உங்களுக்கு தட்டையான வயிறு வேண்டுமா? அப்படியானால் இதற்கு உதவிடும் இந்த உணவுகளை உண்ணவும்!

Posted By: Staff
Subscribe to Boldsky

பொதுவாக, ஒருவர் தட்டையான வயிறு வேண்டும் என நினைக்கும் பொது, அவர் முதலில் செய்யக்கூடியது உணவு பழக்க வழக்கங்களை கட்டுப்படுத்திக் கொள்வது. ஆனால், ஆச்சரியம்மூட்டும் வகையில் அது சரியான வழியல்ல. ஒருவர் தன் அன்றாட டயட்டில் கண்டிப்பாக உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய ஒரே விஷயம், சரியான உணவை தேர்ந்தெடுப்பது மட்டுமே.

உங்களுக்கு தட்டையான வயிறு வேண்டுமென்றால், அதற்கு உதவிடும் சில உணவுகள் இருக்கின்றன! இந்த உணவுகள் தட்டையான வயிற்றை பெறுவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாது வயிற்றை சுற்றி சேரும் கொழுப்பையும் தவிர்க்கும்.

முக்கியமான மைக்ரோ சத்துக்களாக விளங்கும் புரதம் மற்றும் நார்ச்சத்து கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு காரணம் அவைகள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு வயிற்று பொருமலுக்கும் அவை உடனடி நிவாரணத்தை அளிக்கும்.

இந்த உணவுகளுடன் சேர்த்து, தண்ணீர் மற்றும் இதர வகையிலான திரவங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு காரணம் அவை உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, செரிமான செயல்முறையை சுலபமாக்குவதில் உதவும்.

மைக்ரோ ஊட்டச்சத்துக்கள் அடங்கிய இந்த உணவுகளை நீங்கள் உண்ணும் போது, உங்கள் வயிறு நீண்ட நேரத்திற்கு நிறைந்தே இருக்கும்; இது வயிறு மற்றும் உடலை சுற்றி சேமிக்கும் கொழுப்பை சேர்க்கும் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்க்க செய்யும்.

சரியான உணவுகளுடன் அன்றாட வேலைகளுடன் உடற்பயிற்சி செய்வதும் முக்கிய பங்கை வகிக்கிறது. வயிற்றை தட்டையாக்க உதவும் உணவுகளின் பட்டியல், இதோ! படித்து பாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

கொழுப்பை எரிக்க உதவும் கூறுகளை கொண்ட அருமையான உணவுகளில் ஒன்றாக தக்காளி விளங்குகிறது. கலோரி குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும் தக்காளி உடல் எடையை குறைத்து, வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை எரிக்க உதவும்.

பூண்டு

பூண்டு

இயற்கையான ஆன்டிபயாட்டிக் மற்றும் மெட்டபாலிச ஊக்குவிக்கியாக விளங்கும் பூண்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். அப்படி செய்வதால் கொழுப்பை எரிக்க அது உதவும், குறிப்பாக வயிற்றை சுற்றிய பகுதியில்.

தேன்

தேன்

உங்களுக்கு வயிற்றை தட்டையாக்க வேண்டும் என்றால் அதற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாக தேன் விளங்குகிறது. ஒரு டீஸ்பூன் தேனுடன் கொஞ்சம் மிளகு மற்றும் கசக்கிய புதினா இலைகளை சேர்த்துக் கொண்டு, அதனை ஒரு க்ளாஸ் வெந்நீரில் போடவும். சிறிது நிமிடங்களுக்கு பிறகு, அதனை வடிகட்டி குடிக்கவும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர் கார்ப்ஸை எரிக்க உதவும் அமிலத்தன்மையை கொண்டுள்ளது. இதனை உங்களது அன்றாட சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு க்ளாஸ் தண்ணீருடன் சேர்த்துக் கொண்டு, உணவருந்துவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அதை குடிக்கலாம். இது பசியை குறைக்கும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்யில் கெட்ட கொழுப்பை விரட்டியடிக்கும் நல்ல கொழுப்புகள் அடங்கியுள்ளது. இது வயிறு மற்றும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும். தட்டையான வயிற்றை பெற இது ஒரு சரியான இயற்கை வழியாகும்.

