

ஓரினசேர்க்கையாளர்கள்

மற்றவர்களை போல ஓரினசேர்க்கையாளர்களும் நம் சமூகத்தில் ஓர் அங்கம் என்பதை அனைவரும் உணர வேண்டும். திருநங்கைகள் மற்றும் ஓரினசேர்க்கையாளர்களை வேறுபட்ட பார்வையில் பார்ப்பது தான் அவர்கள் உடல் நலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை வேறுபட்ட அளவில் காணப்படுகிறது என ஆராய்ச்சியார் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesbian, gay, bisexuals face more mood, anxiety disorders: Study

The results showed that gay and lesbians reported about twice the rates of anxiety and mood disorders compared to heterosexuals.
Subscribe Newsletter