சருமத்தில் ஏற்படும் முதன்மையான 5 நோய்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

நம் உடலில் அதிகமாக காணப்படும் மிகப்பெரிய இடமாக விளங்குவது நம் சருமமே. அதனுள் இருக்கும் திண்மத்தை (தசைகள், எலும்புகள், இரத்த குழாய்கள், போன்றவைகள்) பாதுகாப்பது மற்றும் உடல் வெப்பத்தை சீர்படுத்துவது உட்பட, பல முக்கிய செயல்பாடுகளை அது செய்து வருகிறது. உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்க தண்ணீர், வைட்டமின்கள், எண்ணெய் மற்றும் அதிமுக்கிய கொழுப்பமிலங்கள் போன்றவற்றை சேமித்து வைக்கும்.

சருமத்தில் எண்ணிலடங்கா கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது சருமத்தின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதித்து விடும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கைகளை அளவுக்கு அதிகமாக கழுவினால், சருமம் வறட்சியடையும். அதற்கு காரணம் என்ன தெரியுமா? அப்படி செய்கையில் சருமத்தில் உள்ள எண்ணெயும் தண்ணீரும் போய்விடும்.

சரி அப்படிப்பட்ட முதன்மையான 5 சரும வியாதிகளைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். அவற்றில் சில பொதுவான வியாதிகள்; இன்னும் சில நோய்களோ பொதுவாக ஏற்படாத வகையாகும். இவையனைத்தும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அவற்றைப் பற்றிப் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சிரங்கு (Eczema)

சிரங்கு (Eczema)

இதனை அடோபிக் டெர்மட்டிட்டிஸ் (atopic dermatitis) என்றும் கூறுவார்கள். ஒரு வகையான சரும அழற்சியான இது மீண்டும் மீண்டும் வரக்கூடியவை. சுத்தமில்லாத சுற்றுப்புறச் சூழல் மற்றும் மரபு ரீதியான காரணிகளால் தான் இது பொதுவாக ஏற்படும். சிவத்தல், வீக்கம், சருமத்தில் திட்டு, அரிப்பு, வறட்சி மற்றும் சருமம் உதிர்தல் போன்றவைகள் தான் இதற்கான அறிகுறிகளாகும். சிவப்பு திட்டுக்களை சொரிந்தால் கொப்பளங்களும் இரத்தக்கசிவும் ஏற்படும். அதனால் சிரங்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சொரியாமல் இருப்பது நல்லது; குறிப்பாக நகங்கள் போன்ற கூர்மையான பொருட்களை கொண்டு சொரியக்கூடாது. அவை உங்கள் வியாதியை இன்னமும் சிக்கலாக்கி விடும். சிரங்கு நோய் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடியவை என்பதால், அதற்கென குறிப்பாக எந்தவொரு நிவாரணமும் கிடையாது. அதனால் அழற்சி மற்றும் எரிச்சலை குறைப்பதை நோக்கி தான் இதன் சிகிச்சை அமையும்.

சருமமெழுகு நீர்க்கட்டி (Sebaceous Cyst)

சருமமெழுகு நீர்க்கட்டி (Sebaceous Cyst)

சருமத்தின் மேல் தோலில் சீஸ் போன்ற பொருள் தேங்கும் போது உண்டாவது தான் இந்த கோளாறு. சருமமெழுகு சுரப்பிகள் எண்ணெய் போன்ற பொருளை சுரக்கும். இது சருமம் மற்றும் சரும அடுக்குகளில் உள்ள மயிர்த்தண்டுகளுக்கு மசகை ஏற்படுத்த உதவும். ஏதோ காரணங்களுக்காக இந்த நடவடிக்கை தடைப்பட்டால், கட்டி உருவாகும். முகம், கழுத்து, உடற்பகுதி மற்றும் பெண்களின் பிறப்புறுப்புகளில் இந்த கட்டி உருவாகலாம். கெட்ட வாடையுடன் வெளியேறும் சாம்பல் நிற அல்லது வெண்ணிற சுரப்புகளை கொண்ட மென்மையான சிவந்த புடைப்புகள் தான் இதற்கான அறிகுறியாகும். சுத்தமாக இருப்பதாலும். அளவுக்கு அதிகமாக சூரிய ஒளியில் வெளிப்படாமல் இருப்பதாலும் சருமமெழுகு நீர்க்கட்டிகளை தடுக்கலாம். பொதுவாக, கட்டிகளை குணப்படுத்த, பாதிக்கப்பட்ட இடங்களில் வெப்ப பேட்களை வைக்கலாம். இருப்பினும் இந்த கட்டிகள் தீவிரமடைந்தாலோ அல்லது திரும்பி திரும்பி வந்தாலோ, மருத்துவரை நாடுவது நல்லது.

வெண்குஷ்டம் (Vitiligo)

வெண்குஷ்டம் (Vitiligo)

உலகம் முழுவதும் உள்ள பலரையும் தாக்கக்கூடும் மற்றொரு பொதுவான சரும நோய் இதுவாகும். இந்த கோளாறு ஏற்படுவதால் சருமத்தின் சில பகுதிகளில் நிறமிகளை இழக்க வேண்டி வரும். அதற்கு காரணம் சருமத்தில் உள்ள குறிப்பிட்ட சில திட்டுகளின் மீது மட்டுமே மெலனோசைட்டுகள் (சரும நிறமி அணுக்கள்) அழிகிறது. இந்த பிரச்சனை உடலில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வரலாம் அல்லது உடல் முழுவதும் கூட வரலாம்.

படை நோய் (Hives)

படை நோய் (Hives)

சரும நோயில் படை நோயானது, சருமத்தின் மீது சிகப்பு புடைப்புகளை ஏற்படுத்தும். மேலும் அவை அரிப்பையும் ஏற்படுத்தும். பொதுவாக அலர்ஜியினால் (தூசி, உணவு, மருந்துகள், ஒட்டுண்ணி தொற்று போன்றவைகள்) தான் அவை ஏற்படுகிறது. இவை பல்வேறு அளவு மற்றும் வடிவத்தில் உண்டாகும். இவை வேகமாக நகரும். ஒரு இடத்தில் இருந்து மறையும் போது மற்றொரு இடத்தில் உருவாகும்.

பருக்கள்

பருக்கள்

பொதுவாக ஏற்படும் மற்றொரு சரும கோளாறு பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். பல்வேறு வயதினரையும் வந்தடையும் அது வேறு எதுவுமில்லை - பருக்கள்! பொதுவாக விடலை பருவத்தினருக்கு பருக்கள் பரவலாக ஏற்படும். சருமத்தின் மீது சிகப்பு திட்டுக்கள், கரும்புள்ளிகள், வெண்ணிற புள்ளிகள் போன்றவைகள் இதற்கான அறிகுறிகளாகும். மயிர்க்கால்கள் பல உங்கள் சரும துவாரங்களை அடைத்தால், பருக்கள் ஏற்படும். அல்லது சரும மெழுகு அளவுக்கு அதிகமான சீபத்தை சுரக்கும் போதும் இது ஏற்படும். ஹார்மோன் நடவடிக்கைகள், மரபு ரீதியான மாற்றங்கள், தொற்றுக்கள், உளவியல் ரீதியான கோளாறுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவைகள் எல்லாம் பருக்களுக்கான மற்ற காரணங்களாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Five Skin Diseases

Here are the top 5 skin diseases, some common and some uncommon, which affect the health of the skin.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter