For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"பீர் vs காபி" உங்க மூளைய எது அதிகமா சுறுசுறுப்பாக்க உதவும்'னு தெரியுமா!!

By John
|

கல்லூரி நாட்களில், இடைவேளை நேரங்களில் கேண்டீனில் காபிக் குடிக்காத பெண்ணும், கல்லூரி ஹாஸ்டல் வராண்டாவில் பீர் குடிக்காத ஆண்களும் இருந்திருக்க வாய்ப்புகளே இல்லை. ("இந்த இத்துப்போன பன்ச் வசனத்திற்கும் இந்த கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" -தலைப்பில் பீர் vs காபி என்பதற்காக எழுதப்பட்டது மட்டுமே.)

ஆரோக்கியத்திற்கு சிறந்த சில மதுபானங்கள் - அட, மெய்யாலுமே தாம்பா!!!

பீர் குடிப்பது மட்டுமல்ல, காபிக் குடிப்பதும் கூட ஒரு வகையான போதை தான் என்று கூறப்படுகிறது. பீரில் ஆல்கஹால், காபியில் காஃபைன்... அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால், இவை இரண்டும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவகிறது என்பது தான் இவை இரண்டின் ஒற்றுமை.

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

புதியதாய் ஒன்றை மிக வித்தியாசமாக யோசிக்க வேண்டுமெனில் "பீர்" தான் அதற்கான சரியான தேர்வு! அதையே செயலாக்கம் செய்ய வேண்டும் எனில், வேலையில் மும்முரமாக இருக்க வேண்டுமெனில் "காபி" தான் அதற்கான சரியான தேர்வு! சரி இனி, பீர் vs காபி எது உங்கள் மூளையை நன்கு செயலாக்கம் செய்ய உதவுகிறது என்று பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெருமூளைப் புறணி (cerebral cortex)

பெருமூளைப் புறணி (cerebral cortex)

இந்த பெருமூளைப் புறணி என்னும் பகுதி தான், உங்கள் சிந்தனை, மொழி, எதிர் செயல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. நீங்கள் ஆல்கஹால் உட்கொள்ளும் போது இதில் கவன சிதறல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், இது, உங்கள் மூளையில் தேவையற்று தேங்கியிருக்கும் சிந்தனைகளையும் நீக்கிவிடும். கம்ப்யூட்டரில் ரீசைக்கிள் பின்னை சுத்தம் செய்வது போல.

மூளையின் எனர்ஜி

மூளையின் எனர்ஜி

காபி குடித்த ஐந்து நிமிடத்தில் உங்கள் மூளைக்கு தேவையான எனர்ஜி கிடைக்கிறதாம்.

கற்பனை திறன்

கற்பனை திறன்

0.07 அளவு ஆல்கஹால் உட்கொள்வதால் உங்கள் மூளையின் கற்பனை திறன் அதிகரிக்குமாம். அதாவது இரண்டு மக் (Mug) பீர்.

நல்லவை

நல்லவை

படைப்பு திறன் சார்ந்த வேலைகள் செய்பவர்கள் பீர் குடிப்பதனால், கற்பனை திறனும், படைப்பு திறனும் அதிகரிக்கும். காபி, வெறும் ஐந்து நிமிடத்தில் ஒருமுகத்தொடு வேலை செய்ய தேவையான எனர்ஜியை தருகிறது.

தீயவை

தீயவை

அதிகமான பீர் உங்களது மூளையை மந்தமாக்கிவிடும் (மட்டையாக்கி விடும்). ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு முறை காபி குடிப்பதே நல்லது. அதிகமாக குடிப்பது இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.

கருத்து

கருத்து

பீராக இருந்தாலும் சரி காபியாக இருந்தாலும் சரி, அளவிற்கு மீறினால் அனைத்துமே நஞ்சு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Your Brain On Beer vs Coffee

Do you know about your brain on beer vs coffee? read here.
Story first published: Wednesday, May 27, 2015, 17:32 [IST]
Desktop Bottom Promotion