நல்ல உறக்கம் பெறுபவர்கள், இரவில் இந்த 10 தவறுகளை செய்வதில்லை!

Posted By:
Subscribe to Boldsky

நல்ல உறக்கம் தான் உங்கள் வாழ்க்கையையும், வேலையையும் சிறப்பிக்க உதவும். தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களிடம் இருக்கும் இரண்டு பெரிய எதிர்மறை விளைவுகள், ஒன்று உற்பத்தி திறன் குறைபாடு, மற்றொன்று கோபம். இவை இரண்டும் உங்கள் வாழ்வியல் மற்றும் வேலையை வெகுவாக பாதிப்பவை ஆகும்.

தூங்கும் போது ஆளை அமுக்கும் 'அமுக்குவான் பேய்' பற்றி தெரியுமா?

உறக்கம் உங்கள் ஆரோக்கியத்தையும் குறிவைத்து தாக்குகிறது. தூக்கமின்மை காரணத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும். மன அழுத்தம் என்பது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் ஒரு பேக்கேஜ் ஆகும். எனவே, ஆரோக்கியத்தை மேம்படுத்த, நல்ல உறக்கம் பெற இரவில் ஆரோக்கியமானவர்கள் செய்ய தவிர்க்கும் தவறுகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவு

உணவு

உறக்கம் வரும் போது இவர்கள் உணவருந்துவதில்லை. மாறாக, உறங்க செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவை உட்கொண்டுவிடுகிறார்கள்.

பானங்கள்

பானங்கள்

இரவு உறங்குவதற்கு முன்னர் அல்லது இரவு நேரத்தில் அதிகப்படியான காபி, ஆல்கஹால், சோடா பானங்கள் பருகுவதை தவிர்க்கிறார்கள். ஏனெனில், இது உறக்கத்தை கெடுக்கும் பழக்கங்கள் ஆகும்.

கண்

கண்

உறங்குவதற்கு முன்னர் இவர்கள் டிவி பார்ப்பது, மொபைல் நோண்டுவது போன்ற கண்களுக்கு அதிகப்படியான அழுத்தத்தை உண்டாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

ஒளி

ஒளி

உறங்கும் அறையில் இவர்கள் விளக்கை ஆப் செய்து விடுகிறார்கள். இதனால் இவர்களுக்கு மெலடோனின் எனும் ஹார்மோனில் எதிர்மறை தாக்கம் ஏற்படுவதில்லை.

நேரம்

நேரம்

இவர்கள் அளவுக்கு அதிகமாக உறங்குவது இல்லை. முக்கியமாக இவர்கள் அலாரத்தை ச்நூஸ் செய்வதில்லை. ஏனெனில் எட்டு மணிநேரத்திற்கு அதிகமான உறக்கம் சோர்வு, இதய நலன் சீர்கேடு, மன அழுத்தம் போன்றவற்றை பரிசளிக்க கூடியவை.

தியானம்

தியானம்

இவர்கள் பெரும்பாலும், காலையில் எழுந்ததும் தியானம் / யோகோ / உடற்பயிற்சி / நடைபயிற்சி என ஏதேனும் ஒன்றையாவது பின்பற்றுகிறார்கள்.

வேலை

வேலை

மேலும், இந்நாளில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இதனால் இவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் உண்டாவதில்லை.

நீர்

நீர்

உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால் உடல் பாகங்களில் செயல்திறன் குறைந்து, அசௌகரியம் உணர்வீர்கள். எனவே, சீரான இடைவேளையில் நீர் பருக வேண்டும். நீர்வறட்சியினால் கூட உறக்கம் சீர்கெடலாம்.

65 டிகிரி

65 டிகிரி

நல்ல உறக்கம் வேண்டுமென்றால் உங்கள் அரை சராசரியாக 65 டிகிரியில் தட்பவெப்ப நிலையில் இருக்க வேண்டும் என ஓர் ஆராய்ச்சி தகவலில் கூறப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

முடிந்த வரை கசப்பான நிகழ்வுகளை இதயத்தில் சேமிக்காமல், வெற்றியின் கனத்தை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருந்தாலே நிம்மதி, மகிழ்ச்சி, நல்ல உறக்கம் என அனைத்தும் உங்களுக்கு தாராளமாக கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Healthy People Were Avoiding These Mistakes In Night

Healthy People Were Avoiding These Mistakes In Night, read here in tamil.
Story first published: Tuesday, March 29, 2016, 16:18 [IST]
Subscribe Newsletter