Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்!
உங்களுக்கு தினமும் சூயிங்கம் மெல்லும் பழக்கம் இருக்கிறதா? இனிமேல் வேண்டாம்!
குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை சூயிங்கம் மெல்லுவது என்பது பொதுவான வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் 10 - 25 வயதுக்குட்பட்டவர்கள் தான் சூயிங்கம்மை அதிகமாக மெல்லுகிறார்கள். இதனால் என்ன கேடு விலையைப் போகிறது என்று கேட்கிறீர்களா?
தினமும் பல மணிநேரம் சூயிங் கம் மென்ற பெண்ணின் அவல நிலை!!!
ஒன்றல்ல, இரண்டல்ல நிறைய வகையில் சூயிங்கம்மை மெல்லுவதால் கேடு விளைகிறது. பல் சொத்தை, கருவில் வளரும் சிசுவின் வளர்ச்சி, தலை மற்றும் காதுவலி, உடல்பருமன், தாடையில் பாதிப்பு, வளர்சிதை மாற்றம் என நிறைய பாதிப்புகள் சூயிங்கம் மெல்லுவதால் ஏற்படுகின்றன....

பற்களில் ஏற்படும் பாதிப்புகள்
சூயிங்கம்மில் இருக்கும் செயற்கை சர்க்கரை பற்களில் சொத்தை ஏற்பட காரணியாக இருக்கிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் அமிலத்தன்மை உள்ள ஃப்ளவர் மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்படும் இரசாயனம் போன்றவை பற்களை பாதிப்படைய வைக்கிறது.

தலைவலி
நீங்களே கூட இதை பல தடவை உணர்ந்திருக்கலாம். தொடர்ந்து சூயிங்கம் உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைவலி பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். இது தாடை பகுதியில் அதிகமாக அழுத்தம் ஏற்படுத்துகிறது இதனால் தான் தலைவலி ஏற்படுகிறது.

வாயுத்தொல்லை
சூயிங்கம் மெல்லும் போது அதிகளவில் உங்களுக்கு தெரியாமலேயே காற்று உடலுக்குள் செல்கிறது. இதனால் IBS எனப்படும் எரிச்சல் கொண்ட குடல் நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் குமட்டல், வாயுத்தொல்லை போன்றவை ஏற்பட இதுவும் கூட ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது.

தாடை பாதிப்பு
அதிகளவில் சூயிங்கம் மெல்லுவதால் தாடை தான் அதிகமாக பாதிப்படைகிறது. நாள்பட இது தாடை எலும்புகளில் தேய்மானம் ஏற்படவும் காரணமாகிறது. இதனால் காதுவலி, தலைவலி ஏற்படும் அபாயம் இருக்கிறது.

உடல் பருமன்
அதிகமாக சூயிங்கம் மெல்லுவதால், உடலில் பசி அதிகரிக்க செய்கிறது இதனால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

வளர்ச்சிதை மாற்றம்
அதிக நேரம் சூயிங்கம் மெல்லுவதால், வாயில் எச்சில் அதிகமாக சுரக்கிறது. இது வளர்ச்சிதை மாற்றங்களை குறைக்கிறது. இது உடலுக்கு மிகவும் தீங்கானது.

கருவை பாதிக்கிறது
கருத்தரித்த பெண்கள் அதிகம் சூயிங்கம் மெல்லுவதால் கருவில் வளரும் சிசுவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறதாம். எனவே, கருத்தரித்து உள்ள பெண்கள் சூயிங்கம் மெல்லுவதை தவிர்க்கவும்.



Click it and Unblock the Notifications
