ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..

Budhaditya Rajyog 2026: ஜோதிடத்தில் புத்திகாரகன் என்று அழைக்கப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களின் இளவரசனாகவும் கருதப்படுகிறார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் அதிகபட்சமாக ஒரு ராசியில் 21 நாட்கள் வரை இருப்பார். தற்போது புதன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசிக்குள் ஏப்ரல் 30 ஆம் தேதி தான் புதன் நுழைந்தார்.

Budhaditya Rajyog In Taurus On 15 May 2026 List Of Lucky Zodiac Signs

இந்நிலையில் வருகிற மே 15 ஆம் தேதி புதன் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இதே நாளில் தான் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் இந்த ரிஷப ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது செல்வம், வெற்றி மற்றும் முன்னேற்றத்தைத் தருவதாக கூறப்படுகிறது.

சூரியன் மற்றும் புதன் ஒன்றிணைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் இந்த ராஜயோகமானது மே 29 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர் என்பதை இப்போது காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டில் சூரியன், புதன் ஒன்றிணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும் நிதி நிலையில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் சில முடிவுகள் எதிர்காலத்தில் எதிர்பாராத நன்மைகளைத் தரும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன், புதன் ஒன்றிணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தலைமைத்துவ திறன்கள் மேம்படும். இக்காலத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டால், நல்ல பலன்களைப் பெறலாம்.

மிதுனம்

மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் சூரியன், புதன் ஒன்றிணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இது இவர்களின் நிதி நிலையை வலுப்படுத்தும்.

கன்னி

கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன், புதன் ஒன்றிணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தகவல் தொடர்பு திறன்கள் மேம்படும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு இக்காலத்தில் ஜாக்பாட் அடிக்கும். எடுக்கும் முடிவுகளை நன்கு யோசித்து, அனுபவசாலிகளுடன் ஆலோசனை செய்த பின் எடுத்தால், நல்ல நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, May 7, 2026, 14:33 [IST]
Desktop Bottom Promotion