சூப்பர் மார்கெட்டுகளில் விற்கப்படும் மிகவும் விஷமிக்க சில சீன உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் பொருட்கள் அனைத்தும் விலைக் குறைவாகவும், சுவையானதாகவும் இருப்பதாக நம்மில் பலரும் நினைப்போம். ஆனால் அப்படி விலைக் குறைவில் நாவிற்கு விருந்தளிக்கும் வகையிலான சுவையில் சீன உணவுகள் கிடைப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மை பற்றி தெரியுமா? வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்!!!

நிச்சயம் யாருக்கும் தெரிந்திருக்காது. சீன உணவுகள் என்று இந்தியாவில் விற்கப்படும் உணவுகள் அனைத்தும் விஷமிக்கவை. மேலும் உலகிலேயே பூச்சிக்கொல்லி உற்பத்தியில் சீனா தான் மிகவும் பெரியது. இவர்கள் தயாரித்து இந்தியாவில் விற்கப்படும் பொருட்கள் அனைத்திலும் மாசுபட்ட இரசாயங்கள் கலந்திருக்கும். இதனால் தான் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் நம் இந்திய மக்களை ஏராளமான நோய்கள் வேகமாக தாக்குகின்றன. சீனாவில் தயாரிக்கப்பட்ட நம்பமுடியாத சில பொருட்கள்!!!

மேலும் இந்தியாவில் விற்கப்படும் அந்த சீன உணவுப் பொருட்களைப் பற்றி சொன்னால் நீங்களே அதிர்ச்சிக்குள்ளாவீர்கள். இங்கு சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் அந்த விஷமிக்க உணவுகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து இனிமேல் அவற்றை வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

இந்தியாவில் விற்கப்படும் 30% பூண்டுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. எனவே நீங்கள் வாங்கும் பூண்டு சீனாவில் இருந்து வந்துள்ளதாக இருந்தால், அவற்றை வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் சீன பூண்டுகளில் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றம் பல நச்சுமிக்க பொருட்கள் நிறைந்திருக்கும். எனவே பாக்கெட்டுகளில் விற்கப்படும் பூண்டுகள் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்.

பிளாஸ்டிக் அரிசி

பிளாஸ்டிக் அரிசி

மற்றொரு முக்கியமான உணவுப் பொருள் தான் அரிசி. சமீபத்தில் கூட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த பிளாஸ்டிக் அரிசிகளானது ரெசின் மற்றும் உருளைக்கிழங்குகளால் ஆனது. இந்த வகை அரிசியை சமைத்தால், சாதாரண அரிசிப் போன்று மென்மையாக வேகாமல், சமைத்த பின்னரும் கடினமாகவே இருக்கும். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் அரிசி அப்படி இருந்தால், உடனே அவற்றைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இந்த அரிசிகளில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும், செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும், மூளையை பாதிக்கும் ரசாயனங்கள் உள்ளது.

போலி முட்டை

போலி முட்டை

நாம் அனைவரும் கெமிக்கல் கலக்கமுடியாத ஓர் உணவுப் பொருளாக முட்டையை நினைக்கிறோம். ஆனால் அந்த முட்டையில் கூட போலியானது உள்ளது. இந்த போலி முட்டைகளானது அல்ஜினிக் அமிலம், ஜெலடின், கால்சியம் குளோரைடு, செயற்கை நிறமூட்டிகள் போன்றவை கலந்து தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த போலி முட்டையின் ஓடு கால்சியம் கார்பனேட் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த வகை முட்டையை உட்கொண்டால், ஞாபக மறதி மற்றும் இதர மூளை பாதிப்புக்கள் ஏற்படக்கூடும்.

உப்பு

உப்பு

பல வருடங்களாக, தரமற்ற போலி உப்புக்கள் விற்கப்பட்டு வருகிறது. இந்த உப்புக்களை உட்கொண்டால், ஹைப்போ தைராய்டு, மலட்டுத்தன்மை மற்றும் வேறு பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். எனவே லோக்கல் பிராண்ட் உப்புக்களை வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அவை சீன பொருட்களாக கூட இருக்கலாம்.

போலியான பச்சை பட்டாணிகள்

போலியான பச்சை பட்டாணிகள்

தற்போது பல சூப்பர் மார்கெட்டுகளில் பாக்கெட்டுகளில் பச்சை பட்டாணிகள் விற்கப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் சீனாவில் இருந்து போலி பச்சை பட்டாணிகள் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இப்படி தயாரிக்கப்படும் போலி பச்சை பட்டாணிகளில் சோடியம் மெட்டாபைசல்பேட் போன்ற பல விஷமிக்க மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே பாக்கெட்டுகளில் விற்கப்படும் பச்சை பட்டாணிகளை வாங்கி சாப்பிடாதீர்கள்.

மீன்

மீன்

சூப்பர் மார்கெட்டுகளில் பாக்கெட் அல்லது டின்களில் விற்கப்படும் மீன்களில் ஹார்மோன்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் மிகவும் மோசமான ஆன்டி-பயாடிக்குகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே எப்போதும் டின்களில் விற்கப்படும் மீன்கள் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அவை ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

பதப்படுத்தப்பட்ட காளான்கள்

பதப்படுத்தப்பட்ட காளான்கள்

கடைகளில் பாக்கெட்டில் நன்கு பளிச்சென்று வெள்ளையாக காளான்கள் விற்பதைப் பார்த்து, அதை வாங்கி அடிக்கடி சமைத்தும் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இனிமேல் அதை வாங்காதீர்கள். ஏனெனில் இவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சில சீன நிறுவனங்களானது பதப்படுத்தப்பட்ட காளானை ஆர்கானிக் என்று கூறி விற்கின்றனர். இந்த காளான்களை உட்கொண்டால், வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படக்கூடியவாறான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இவற்றைத் தவிர்த்திடுங்கள்.

கருப்பு மற்றும் வெள்ளை மிளகுத் தூள்

கருப்பு மற்றும் வெள்ளை மிளகுத் தூள்

இந்த உணவுப் பொருட்களை சூப்பர் மார்கெட்டுகளில் அதிகம் கண்டிருப்பீர்கள். இவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மசாலா பொருட்களாகும். இதில் கருப்பு மிளகுத் தூளில் நிறத்திற்காக களிமண்ணையும், வெள்ளை நிற மிளகுத் தூளில் மாவையும் சேர்க்கிறார்கள் என்பது தெரியுமா? எனவே உஷாராக இருங்கள்.

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸ்

பாட்டில்களில் விற்கப்படும் 30% ஆப்பிள் ஜூஸ் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது தான். மேலும் இதில் பதப்படுத்தும் ரசாயனங்களைத் தவிர, ஏராளமான தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளது. எனவே ஆப்பிள் ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக, ஆப்பிளை வாங்கி கடித்து சாப்பிடுங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, பற்களின் அழகும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read in English: 9 Poisonous
English summary

Be Aware! Poisonous Foods Made in China Available In Your Market

Avoid these poisonous Chinese food which are imported in your market. These toxic Chinese foods cause many health issues including cancer. Read on to know more.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter