தூக்கம் ஏன் மிகவும் இன்றியமையாதது என்பதற்கான சில காரணங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உடல் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. உடலுக்கு போதிய ஓய்வான தூக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும். நல்ல நிம்மதியான தூக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், வாழ்நாள் முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் ஆரோக்கியமான தூக்கத்தை சரியான நேரத்தில் மேற்கொண்டு வந்தால், மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் என இரண்டுமே மேம்படும்.

ஏனெனில் தூக்கத்தின் போது உடலானது மூளையின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது. அதிலும் குழந்தைகள் மற்றும் டீனேஜ் வயதினர், நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளும் போது, அது அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

இங்கு ஏன் தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் சரியான நேரத்தில் தூங்கி எழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான இதயம்

ஆரோக்கியமான இதயம்

சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரித்து, அதுவே இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே தினமும் தவறாமல் 7-9 மணிநேரம் தூக்கத்தை மேற்கொண்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக கொள்ளலாம்.

மன அழுத்தம் குறையும்

மன அழுத்தம் குறையும்

சரியான தூக்கத்தை மேற்கொள்ளாத போது, மனம் ஒருவித அழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதோடு, மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து, அதுவே உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும்.

சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்

சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்

நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளும் போது, அது உடலின் ஆற்றலை அதிகரித்து, நம்மை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். இப்படி சுறுசுறுப்புடன் இருந்தால், உடல் மற்றும் மனம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்

ஞாபக சக்தியை அதிகரிக்கும்

தூங்கும் போது உடல் ஒய்வு எடுக்குமே தவிர, ஆழ்ந்த உறக்கத்தில் நம் மூளை அன்று நடந்த விஷயங்கள், உணர்ச்சிகள், ஒருசில நினைவுகள் போன்றவற்றை சேகரித்து வைக்கும் பணியில் ஈடுபடும். இப்படி ஈடுபடுவதால், நம் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. ஆகவே ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமானால், நல்ல நிம்மதியான தூக்கத்தை ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளுங்கள்.

எடையை குறைக்க உதவும்

எடையை குறைக்க உதவும்

ஆய்வு ஒன்றில் தினமும் இரவு நேரத்தில் 7 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்கள் உடல் பருமனால் அவஸ்தைப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே தினமும் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டு வந்தால், உடல் பருமன் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பொலிவான முகம்

பொலிவான முகம்

நிம்மதியான தூக்கத்தை தினமும் மேற்கொண்டு வருவதால், முகம் பொலிவோடு அழகாக காணப்படும். பொதுவாக உடலில் பிரச்சனைகள் இருந்தால், அது முகத்தில் நன்கு வெளிப்படும். இத்தகைய உடல் பிரச்சனைகள் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாததால் அதிகமாகும். ஆனால் தினமும் 7-8 மணிநேரம் தூக்கத்தை மேற்கொண்டால், முகத்தின் பொலிவு தானாக அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why Sleep Is So Important

Here are some reasons why sleep is so important. Want to know the importance of sleep? Take a look...
Story first published: Thursday, January 22, 2015, 18:18 [IST]