For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பை பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள்!

கருப்பை பற்றிய விஷயங்கள் தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு கருப்பைப் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

பொதுவாக பெண்கள் கருத்தரிக்கும் வரை, கருப்பை பற்றி அவ்வளவு விஷயங்கள் தெரியாது. ஆனால் இந்த இனப்பெருக்க மண்டலம் பெண்களின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கை வகிக்கிறது என்பது தெரியுமா?

உங்களுக்கு கருப்பை பற்றிய விஷயங்கள் தெரியாதென்றால், இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு கருப்பைப் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

மாதவிடாய் காலத்தில் கருப்பையின் அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரியுமா? ஓவுலேசன் காலத்தில், கருப்பையானது தற்காலிகமாக சற்று வளர்ச்சி பெறும். கருப்பையில் ஏற்படும் இந்த மாற்றங்கள், இறுதி மாதவிடாயை அடையும் போது நிறுத்தப்படும்.

உண்மை #2

உண்மை #2

மன அழுத்தம் கருப்பையைப் பாதிக்கும். உடலினுள் அழுத்தம் அதிகரிக்கும் போது, கருப்பை அதிகப்படியான எடையை இழந்து கருமுட்டை வெளியிடுவதை நிறுத்தும். அதனால் தான் மன அழுத்தம் அதிகம் கொண்டால், கருத்தரிப்பதில் இடையூறு ஏற்படுகிறது.

உண்மை #3

உண்மை #3

கருப்பை பெண்களின் உறுப்புக்கள் வளர உதவும். எப்படியெனில் கருப்பை ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு, கர்ப்ப காலத்தில் மார்பகங்கள் பெரிதாகும் மற்றும் இடுப்பு எலும்புகள் விரிவடையும். அதுமட்டுமின்றி, கருப்பை சிறிது ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்து, பாலியல் வாழ்வில் சிறப்பாக செயல்பட உதவும்.

உண்மை #4

உண்மை #4

கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால், அது முகப்பருக்களை ஏற்படுத்தும். ஆகவே பெண்களே! உங்களுக்கு அடிக்கடி முகப்பருக்கள் வந்தால், அதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளும் காரணம் என்பதை மறவாதீர்கள்.

உண்மை # 5

உண்மை # 5

கருப்பை பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளுக்கு சாதகமான விளைவுகளைத் தரும். ஆய்வு ஒன்றில், பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் கருப்பை புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைப்பதாக கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Ovaries Every Woman Should Know

Here are some facts about ovaries every woman should know. Read on to know more...
Story first published: Saturday, December 3, 2016, 11:44 [IST]
Desktop Bottom Promotion