கண்டதை சாப்பிட்டு அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவரும் அஜீரண பிரச்சனையால் பலமுறை அவஸ்தைப்பட்டிருப்போம். அதனை சரிசெய்ய கடைகளில் விற்கப்படும் கண்ட மருந்துகளையும் சாப்பிட்டிருப்போம். அஜீரண கோளாறு ஒருவருக்கு ஏற்பட்டால், அதனால் மிகுந்த அசௌகரியத்தை உணரக்கூடும்.

செரிமான பிரச்சனைகளுக்கு நம் வீட்டின் சமையலறையில் உள்ள சில பொருட்களே நல்ல தீர்வை, அதுவும் உடனடியாகக் கொடுக்கும். இங்கு செரிமான பிரச்சனைக்கான சில உடனடி இயற்கைத் தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீர்வு #1

தீர்வு #1

2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாற்றினை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து, அத்துடன் தேன் கலந்து, உணவு உண்ட பின் குடித்தால், செரிமான பிரச்சனையைத் தடுக்கலாம்.

தீர்வு #2

தீர்வு #2

1 டீஸ்பூன் மல்லியை பொடி செய்து, ஒரு டம்ளர் மோருடன் சேர்த்து கலந்து பருகினால், அஜீரண பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

தீர்வு #3

தீர்வு #3

உங்களுக்கு செரிமான பிரச்சனை இருப்பது போல் உணர்ந்தால், க்ரீன் டீயைக் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனைக்கு உடனடியாக நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தீர்வு #4

தீர்வு #4

இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. சிறு இஞ்சி துண்டை உப்பு தொட்டு சாப்பிட்டால், செரிமான அமிலத்தின் உற்பத்தி தூண்டப்பட்டு, அஜீரண பிரச்சனை உடனடியாக குணமாகும்.

தீர்வு #5

தீர்வு #5

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 டம்ளர் நீரில் கலந்து பருகினால், செரிமான பிரச்சனையில் இருந்து நீங்கள் நினைப்பதை விட மிகவும் வேகமாக நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Instant Home Remedies for Indigestion

If you feel that your stomach is bloated and that you are feeling uncomfortable than you might have problem with digestion. Here are few ways to overcome.
Story first published: Thursday, October 6, 2016, 18:00 [IST]
Subscribe Newsletter