சிறுநீரகங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அன்றாட பழக்கவழக்கங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

நம் உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான ஒன்று. இவை தான் நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது, ஹார்மோன்களை உற்பத்தி செய்வது, கனிமச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு, சிறுநீரை உற்பத்தி செய்வது, டாக்ஸின்களை வெளியேற்றுவது, அமிலங்களை நடுநிலைப்படுத்த என்று ஏராளமான பணிகளைப் புரிகிறது.

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

இவ்வளவு வேலைகளைச் செய்யும் சிறுநீரகங்கள் பழுதடைந்தால், எவ்வுளவு பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். தற்போது ஏராளமான மக்கள் சிறுநீரக கோளாறுகளை அதிகம் சந்திக்கின்றனர்.

மக்களே! இந்த உணவுகளை சாப்பிட்டா சிறுநீரகத்தில் கல் உருவாகும்... கவனமா இருங்க...

இன்னும் சிலருக்கு தங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் உள்ளது என்பது தெரியாமலேயே இருக்கின்றனர். அந்த அளவில் சிறுநீரங்களில் பிரச்சனை இருந்தால், அதற்கான அறிகுறிகள் தென்படுவது குறைவு. இதனால் சிறுநீரக நோய்களை அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் நோய் எனலாம்.

நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!!

மேலும் சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதற்கு நம் பழக்கவழக்கங்களும் முக்கிய காரணமாகும். இங்கு சிறுநீரகங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அன்றாட பழக்கவழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதிய அளவு தண்ணீர் பருகாதது

போதிய அளவு தண்ணீர் பருகாதது

சிறுநீரகங்களின் முக்கிய செயல்பாடே இரத்தத்தை சுத்திகரிப்பது, டாக்ஸின்களை வெளியேற்றுவது. இச்செயல் சிறப்பாக நடைபெறுவதற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. ஆனால் ஒருவர் குடிக்கும் நீரின் அளவைக் குறைத்துக் கொண்டால், இரத்தத்தை சுத்திகரிக்கும் போது சிறுநீரகங்களில் தேங்கும் டாக்ஸின்களை வெளியேற்ற முடியாமல், அதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். எனவே எப்போதும் குடிக்கும் நீரின் அளவை மட்டும் குறைக்காதீர்கள்.

அளவுக்கு அதிகமான உப்பு

அளவுக்கு அதிகமான உப்பு

உடலுக்கு சோடியம் அவசியம் தான். ஆனால் தற்போது பெரும்பாலானோருக்கு இரத்த அழுத்தம் உள்ளதால், உணவில் உப்பை சேர்க்கும் போது இரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகி, சிறுநீரங்களில் அழுத்தத்தை உண்டாக்கும். எனவே ஒருவர் தினமும் தங்களின் உணவில் 5 கிராமிற்கு மேல் உப்பை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

இயற்கை நிகழ்வுகளை அடக்குதல்

இயற்கை நிகழ்வுகளை அடக்குதல்

பலருக்கும் சிறுநீர் முட்டிக்கொண்டிருக்கும். ஆனால் மிகுந்த வேலையின் காரணமாகவோ அல்லது பொது கழிப்பிடங்களுக்கு செல்ல பிடிக்காததன் காரணமாகவோ, அடக்கி வைப்பார்கள். இப்படி எப்போதும் சிறுநீரை அடக்கி வைத்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, நாளடைவில் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக கற்கள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

மிகுந்த சர்க்கரை வேண்டாம்

மிகுந்த சர்க்கரை வேண்டாம்

ஆய்வுகளில் ஒரு நாளைக்கு 2-ற்கும் மேற்பட்ட சர்க்கரை கலந்த சோடா பானங்களை அருந்துவோரின் சிறுநீரில் புரோட்டீன் சேர்க்கை அதிகம் இருக்கும் என்பது தெரிய வந்தது. ஒருவருக்கு சிறுநீரில் புரோட்டீன் அளவு அதிகமாக இருந்தால், சிறுநீரகங்கள் மெதுவாக அதன் பணியை செய்ய முடியாமல் உள்ளது என்று அர்த்தம். எனவே ஒரு நாளில் சர்க்கரை கலந்த சோடா பானங்களை அதிகம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வைட்டமின் மற்றும் கனிமச்சத்து குறைபாடுகள்

வைட்டமின் மற்றும் கனிமச்சத்து குறைபாடுகள்

சிறுநீரகங்களின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஊட்டச்சத்துக் குறைபாடுகளின் காரணமாகத் தான் ஏற்படுகிறது. முக்கியமாக வைட்டமின் பி6 மற்றும் மக்னீசியம் அளவை சீராக பராமரிக்க வேண்டும். ஏனென்றால் இவை தான் சிறுநீரக பிரச்சனைகள் வரும் வாய்ப்பைத் தடுக்கும் சத்துக்கள். இவை உடலில் குறைவாக இருந்தால், சிறுநீரக கோளாறுகள் விரைவில் வரும்.

அதிகமான விலங்குகளின் புரோட்டீன்

அதிகமான விலங்குகளின் புரோட்டீன்

புரோட்டீனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், குறிப்பாக மாட்டிறைச்சியின் மூலம் உடலில் புரோட்டீன் அதிகரித்தால், அதனால் சிறுநீரகங்கள் தான் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகும். மேலும் புரோட்டீன் டயட்டை அதிகம் மேற்கொண்டால், நாளடைவில் சிறுநீரகங்கள் செயலிழக்கக்கூடும்.

தூக்க குறைபாடு

தூக்க குறைபாடு

ஒருவர் நீண்ட நாட்களாக சரியான தூக்கத்தை மேற்கொள்ளமல் இருந்தால், அதனால் உடலில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகக்கூடும். குறிப்பாக சிறுநீரகங்கள் தான் முதலில் பாதிக்கப்படும். ஏனெனில் தூங்கும் போது தான், உடலானது பாதிக்கப்பட்ட சிறுநீரக செல்களை தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும். ஆனால் தூக்கம் கிடைக்காவிட்டால், பாதிக்கப்பட்ட சிறுநீரக செல்கள் மேன்மேலும் பாதிப்பிற்குள்ளாகி, நாளடைவில் கடுமையான சிறுநீரக பிரச்சனைகளுக்கு உள்ளாக்கும்.

காபி

காபி

உப்பைப் போன்றே காபியும் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரங்களில் அழுத்தத்தை அதிகம் கொடுக்கும். எனவே ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு கப் காபிக்கு மேல் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வலி நிவாரணிகள்

வலி நிவாரணிகள்

தற்போது நிறைய மக்கள் தங்களின் உடலில் ஏற்படும் சிறு வலிகளுக்கும், தாங்களாகவே வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இப்படி மருத்துவர் பரிந்துரைக்காத கண்ட வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து வந்தால், அதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரங்கள் தான் தீவிரமாக பாதிப்பிற்குள்ளாகும். எனவே முதலில் வலி நிவாரணி மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மது அருந்துதல்

மது அருந்துதல்

எப்போதாவது ஒரு டம்ளர் ஒயின் அல்லது 1 பாட்டில் பீர் அடிப்பதால், எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் யார் அதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஒருமுறை குடிக்க ஆரம்பித்தால், சுயநினைவை இழக்கும் வகையில் தான் மது அருந்துகின்றனர். சொல்லப்போனால் மது, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் டாக்ஸின்களை அதிகரிப்பதோடு, அதிக அழுத்தத்தையும் கொடுத்து, தீவிர பிரச்சனைக்கு உள்ளாக்கும். எனவே முடிந்த அளவில் மது அருந்துவதை நிறுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Common Habits That Seriously Damage Your Kidneys

Here’s a list of 10 common habits that put a lot of pressure on your kidneys and can cause serious damage over time.
Story first published: Friday, November 20, 2015, 11:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter