Latest Updates
-
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
ஆண்கள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களில் முதன்மையான ஒன்று தான் மாதுளை. இப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இது ஆண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும்.
ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!
ஒருவேளை உங்களுக்கு மாதுளையை உரித்து சாப்பிடும் அளவில் பொறுமை இல்லாவிட்டால், மாதுளை மில்க் ஷேக்கை தினமும் குடிக்கலாம். அதிலும் அந்த மில்க் ஷேக்கில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால் பாலியல் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்: ஆய்வில் தகவல்
மேலும் இப்பழம் பழங்காலம் முதலாக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அளவில் இப்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இப்போது மாதுளை பழத்தை ஆண்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

விறைப்புத்தன்மை பிரச்சனை
ஆய்வு ஒன்றில் விறைப்புத்தன்மை பிரச்சனைக் கொண்ட ஆணுக்கு மாதுளை ஜூஸ் குடித்து அப்பிரச்சனை குறைந்திருப்பது தெரிய வந்தது. எனவே ஆண்கள் மாதுளையை அன்றாடம் சிறிது உட்கொண்டு வருவது, படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவும்.

புரோஸ்டேட் மற்றும் நுரையீரல் புற்றுநோய்
மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களின் விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆண்களை 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். மேலும் மாதுளை நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சியையும் தடுக்கும்.

மூட்டு அழற்சி/ஆர்த்ரிடிஸ் (Arthritis)
தற்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மூட்டுப் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. ஆனால் தினமும் சிறிது மாதுளையை உட்கொண்டு வருவதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படுவதால் பல ஆய்வுகள் கூறுகின்றன.

இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால்
ஆண்கள் தான் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் மாதுளையை தினமும் ஆண்கள் சிறிது உட்கொண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். மேலும் ஆய்வுகளிலும் மாதுளை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதய ஆரோக்கியம்
மாதுளை இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வருவது குறையும். ஆகவே ஆண்கள் மாதுளையை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

மூளை ஆரோக்கியம்
மாதுளையில் உள்ள பாலிஃபீனால்கள் அல்சைமர் நோய் வருவதைத் தடுப்பதாக லோமா லிண்டா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த ஆராய்ச்சியில் ஒரு பகுதி எலிகளுக்கு சர்க்கரை நீரையும், மற்றொரு பகுதியில் உள்ள எலிகளுக்கு மாதுளை ஜூஸையும் கொடுத்து வந்தார்கள். இதில் சர்க்கரை நீரைக் குடித்த எலிகளை விட, மாதுளை ஜூஸ் குடித்த எலிகள் பணிகளை விரைவில் கற்றுக் கொண்டன. ஆகவே மாதுளையை உணவில் அதிகம் சேர்த்தால், மூளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் செயல்படும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்
தினமும் மாதுளையை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

டைப்-2 நீரிழிவு
மாதுளையில் உள்ள விதைகள் டைப்-2 நீரிழிவு வரும் அபாயத்தைக் குறைப்பதாக நிபுணர்கள் ஆய்வில் மூலம் கண்டறிந்துள்ளனர். மேலும் நீரிழிவு நோயாளிகள் மாதுளையை உட்கொண்டு வந்தால், அவர்களுக்கு பெருந்தமனி தடிப்பு ஏற்படும் அபாயம் குறைவதாகவும் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications