Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்..
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது!
Sun Transit In Krithikai Nakshatra On 11 May 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். மேலும் இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.

அந்த வகையில் சூரியன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் மே 11 ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். சொந்த நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால், அதன் செல்வாக்கும், சக்தியும் பலமடங்கு அதிகரிக்கும்.
அதுவும் நவகிரகங்களில் சூரியன் தந்தை, தன்னம்பிக்கை, மரியாதை, தலைமைத்துவ திறன்கள் ஆகியவற்றின் காரணி என்பதால், இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெறவுள்ளனர். குறிப்பாக தொழிலில் முன்னேற்றம், நல்ல நிதி ஆதாயங்கள் போன்றவை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்டகாலமாக சந்தித்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். புதிய நட்புகள் கிடைக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் நல்ல ஆதாயமும் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
சிம்மம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும். தெளிவாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். கடின உழைப்பு பணியிடத்தில் பாராட்டப்படும். புதிய தொழில் வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். காதல் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வேலையைத் தேடிக் கொண்டிருந்தால், இந்த பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த பயணங்களால் நல்ல ஆதாயமும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் நிலை வலுவடையும். காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவுகளில் நல்ல புரிதல் உருவாகும். முக்கியமாக சூரியனின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



