For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கால் வலிக்கு தீர்வுக் கிடைக்காம கஷ்டப்படுறீங்களா? இதப் படிங்க!

By Hemi Krish
|

நீங்க மாங்கு மாங்கு ன்னு வேலை செஞ்சதும், உடல் சோர்வாகி முதல்ல நீங்க புலம்புவது கால்வலின்னுதான். அந்த கால்கள் வலுவாக இருந்தாலே யானை பலம். அதனால்தான் விளையாட்டு வீரர்கள் அவர்களின் கால் மற்றும் கைகளின் தசைகளுக்கு வலுப்பெறும் உடற்பயிற்சிகளைதான் அதிகம் மேற்கொள்வார்கள்.

எதனால் கால்வலி வருகிறது என நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா?

கால்வலி, பெரும்பாலும் தசை பலவீனத்தினால் வரும். பெண்களுக்கு இந்த மாதிரியான காரணங்களுக்காக கால்வலி வரும். அது தவிர்த்து,நரம்பு பலவீனமாக இருந்தால்,குறைந்த ரத்த ஓட்டம்,ஆர்த்ரைடிஸ், ரத்த சோகை,சர்க்கரை வியாதி,மிக அதிகமாக ஓடியாடி வேலை செய்தால்,போதிய உடற்ப்யிற்சி இல்லாமை, போன்றவற்றால் வரும். உடலில் நீர்சத்து குறைந்தாலும் வரும்.

How To Get Stronger Legs

ஆரோக்கியமற்ற கால்களை எப்படி தெரிந்து கொள்வது?

கெண்டைக்கால்களில் வலியிருந்தால், தசைப் பிடிப்பு அடிக்கடி ஏற்பட்டால், வீக்கம், முதுகு வலி, கால் குடைச்சல் இவை எல்லாம் இருந்தால் , உங்கள் கால்கள் சோர்வாக உள்ளது, அவைகளுக்கு போதிய ஓய்வு அல்லது ஊட்டம் தேவை என எச்சரிக்கைத் தருகிறது என அர்த்தம்.

உங்கள் கால்கள் புத்துணர்வையும் பலம் பெறவும் நீங்கள் கையாள வேண்டிய வழிமுறைகளைப் பார்க்கலாம்:

உங்கள் கால்கள் திடமாக இருக்க, நல்ல ஊட்டசத்து மிகுந்த உணவினை சாப்பிட வேண்டும். கால்களுக்கென பிரத்யோக உடற்பயிற்சி, போதிய ஓய்வு தர வேண்டும்.

கால்களுக்கு மசாஜ் :

கால்களுக்கு முறையாக எண்ணெய் மசாஜ் கொடுத்தால் இரத்த ஓட்டம் அதிகமாகும். தசைகள் வலுப்பெற்று திடமாக காணப்படும். கால்வலிகளுக்கு அருமையான தீர்வு இது. கால்களுக்கு புத்துணர்ச்சி தரக் கூடியது.

செய்முறை :

ஆலிவ் அல்லது தேங்காய் அல்லது கடுகு எண்ணெயை எடுத்து பொறுக்கும் சூட்டில் சூடு படுத்திக் கொள்ள வேண்டும். அதனை கால்களில் தடவி 10-15 நிமிடங்களுக்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இருமுறை செய்யலாம்.

வாக்கிங் ஜாக்கிங், காலுக்கு பலம் :

தினமும் நடைப் பயிற்சி செய்தால் கால் தசைகள் வலுப் பெறும். அதிக சதைகள் தொங்காமல் கால் இறுகும். நடைப் பயிற்சியுடன்,ஜாக்கிங், நீச்சல் பயிற்சி, ட்ரக்கிங் ஆகியவவை கால்களுக்கு வலுவூட்டக் கூடியது.

கால்களுக்கு உடற்பயிற்சி :

கால்களுக்கென செய்யும் பிரத்யோக உடற்பயிற்சி மிக மிக நல்லது. இவை எலும்புகளை பலப்படுத்தும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். கால்களில் படியும் கொழுப்புகளை கரைக்கும். உங்கள் கால்களுக்கு தேவையான சரியான உடற்ப்யிற்சியை உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு தினமும் செய்யுங்கள். கால்வலி என இனி சொல்ல மாட்டீர்கள்.