கீரை

கீரை

கீரையில் நார்ச்சத்து வளமையாக உள்ளது. இதில் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. உணவுகளின் மீதுள்ள காதலை குறைக்க இது உதவும். இதனால் வயிறு மற்றும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க இது உதவும்.

ப்ளூபெரி

ப்ளூபெரி

ப்ளூபெரியில் பாலிஃபெனால் என்ற முக்கியமான ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அடங்கியுள்ளது. இது கொழுப்பை எரிக்க உதவுவதுடன் அது மேலும் சேராமல் தடுக்கவும் செய்யும்.

பழுப்பு நிற அரிசி

பழுப்பு நிற அரிசி

வயிற்று கொழுப்பை குறைக்க விரும்புபவர்களே, அரிசி சாதம் சாப்பிட்டால் கூடுதல் கொழுப்பு தான் வந்தடையும். ஆனால் பழுப்பு நிற அரிசியில் வைட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து வளமையாக உள்ளதால், அது வயிற்று பகுதியை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க உதவும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

வைட்டமின் சி வளமையாகவும் கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க ஆரஞ்சு எப்போதும் உதவும். அதோடு நிற்காமல் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கவும் உதவும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

நார்ச்சத்து அதிகமாக உள்ள ஓட்ஸ் உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிரப்பிய வைத்திருக்கும். இது உடல் எடையை குறைக்கவும் கொழுப்பை எரிக்கவும், முக்கியமாக வயிற்று பகுதியில், முக்கிய பங்கை வகிக்கிறது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் அதில் பெக்டின் என்ற பொருள் அதிகமாக உள்ளது. இது கொழுப்பை உறிஞ்சிட உதவும். இதும் உங்கள் வயிற்றில் நீண்ட நேரத்திற்கு நிரப்பிய உணர்வை அளிக்கும்.

பச்சை பூக்கோசு

பச்சை பூக்கோசு

கலோரிகள் குறைவாக உள்ள பச்சை பூக்கோசுவில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், வயிற்றை சுற்றி தேங்கியிருக்கும் கூடுதல் கொழுப்பை குறைக்க இது உதவிடும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

கொழுப்பை கரைக்க உதவும் சிறந்த பொருட்களில் ஒன்று தான் இலவங்கப்பட்டை. அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை, மற்றும் ஒரு டீஸ்பூன் தேனை ஒரு கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து அதனை நன்றாக கலக்கவும். இதனை காலை உணவிற்கு முன்பாகவும் இரவு படுக்க செல்வதற்கு முன்பாகவும் பருகவும்.

தண்ணீர் பழம்

தண்ணீர் பழம்

உங்கள் வயிற்று பகுதியில் உள்ள கூடுதல் கொழுப்பை கரைக்க நீங்கள் ஒரு சிறந்த உணவை தேடி வந்தீர்கள் என்றால், வைட்டமின் சி வளமையாக உள்ள தண்ணீர் பழம் உங்களுக்கு உதவும்.

வெண்ணெய் பழம்

வெண்ணெய் பழம்

உடலில், குறிப்பாக வயிற்று பகுதியில் கொழுப்பு தேங்காமல் இருக்கவும், நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை பெறவும், உதவும் சிறந்த உணவுகளில் வெண்ணெய் பழமும் ஒன்றாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Want A Flat Tummy? Then, Eat These Foods That Actually Help!

Bloated fatty stomach is one of the major problems, especially in those who lead a sedentary lifestyle. There are foods which will help in getting a flat...
Story first published: Wednesday, September 28, 2016, 18:30 [IST]
Subscribe Newsletter