Latest Updates
-
கரும்புள்ளிகளை சாதாரணமா நினைக்காதீங்க.. அது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
பாபா வாங்காவின் தலைசுற்ற வைக்கும் உலக அழிவு பற்றிய கணிப்பு..எந்த வருடத்தில் உலகம் அழியப்போகுதாம் தெரியுமா? -
சுக்கிர பெயர்ச்சி: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகியுள்ள ராஜயோகம்..இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம்...! -
வெந்தய கஞ்சியும்.. கறிவேப்பிலை துவையலும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க..
நம் எலும்புகளை பலவீனப்படுத்தும் உணவுப் பொருட்கள்!
மனித உடலுக்கு எலும்புகள் தான் அழகிய வடிவத்தையும், வலிமையையும் தருகின்றன. அத்தகைய எலும்புகள் பலவீனமானால், நம்மால் எந்த ஒரு காரியத்தையும் மேற்கொள்ள முடியாமல் போகும். எனவே எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
எலும்புகளை வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்!
எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அதற்கு கால்சியம் சத்துக்கள் அவசியம். ஆனால் நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுகளால் அந்த கால்சியம் சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் போகிறது.
எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் பழக்கவழக்கங்கள்!!!
இது நீடித்தால், பின் எலும்புகளின் அடர்த்தி குறைந்து பல்வேறு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும்.
கால்சியம் அதிகம் இருக்கும் 19 உணவுகள்!!!
இங்கு நம் எலும்புகளை பலவீனப்படுத்தும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு அவற்றை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

உப்பு நிறைந்த உணவுகள்
உப்பு அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் கால்சியத்தின் அளவு குறையும். ஏனெனில் அதிகப்படியான சோடியம் உடலில் இருந்து அதிகப்படியான அளவில் கால்சியத்தை சிறுநீரகங்களின் வழியே வெளியேற்றும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க ஒரு நாளைக்கு 1,500 மிகி (1/2 டீஸ்பூன்) அல்லது அதற்கும் குறைவான அளவில் சோடியத்தை எடுத்து வாருங்கள் மற்றும் குறைந்தது 1,200 மிகி கால்சியத்தையும் தவறாமல் எடுத்து வாருங்கள். குறிப்பாக வயது அதிகரிக்கும் போது உப்பின் அளவைக் குறைத்து வந்தால் தான் எலும்பு பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

சர்க்கரை உணவுகள்
சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலும், கால்சியத்தை உடல் உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்படும். எப்படியெனில் சர்க்கரை உணவுகள், உடலில் கால்சியத்தை உறிஞ்ச உதவும் பாஸ்பரஸ் அளவை பெரிதும் குறைத்துவிடும். எனவே உங்களுக்கு இனிப்பு சுவை வேண்டுமானால், சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கோலா
ஆய்வுகளில் ஒரு வாரத்தில் 7-க்கும் அதிகமான அளவில் சோடா பானங்களைப் பருகினால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. ஏனெனில் கோலாவில் உள்ள பாஸ்பாரிக் அமிலம், உடல் கால்சியத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்துவதோடு, குடலையும் பலவீனமாக்கும். எனவே சோடா பானங்களைப் பருகுவதைத் தவிர்த்து, பழச்சாறுகளைப் பருக ஆரம்பியுங்கள்.

காப்ஃபைன்
காப்ஃபைன் எலும்புகளில் இருந்து கால்சியத்தை வெளியேற்றி, வலிமையை இழக்கச் செய்யும். அதிலும் ஒருமுறை நீங்கள் 100 மிகி காப்ஃபைன் எடுத்தால், 6 மிகி கால்சியம் எலும்புகளில் இருந்து வெளியேற்றும். எனவே காபி, டீ போன்ற பானங்களை அதிகம் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

ஆல்கஹால்
அதிகப்படியான ஆல்கஹால் எலும்புகளின அடர்த்தி மற்றும் எலும்புகள் உருவாக்கத்தைக் குறைத்து, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயத்தை உண்டாக்கும். எனவே ஆல்கஹால் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.

பட்டாணி
பட்டாணியில் பைடேட்ஸ் ஏராளமாக உள்ளது. இது கால்சியத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும். ஆனால் பட்டாணியில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான மக்னீசியம், நார்ச்சத்து வளமாக உள்ளது. எனவே இவற்றை உட்கொள்ளும் முன், 1 மணநேரம் நீரில் ஊற வைத்து, பின் உட்கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள பைடேட்களின் அளவு குறையும்.

தக்காளி, காளான், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு
தக்காளி, காளான், கத்திரிக்காய், வெள்ளை உருளைக்கிழங்கு போன்றவை எலும்பு அழற்சியை ஏற்படுத்தி, நாளடைவில் ஆஸ்டியோபோரோசிஸிற்கு வழிவகுக்கும். ஆனால் இவற்றில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின்களும், இதர ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளதால், இதனை உண்பதை முற்றிலும் தவிர்க்காமல், அளவாக உட்கொண்டு வாருங்கள். குறிப்பாக தினமும் தவறாமல் 1,200 மிகி கால்சியத்தை எடுத்து வாருங்கள்.

பசலைக்கீரை
பசலைக்கீரையில் கால்சியம் ஏராளமாக இருந்தாலும், இவற்றைப் பச்சையாக உட்கொண்டால், அதில் உள்ள ஆக்ஸலேட்டுகள் கால்சியம் உறிஞ்சுவதைத் தடுக்கும். எனவே இவற்றை பச்சையாக உட்கொள்ளாதீர்கள்.



Click it and Unblock the Notifications