சூரியனிடம் கொஞ்சம் உறவாடுங்கள் :

விட்டமின் டி குறைந்தால், கால் தசைகள் பலவீனமாகும் என 2009 ஆம் ஆண்டு "அமெரிக்கன் சொஸைட்டி",க்ளீனிகல் நியூட்ரீஷன் ஜர்னல் என்ற இதழில் வெளியிட்டுள்ளது.. விட்டமின் டி யானது பாஸ்பரஸ்,கால்சியம் ஆகிய சத்துக்கள் உடலில் உறிஞ்ச உதவி புரிகிறது.

இதனால் எலும்புகள் பலமாகும். ஆகவே சூரியன் சாந்தமாக , அதாவது அதிகாலையில், இளஞ்சூரியன் வரும்போது அவனிடம் கொஞ்சம் ஹாய் சொல்லி உலாவுவங்கள். போதிய அளவு விட்டமின் டி உங்கள் தோலுக்குள் ஊடுருவும். சூரியன் பலம் உங்களுக்கு கிட்டும்.

திரவ வகை உணவுகள் சாபிடுங்கள்:

உடலில் நீர்சத்து குறைந்தாலும், கால்வலி ஏற்படும். ஆகவே நீர் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் நீராக மட்டுமில்லாமல்,திரவ வகையிலும் எடுத்துக் கொள்ளலாம்.இதனால் எல்லா சத்துக்களும் உடலில் கிடைக்கும். அதிகமாக காபி,டீ எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.இது நீரிழப்பை உடலில் ஏற்படும். சிறு நீரக கோளாறு இருப்பவரகள் திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

பாகுவெல்லம் (Blackstrap Molasses) கால்களுக்கு உறுதி தரும் :

பாகுவெல்லம் நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அது போல்,கால் வலிக்கும். கால்கள் பலம் பெறவும், தினமும் பாகு வெல்லத்தை எடுத்துக் கொண்டால், நன்மையைத் தரும்

தினமும் 1 ஸ்பூன் பாகு வெல்லத்தை சூடான பாலில் அல்லது நீரில கலந்து குடிக்கலாம்.
அல்லது 2 ஸ்பூன் பாகு வெல்லம்,ஆப்பிள் சைடர் வினிகர் 1ஸ்பூன் ஆகியவற்றை ஒரு கப் நீரில கலந்து தினமும் பருகலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்களையும் பி காம்ப்ளக்ஸ் விட்டமின்களையும் கொண்டுள்ளது. இது தசைகளுக்கு பலம் தருகிறது.

2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கப் சுடு நீரில கலந்து, கொஞ்சம் எலுமிச்சை சாறு,தேன் கலந்து குடிக்கலாம். இது இரத்த விருத்திக்கு அற்புதமான பானமாகும்.

பால் குடித்தால் ஆரோக்கியம் கிடைக்கும்:

பால் கால்சியம், புரோட்டின், விட்டமின் என எல்லா சத்துக்களையும் கொண்டுள்ளது. இது உடல் பலவின்மையை போக்கி எலும்புகளை வலிமையாக்கும்.

தினமும் 1 கப் பால் பருகுங்கள். அதில் பொடியாக நறுக்கிய பேரிச்சை,பாதாம் ஏலக்காய் குங்குமப் பூ போட்டு குடித்தால் ஆரோக்கியமான கால்கள் கிடைப்பது உறுதி

ஊட்டச்சத்துமிக்க உணவுகள்:

உணவுகள் உண்பதை விட ஊட்டம் மிகுந்ததாய் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். நம் உடலில் போதிய அளவு ஊட்டம் கிடைக்காமல் போனால் கால்கள் சீக்கிரம் பலமிழந்து போகும். நடுக்கங்கள் வரும்.
கால்களுக்கு வலிமை சேர்க்கக் கூடிய கீரைவகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பால்,தயிர்,நெய் ஆகியவை மூட்டுகளுக்கு பலம் சேர்க்கும்.
பழங்களும் காய்கறிகளும் நார்சத்துக்களை கொண்டுள்ளதால் தசைகளுக்கு வலிமை தரும்.

மேலும் சில பொதுவான குறிப்புகள்:

ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்வதை தவிருங்கள்.
ஹீல்ஸ் அணிவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை கால்வலிகளை உண்டாக்கும்.
கால்களை இறுகிப் பிடிக்கும் இறுக்கமான உடைகளை அணியக் கூடாது. இது கால்களில் ரத்த ஓட்டத்தினை பாதிக்கும்.
முறையான அக்குப்பஞ்சர்,அக்குப்ரஷர் ஆகியவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
உப்பை உணவில் அதிகம் சேர்க்கக் கூடாது.

Desktop Bottom Promotion